பாட்டு வேறு பெயர்கள் | Other Names of Pattu in Tamil

Advertisement

Pattu Meaning in Tamil | பாட்டு வேறு சொல் 

பாட்டு என்ற சொல்லின் அர்த்தம் யாருக்கு தான் தெரியாது, எல்லாருக்கும் இதன் அர்த்தம் என்னவென்று தெரிந்திருக்கும் ஆனால் அதன் வேறு பெயர்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. நீங்கள் பாட்டு வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள தான் இந்த பதிவாகும். பொதுவாக பாட்டு என்பது இசையுடன் இணைந்து பேசும் வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தப்படும் கருத்து. அதற்கு இன்னொரு பெயர் கவிதை, இப்படி நிறைய பெயர்களில் நாம் பாட்டை விவரிக்கலாம். 

நாம் இதுவரை பாட்டு என்றே உச்சரித்து வந்துகொண்டிருப்போம், இனிமேல் ஒருமுறை கீழ் உள்ளவாறு சொல்லி பாருங்கள்.

பாட்டு வகைகள் 

  • தாலாட்டுப்பாட்டு
  • விடுகதைப்பாட்டு
  • ஏற்றப்பாட்டு
  • வள்ளைப்பாட்டு
  • கண்ணன்பாட்டு
  • நடவுப்பாட்டு
  • ஒப்பாரிப்பாட்டு
  • பரிகாசப்பாட்டு
  • கும்மிப்பாட்டு
  • ஏசல்பாட்டு
  • வேல்பாட்டு
  • இசைப்பாட்டு என நிறைய விதமான பாடல்கள் உள்ளன.

பாடல்கள் பலவகை ஒவ்வொரு பாடல்களும் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிப்பதே சிறந்த பாடலாகும். பாடல்களில் இலக்கிய பாடல்களே சிறந்து விளங்குகின்றது.

பாட்டு வேறு சொல் 

பாட்டு என்ற சொல்லை நாம் நிறைய விதமாக கூறலாம். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது.

இதை விவரிக்கும் பழைய சொற்களில் பா, படு, செய்யுள் ஆகியவை அடங்கும். செய்யுள் என்பது இந்த வகையான அனைத்தையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் கூட்டுச் சொல்லாகும். யாப்பு மொழியில் “ஒரு இசைக்கருவியை உருவாக்குதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

  • கவி
  • கவிதை
  • செய்யுள்
  • தூக்கு
  • பா
  • யாப்பு
  • பாடல்

இவையே பாட்டு வேறு பெயர்களாகும்.

பாட்டு வேறு பெயர்கள் with Example 

  • அவள் பாடிய பாட்டு இன்னுமும் என் காதில் ஒலிக்கின்றது.
  • கண்ணாடியை நீ உடைததால், இன்று நீ அம்மாவிடம் நல்லா பாட்டு வாங்க போகிறாய்.
தொடர்புடைய பதிவுகள் 
வடிவம் வேறு சொல்
பாதுகாப்பு வேறு சொல்
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

Advertisement