வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செவிலியர் பணி கட்டுரை

Updated On: December 23, 2025 5:54 PM
Follow Us:
Nursing Work Essay in tamil 
---Advertisement---
Advertisement

Nursing Work Essay in tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செவிலியர் பணி கட்டுரை பற்றி விவரித்துள்ளோம். பொதுவாக இவ்வுலகில் உள்ள பணிகளில் மிகவும் சிறப்பான பணி மருத்துவ துறை பணி என்று கூறலாம். மருத்துவ துறையில் செவிலியர் பணி என்பது மிகவும் முக்கியமான பணி ஆகும். செவிலியர் என்பவர் மருத்துவர்களுக்கு உதவியாக நோயாளிகளை பார்த்து கொள்பவராக இருக்கிறார்கள். நோயாளி மருத்துவமனையில் சேர்த்து உடல்நிலை சரியாகும் வரை அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து தருவார்கள்.

மருத்துவர் ஓன்று அல்லது இரண்டு முறை தான் நோயாளிகளை வந்து பார்த்து அதற்கான மருந்துகளை கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். அதன் பிறகு, நாள் முழுவதையும் நோயாளியை அக்கறையுடன் கவனித்து கொள்பவர்கள் செவிலியர்கள். இப்படி மருத்துவ துறையில் உன்னதமான பணியை மேற்கொள்ளும் செவிலியர்களின் பெருமையை போற்றும் வகையில், மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. அப்படி முக்கியமான பணியாக திகழும் செவிலியர் பணியை கட்டுரை வடிவில் பார்ப்போம்.

சர்வதேச செவிலியர் தின வாழ்த்துக்கள் 2025

செவிலியர் பணி கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • செவிலியர் பணியின் வரலாறு
  • செவிலியரின் கடமைகள்
  • செவிலியர் பணியின் முக்கியத்துவம்
  • முடிவுரை

முன்னுரை:

செவிலியர் என்பவர் மருத்துவர்களின் சிகிச்சை பணியில் அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும், நோயாளிகளுக்கு உதவியாகவும், பாதுகாவலராகும் செயல்படுபவர்கள். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தொழில் செவிலியர் பணி. யார் எவர் என தெரியாமல் அவர்களின் ஆரோக்கியத்திற்காக இரவும் பகலும் அக்கறையுடன் நோயாளிகளை கவனித்து கொள்பவர்கள். இப்பணி மனித நேய பணியாகவும் உள்ளது.

செவிலியர் பணியின் வரலாறு:

புளோரன்ஸ் நைட்டிங்கேள் என்ற பெண்மணியே செவிலியர் பணி தோன்றுவதற்கு வரலாறு என்றே கூறலாம். அதாவது, நவீன செவிலியர் பணியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் புளோரன்ஸ் நைட்டிங்கேள் பெண் ஆவர். செவிலியர் என்ற அமைப்பினை உருவாக்கியவர்.

1854-ஆம் ஆண்டு கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போரில் ஈடுபட்டனர். அப்ப்டோது கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இறக்கும் தருவாயில் பலர் இருந்தனர். இவர்களை ராணுவ மருத்துமனையில் வைத்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 38 செவிலியருடன் சென்று இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார் பிளாரன்ஸ்.

இதனால், உயிர் மீண்ட ராணுவ வீரர்கள், தங்களைக் காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என்று புளோரன்ஸ் நைட்டிங்கேளை போற்றினார்கள். மேலும், கைவிளக்கு ஒன்று வைத்துக்கொண்டு சிகிச்சை பார்த்ததால் அவர் “கைவிளக்கு ஏந்திய காரிகை” என்றும் அழைக்கப்பட்டார்.

மேலும் லண்டனில் உள்ள புனித தோமஸ் மருத்துவமனையில் செவிலியருக்கான பயிற்சி கல்லூரியினையும் 1860 ஆம் ஆண்டில் நிறுவி ஆயிரக்கணக்கானவர்களை செவிலியராக்கினார்.

