வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

எனது சிக்கனம் கட்டுரை | Sikkanam Katturai in Tamil

Updated On: July 31, 2023 12:29 PM
Follow Us:
Sikkanam Katturai in Tamil
---Advertisement---
Advertisement

சிக்கனம் கட்டுரை | Sikkanam Semippu Katturai in Tamil

சிக்கனம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய இன்றியமையாத ஒன்று. ஒருவருடைய சிக்கனம் வீட்டை மட்டும் பாதுகாப்பதோடு இல்லாமல் நாட்டையும் பாதுகாக்கிறது. நாம் சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்று கொண்டால் தான் எதிர்கால வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நாம் இன்றைய கட்டுரை பதிவில் சிக்கனத்தின் அவசியம் பற்றி படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

சிறு சேமிப்பின் அவசியம் கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
சிக்கன வாழ்வே முன்னேற்றம் தரும் 
சேமிப்பு பழக்கம் 
சேமிப்பதற்கான வழிகள் 
முடிவுரை 

முன்னுரை:

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. “சிறுக கட்டி பெருக வாழ்” என்பது முதுமொழி. நாம் இளம் வயதிலிருந்து சிறுக சிறுக சேமிக்கும் பழக்கம் என்றைக்காவது ஒரு நாள் நமக்கு பயன்படும். இளம் வயதில் அதிகமாக உழைப்பதற்கு உடம்பு ஒத்துப்போகும். ஆனால் முதிர்ச்சியான காலத்தில் நாம் நினைக்கும் அளவிற்கு நம்முடைய உடல் ஒத்து வராது. ஆகையால் நம்முடைய சேமிப்பு கண்டிப்பாக நமக்கு கைகொடுக்கும்.

சிக்கன வாழ்வே முன்னேற்றம் தரும்:

“இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் பேச்சு” என்றார் ஒளவையார்.

அதாவது பணம் இல்லாதவனுடைய வாழ்க்கையானது மிகவும் பரிதாபமானது. நாம் எப்போதும் அடுத்தவர்களை நம்பியோ, மற்றவர்களிடம் கடன் வாங்குதல் போன்றவை மனதில் பல வலிகளை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது சிக்கனம். ஒவ்வொரு மனிதரும் ஊதாரி தனத்தை தகர்ந்தெறிந்து சேமிக்கும் பழக்கத்தையும், உழைப்பினையும் கைவிடாமல் இருக்க வேண்டும்.

சேமிப்பு பழக்கம்:

நம்முடைய வருவாய்க்கு ஏற்ப செலவுகளை மேற்கொள்ள வேண்டும். காந்தியடிகள் பல் துலக்கும் வேப்பங்குச்சியை கூட சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார்கள். நம்முடைய சேமிப்பு பணமானது நமக்கு வட்டியுடன் கிடைக்கிறது. நம்முடைய இன்றைய சேமிப்பு நாட்டு நலத்திட்டங்களுக்கு, திருமண செலவுகளுக்கு, உடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.

இன்றைக்கு ஒரு மனிதன் உயிர் காக்கும் மருத்துவம் பணமாக மாறிவிட்டது. உணவும், தண்ணீரும் இப்போது வியாபாரமாகி விட்டது. கல்வி பணம் புரளும் தொழிலாக மாறிவிட்டது. நாம் எந்த ஒரு தவறும் செய்யாத போதும் நீதி கிடைக்கவும் பணம் தான் பெரிதாக இருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்து கொள்ள முடியாத இந்த உலகில் சேமிக்கும் பழக்கத்தினை கற்றுக்கொள்ள வேண்டும்.

மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

சேமிப்பதற்கான வழிகள்:

அன்று வாழ்ந்தவர்கள் சேமிப்பதற்காக உண்டியல் முறையை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளது. பள்ளிகளில் சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக “சஞ்சாயிகா எனும் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. நாம் சேமிப்பதற்கு அஞ்சல் அலுவலகத்தில் பல சேமிப்பு திட்டங்கள், சிறு சேமிப்பு நிலையங்கள் போன்றவை இப்போது வந்துவிட்டன. அவைகளில் நாம் இப்போது பணத்தை சேமித்துக்கொள்ளலாம்.

முடிவுரை:

சிறந்த பண்புகளுள் ஒன்றாக கருதப்படுவது சிக்கன பண்பு. சேமிப்பு மனதை எப்போதும் தூய்மைப்படுத்தும். மனிதருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் எழும் போது தான் சேமிப்பின் அருமையும் தெரிகிறது. ஆரம்ப காலத்தில் சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொண்டால் நம்மால் நான்கு பேருக்கு இயன்ற உதவிகளை செய்ய முடியும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now