சுதந்திர போராட்ட தியாகிகள் கட்டுரை

தியாகிகள் கட்டுரை

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பதிவில் நம் நாட்டிற்காக பாடுபட்டு சுதந்திரம் பெற்று கொடுத்த இந்திய போராட்டத்தில் முக்கியப் பங்குவகித்த நம் தேசத்தலைவர்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். நமது  நாட்டின் 76-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நன்நாளில் பல்வேறு இன்னல்கள், பல போராட்டங்கள் இவற்றுக்கு இடையில் நம் நாட்டிற்காக சுதந்திரத்தை வாங்கிக்கொடுத்த நமது தேசத்தலைவர்களை நினைவு கூறும் வகையில் அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

தேசத்தந்தை என அழைக்கப்படுபவர் யார்:

போராட்ட தியாகிகள் கட்டுரை

நமது நாட்டின் இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மகாத்மா காந்தி அவர்கள். அதனால் தான் சுதந்திர இந்தியாவின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறார் மகாத்மா காந்தி. அவர்கள் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் மூலம் நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர். இதனால் தான் காந்தியடிகள் உலக நாடுகளிலும் முன்னுதாரணமாக திகழ்கிறார். காந்தியடிகள் பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள்,லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் பெரிதும் கவரப்பட்டார். மகாத்மா காந்தி அவர்கள் குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

உறுதியாக பின்பற்றிய கொள்கைகள்:

வாரத்திற்கு ஒருநாள் மௌனவிரதம், கதர் உடை, சைவ உணவு, பொய் கூறாமை, அகிம்சை.

காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய கட்டுரை:

சுபாஷ் சந்திரபோஸ்

நமது நாட்டின் இந்திய விடுதலை போராட்டத்தை தனி வழியில் நடத்திச் சென்றவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். தனது 25-வது  வயதில் லண்டனில் படிப்பை முடித்து திரும்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை சித்தரஞ்சன் தாஸ் அவர்கள் நிறுவிய தேசியக் கல்லூரிக்கு நேதாஜியை தலைவராக நியமித்தார். சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் லண்டனில் படித்தபோது மேல்நாட்டு விடுதலைப் போர் பற்றிய வரலாறுகளையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் அறிந்திருந்த நேதாஜி அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விடுதலை உணர்வை கூறும் உரைகளை ஆற்றினார். நேதாஜி அவர்கள் இந்திய ராணுவத்தை உருவாக்குவதற்கு இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஓன்று திரட்டினார். அப்படைகளின் மூலம் இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினார்.

Mahakavi Bharathiyar in Tamil:

Subramaniya Bharathiyar

தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் தன்னிகரற்று விளங்குபவர் பாரதியார். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாக திகழ்பவர். தம்முடைய எழுத்துக்கள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இவரது கவித்திறனை எட்டப்ப நாயக்கர் வியந்து பாராட்டி “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். பாரதியாரின் படைப்புகள் 1949 ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன் முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியமாகும். உ.வே. சாமிநாதையர், பால கங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், மகான் அரவிந்தர், விவேகானந்தரின் மனைவியான சகோதிரி நிவேதிதா தேவி ஆகியோரை போற்றி பின்பற்றியவர்.

பாரதியின் பன்முகங்கள்:

கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்கள் கொண்டவர் மகாகவி சுப்ரமணிய பாரதி.

பாஞ்சாலங்குறிச்சி வீரன் பெயர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுப்புற பாடல்களும், கூத்துக்களும் இயற்றப்பட்டன. நா.வானமாமலை ஆய்வாளர் அவர்கள் இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டுப்புற பாடல்களை தொகுத்துள்ளார். கட்டபொம்மனின் தானியாக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் சுந்தரலிங்கத்தின் பொறுப்பில் தான் இருந்தது. ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கு இடையே நடந்த போரின் போது சுந்தரலிங்கம் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக நின்றார். பாஞ்சாலங்குறிச்சி வீரன் என்று அழைக்கப்பட்டார் சுந்தரலிங்கம்.

நமது தேசியக் கொடி கட்டுரை

 

சுந்தரலிங்கம் தனது முறைப் பெண்ணான வடிவுடன் 1799 செப்டெம்பர் 8 ஆம் தேதி ஆடுமேய்ப்பவர்களை போல் வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்கு பகுதிக்கு போனார்கள். அங்கு நடந்த தீ விபத்தில் சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப்  போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.

தியாகி சுப்பிரமணிய சிவா:

தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த பேச்சாளர் “ஞானபாநு” என்ற இதழை நடத்தியவர். சுப்பிரமணிய சிவா அவர்கள் அரசியலையும் ஆன்மீகத்தையும் விடுதலைப் போராட்டத்தில் இணைத்து போராடியவர். சுப்பிரமணிய சிவா அவர்கள் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி  பாரதியார் ஆகியோருடன் இணைந்து விடுதலைப்  போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். இவர் தேசிங்குராஜன், சிவாஜி உள்ளிட்ட நாடக நூல்களையும் வேதாந்த ரகஸ்யம், மோட்ச சாதனை ரகசியம் உள்ளிட்ட ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார்.

வ.உ.சிதம்பரனார்:

வ.உ.சிதம்பரனார்

வ.உ.சிதம்பரனார் 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16- ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப்  பதிவு செய்தார். சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. வ.உ.சி. அவர்கள் விடுதலை போராட்ட உணர்வை மக்களிடையே தூண்ட நினைத்தார். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

தூத்துக்குடியில் கோரல் நூற்பாலை என்று ஒரு தொழிற்சாலை இருந்தது. அங்கு தொழிலார்கள் நாள்முழுவதும் வேலை செய்தாலும் அவர்களுக்கு கூலி குறைவாக கொடுத்தனர். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. அங்குள்ள தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்கினர். வ.உ.சி. அவர்கள் தொழிலாளர்களின் அவல  நிலையை பார்த்து மிகவும் மனம் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்களை வேலையை நிறுத்தும் படி ஆணையிட்டார். வ.உ.சி. யுடன் சுப்ரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தார்.

பால கங்காதர திலகரின் சீரடான வ.உ.சிதம்பரனார் “தென்னாட்டுத் திலகர்” என்று போற்றப்படுகிறார்.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு கட்டுரை

திருப்பூர் குமரன் சுதந்திர போராட்டம்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தவர் குமரன். தமிழகம் முழுவதும் 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் தீவிரமடைந்தது. அப்போது தான், திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்றம் மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்திய தேசியக் கொடியினை கையில் ஏந்தி, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடந்த போராட்ட அணிவகுப்பின் போது தொண்டர் படைக்கு தலைமை ஏற்று முன் நடந்தார். அங்கு நடந்த போராட்டத்தின் போது ஆங்கிலேய காவலர்களால் தலையில் தடியால் தாக்கப்பட்டு, தலையிலிருந்து ரத்தம் வழிய கீழே விழுந்த போதும், கையில் ஏந்திய தேசிய கொடியை தரையில் விழாமல் காத்தார். பின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றவர் அங்கேயே உயிர் துறந்தார். அன்றிலிருந்து திருப்பூரில் நடந்த போரில் உயிர்நீத்ததால் திருப்பூர் குமரன் என்றும் தேசியக் கொடியை ஏந்தியபடி வீரமரணம் அடைந்ததால் கொடிகாத்தகுமரன் என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Katturai