அவரை கெளரவிக்கும் விதமாகவும், செவிலியர் பணியை கௌரவிக்கும் விதமாகவும் அவர் பிறந்த தினமான மே 12 ஆம் நாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதுவே செவிலியர் பணியின் வரலாறு/செவிலியர் தின வரலாறு ஆகும்.

செவிலியரின் கடமைகள்:

செவிலியரின் முக்கிய கடமையாக மதிப்பீடு செய்தல், அவதானித்தல், நம்பிக்கை அளிக்கும் வண்ணம் பேசுதல், நோயாளியின் மருத்துவ வரலாறு, மற்றும் தற்போதைய விவரங்கள் மற்றும் நோய்சார் அறிகுறிகளை பதிவு செய்தல் போன்றவை இருக்கிறது.

பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக நோயாளர்களை தயார்படுத்தல், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை நிர்வகித்தல், பக்க விளைவுகள், எதிர் விளைவுகள் தொடர்பாக நோயாளிகளை கண்காணித்தல் போன்றவை அடங்கும்.

மேலும், ருத்துவ உபகரணங்களை கையாளுதல், சிகிச்சை மற்றும் பராமரிப்புத் திட்டங்கள் குறித்து நோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கூறுதல்.

செவிலியர் பணியின் முக்கியத்துவம்:

செவிலியர் பணி என்பது மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் மிகவும் முக்கியமான பனி ஆகும். நோயாளி, மருத்துவர் மற்றும் நோயாளியின் குடும்பம் ஆகியோர்களுக்கு இடையில் ஒரு பாலமாக திகழ்கிறார்கள்.

ஒரு தாய் தான் பிரசவித்த குழந்தையை தொடுவதற்கு முதல் அக்குழந்தையை தூக்கி அதற்கான பணிகளை செய்பவர்கள் செவிலியர்களே ஆவர்.

மருத்துவர் கூறிய மருந்துகளை சரியான முறையில் நோயாளிகளுக்கு அளித்தால், நோயாளிகளின் பிரச்சனையை உணர்ந்து அதனை சரிசெய்தல் அல்லது மருத்துவரிடம் கூறுதல். நோயாளின் குடும்பத்திற்கு நோயின் நிலையை பற்றி கூறுவது போன்ற என முக்கிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

செவிலியர்கள் இன்னொரு தாய்:

உலகில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் இன்றைய தினம் அனைவரும் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏத்தி, சொந்த பிரச்சனைகள் ஏதும் இருந்தால் அவை இல்லாமல் நோயாளியிடம் நடந்து கொள்வோம். நோயாளிடளிடம் மரியாதையாக இருப்பது, அவர்களின் உடல் நலத்தில் அக்கறையாக இருப்போம் போன்றவை உறுதிமொழிகளாக எடுத்து கொள்வார்கள். ஒவ்வொரு மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு செவிலியர்களும் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் இல்லையென்றால் நம்முடைய உடலானது ஆரோக்கியத்தில் மேன்மை அடைய முடியாது.

செவிலியர் பற்றிய திருக்குறள்

முடிவுரை:

செவிலியர் பணியை பற்றி நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். மருத்துவர், செவிலியர், மருந்து இவை மூன்றும் இருந்தால் நோய் முழுவதுமாக சரியாகும். எனவே, செவிலியர் பணி அவசியமான ஒன்றாக இருக்கிறது. முக்கியமாக, கொரோனா காலகட்டத்தில் செவிலியர்கள் ஆற்றிய சேவை பற்றி சொல்லி தெரிவதில்லை. அந்த அளவிற்கு அவர்களின் பணி சிறப்பு வாய்ந்தது ஆகும். இப்படி உன்னத சேவையினை நமக்கு வழங்கும் இவர்களை மதித்து நன்றி உணர்வினையும் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now