தமிழ் புத்தாண்டு கட்டுரை | Tamil Puthandu Katturai

Tamil Puthandu Katturai

சித்திரைப் புத்தாண்டு கட்டுரை | Sithirai Puthandu Katturai

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு உள்ள ஆரவார வரவேற்பு சித்திரை மாதத்திற்கு இல்லை என்று ஒரு சிலர் கூறினாலும், அது உண்மை இல்லை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுமே தனி சிறப்புடையது, அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது. சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க என்ற சொல்லுக்கு ஏற்ப இந்த மாதம் மக்களுக்கு பெரும் சந்தோஷத்தினை தரும் மாதமாக உள்ளது. அந்த வகையில் தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாக இருக்கும் தமிழ் புத்தாண்டு கட்டுரையை படித்தறியலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
தமிழ்ப்புத்தாண்டு வரலாறு
பாரம்பரியம்
புதிய முயற்சிகள்
சித்திரையின் சிறப்பு
முடிவுரை

முன்னுரை:

  • கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற வார்த்தைக்கு ஏற்ப தமிழ் மக்கள் எல்லோரும் சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறார்கள். காலநிலை மற்றும் பருவநிலை மாறுதல்களால் புதுவருடம் பிறப்பதை தான் புத்தாண்டு என கொண்டாடுகிறோம். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழ்ப்புத்தாண்டு வரலாறு:

  • Tamil Puthandu Katturai in Tamil: தமிழ் மக்கள் எல்லோரும் இயற்கையை கடவுளாக மதித்து நடந்தவர்கள். அதனால் தான் தமிழ் புத்தாண்டை பருவ நிலைக்கு ஏற்ப கொண்டாடி வருகின்றனர். ஜோதிடத்தில் இருக்கும் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் தமிழ் புத்தாண்டு பிறந்தது. இதை இலக்கிய நூலான நெடுநல்வாடை
  • “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” என்று குறிப்பிடுகிறது.
  • ஆங்கில புத்தாண்டை உலகத்தில் உள்ள எல்லோரும் கொண்டாடினாலும், தமிழர்களின் தமிழ் புத்தாண்டு எப்பொழுதும் தனித்துவமானது.

பாரம்பரியம்:

  • ஆங்கில புத்தாண்டை எல்லோரும் இரவில் தான் கொண்டாடுவார்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தான் கொண்டாடுவார்கள், ஆனால் தமிழ் புத்தாண்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி மகிழ்வார்கள்.
  • இல்லத்தில் உள்ளவர்கள் நீராடி புத்தாடை அணிந்து, ஆலயங்களுக்கு சென்று கடவுளை பிரார்த்திப்பார்கள். நல்ல நேரத்தில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த நன்னாளில் மக்கள் மகிழ்ச்சியை மட்டுமல்ல இனிப்புகளையும் பரிமாறி கொள்வார்கள்.

புதிய முயற்சிகள்: 

  • தமிழ் புத்தாண்டு அன்று தொழில் தொடங்கினால் தொழிலில் அபார வளர்ச்சி கிடைக்கும். இந்நன்னாளில் கல்வி கற்பவர்கள், விவசாயிகள், வேலை செய்து கொண்டிருப்பவர்கள் புதிய முயற்சிகளை தொடங்கினால் அதில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

சித்திரையின் சிறப்பு:

  • சித்திரையன்று மதிய உணவு சிறப்பாக இருக்கும். சாம்பார், கூட்டு, பொரியல் பாயாசம், வடை, அப்பளம் என்று உணவு சற்று தடபுடலாக இருக்கும். இந்த காலத்தில் தான் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பிப்பார்கள்.
  • நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாகும். இது போன்ற பல சிறப்புகளை பெற்றது நம்முடைய சித்திரை மாதம். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இந்த மாதம் சித்திரை மாதம் என்று அழைக்கப்படுகிறது.

முடிவுரை:

  • தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தான் நம்முடைய பண்டிகைகள் இருக்கிறது. பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் வர வேண்டும் என்பதற்காக தான். எனவே மக்கள் எல்லோரும் பழைய வருடத்தில் நிகழ்ந்த துன்பங்கள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக வாழ்வோமாக.

அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai