பாரதியார் பற்றிய சிறப்புகள் – Bharathiyar sirappugal in tamil
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்
“இனி ஒரு விதி செய்வோம்” என பாடிய மகாகவி பாரதியார் பற்றிய சிறப்புகள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். பாரதி எனும் புரட்சி கவிஞன் தமிழையும் மக்களையும் அன்போடு நேசித்த பெரும் காதலன். அவர் கொண்ட தமிழ் பற்று அளவிட முடியாதது. இந்த பாரதியார் பற்றிய குறிப்புகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பாரதியார் சிறப்புகள்:
பெயர்: பாரதியார்
இயற்பெயர்: சுப்பிரமணியம்
பிறப்பு: 11.12.1882
இறப்பு: 11.09.1921
பெற்றோர்: சின்னசாமி ஐயர் – இலக்குமி அம்மாள்
மனைவி: செல்லம்மாள்
பாரதி என்னும் பட்டம்: 11 வயதில் கவிதைப் புலமை காரணமாக எட்டயபுரம் சமஸ்தானம் கொடுத்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் இயற்றிய நூல்கள்
பாரதியார் ஆற்றிய பணி:
1902: எட்டயபுரம் சமஸ்தானம் தமிழாசிரியர் பணி.
1904: சேதுபதி உயர்நிலைப் பள்ளி (மதுரை)
பாரதியார் சிறப்பு பெயர்கள்:
- மகாகவி
- மக்கள் கவிஞர்
- வரககவி
- தேசியக்கவி
- விடுதலைக்கவி
- அமரக்கவி
- முன்னறி புலவன்
- தமிழ்க்கவி
- உலககவி
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- பாட்டுக்கொரு புலவன் பாரதி
- நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
- காடு கமழும் கற்பூரச் சொற்கோ
- புதுக்கவிதையின் முன்னோடி
- பைந்தமிழ் தேர்பாகன்
- சிந்துக்குத் தந்தை
பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை?
பாரதியார் கவிதை நூல்கள்
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாப்பா பாட்டு
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
- பாரததேவியின் திருத்தசாங்கம்
- காட்சி (வசன கவிதை)
- புதிய ஆத்திச்சூடி
பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள்
- ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம்)
- தராசு
- சந்திரிகையின் கதை
- மாதர்
- கலைகள்
பாரதியார் சிறுகதைகள்
- ஸ்வர்ண குமாரி
- சின்ன சங்கரன் கதை
- ஆறில் ஒரு பங்கு
- பூலோக ரம்பை
- திண்டிம சாஸ்திரி
- கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)
- நவந்திரக் கதைகள்
பாரதியார் நாடக நூல்
- ஜெகசித்திரம்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் கட்டுரை
பாடல்கள்:
- சுகந்தரப்பாடல்கள், தேசப்பாடல்கள்
- பக்திப்பாடல்கள், சமூகப்பாடல்கள்
- புதிய ஆத்திசூடி, பாப்பா பாடல்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |