பயன் தரும் பறவைகள் கட்டுரை..!

Advertisement

பறவைகள் பற்றிய கட்டுரை

பொதுவாக இந்த உலகில் மனிதனாகிய நம்முடன் இணைந்து வாழும் அனைத்து உயிரினங்களின் மீதும் நாம் மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருப்போம். அதேபோல் தான் நாம் அனைவருக்குமே பறவைகள் என்றாலும் அதிக அளவு பிடிக்கும். அவ்வாறு நமக்கு பிடித்த பறவைகளில் ஒரு சிலவற்றை நாம் நமது வீடுகளில் வைத்து அதற்கு தேவையான அனைத்தையும் அளித்து வளர்ப்போம்.

ஒருசிலவற்றை நாம் தூரத்தில் நின்று ரசிப்போம். அப்படி நாம் ரசித்து பார்த்தும் மற்றும் ரசித்து ரசித்து வளர்க்கும் பறவைகளை பற்றிய ஒரு கட்டுரையை தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பய பெறுங்கள்.

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • பறவைகளின் பண்புகள்
  • பறவைகளின் வாழ்க்கை முறை
  • பறவைகளின் முக்கியத்துவம்
  • முடிவுரை

முன்னுரை:

நாம் வாழும் இந்த உலகம் சீராக இயங்குவதற்கு இதில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. அதேபோல் தான் பறவைகளின் பங்களிப்பும் இந்த உலகின் இயக்கத்திற்கு இன்றியமையாது ஒன்று ஆகும்.

பல்வேறு நிறங்களிலும், பல்வேறு அமைப்புகளிலும் காணப்படக்கூடிய பறவைகளைப் பற்றிய சில தகவல்களை இந்த கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

பறவைகளின் பண்புகள்:

இந்த உலகில் தோராயமாக 9672 பறவை இனங்கள் காணப்படுவதாக பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. அவ்வாறாக உள்ள அனைத்து பறவைகளும் பல்வேறு பண்புகளை தங்களுக்குள் கொண்டுள்ளன.

அந்த வகையில் முதுகெலும்பு உடையதாகவும், இறகுகள் கொண்ட இரு இறக்கைகள் கொண்டதாகவும், நீர் போகாத ஓடுகளை கொண்ட முட்டைகளை இடுவதனவாகவும், இரு கால்கள் கொண்டனவாகவும் பொதுவாக எல்லா பறவைகளும் காணப்படுகின்றன.

மேலும் சில பறவைகள் உயரப் பறக்கக்கூடியனவாகவும், வேகமாக ஓடக்கூடியனவாகவும், நீரில் நீந்த கூடியதாகவும், சில பறவைகள் பறக்க இயலாதவையாகவும், இன்னும் சில பாலூட்டக்கூடியனவாகவும் உள்ளன.

இந்த பறவை இனங்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களுக்குள் பல்வேறு பண்பு கூறுகளை கொண்டுள்ளன.

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரை

பறவைகளின் வாழ்க்கை முறை:

உலகில் காணப்படும் ஒவ்வொரு பறவை இனமும் தங்களுடைய குஞ்சுகளை பராமரிக்கக் கூடியனபாகவே உள்ளன. இப்படிப்பட்ட பறவை இனங்கள் தங்களது வாழ்விடத்தை தாங்களாகவே உருவாக்கக்கூடிய திறன் கொண்டவையாக காணப்படும்.

அந்த வகையில் தூக்கணாங்குருவிகள் அமைக்கும் கூடுகள் மிகவும் அருமையானவையாக காணப்படுகின்றன. மேலும் கிளி, மைனா, ஆந்தை போன்றபறவைகள் மரங்களில் பொந்துகளில் வாழக்கூடியனவாகவும் காணப்படுகின்றன.

இவ்வாறாக ஒவ்வொரு பறவைகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றன.

பறவைகளின் முக்கியத்துவம்:

பொதுவாக பறவைகளின் நடமாட்டம் காணப்படும் இடங்களில் மாத்திரமே மனிதனால் நிலைத்து வாழ முடியும் என்று பல ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. அதாவது பறவைகளின் அழகினையும், அவற்றின் அசைவுகளினையும் கண்டு ரசிப்பது மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை குறைப்பதற்கு உதவியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் விவசாயத்துக்கு தீங்கு விளைவிக்க கூடிய சிறிய புழு, பூச்சிகளை மைனா, சிட்டுக்குருவி, செண்பகம் போன்ற பறவைகள் உண்பதாலும், காகம் போன்ற பறவைகள் சூழலில் உள்ள கழிவுகளை உண்பதாலும், ஊனுண்ணி பறவைகள் இறந்த உயிரினங்களை உண்பதாலும் இந்த சூழல் மாசு தடுக்கப்படுகிறது. இதன் மூலம் மனிதனுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

முடிவுரை:

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் பல்வேறு செயற்பாடுகளின் மூலம் பறவைகள் இனம் அழிந்து கொண்டு வருவதனை காணலாம். அதாவது ஓர் குறிப்பிட்ட இடத்திலிருந்து பறவைகள் இனம் முற்றிலுமாக வெளியேறுகின்றது என்றல் அது மனித இனத்தின் அழிவுப் பாதைக்கான அறிகுறியாகும்.

எனவே மனிதர்களாகிய நாம் நம்மை சுற்றியுள்ள பறவைகளுக்கும் அல்லது மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் நாம் செய்யாமல் இருப்பதே மனிதர்களாகிய நாம் அனைவரின் கடமை ஆகும்.

ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement