நான் விரும்பும் தலைவர் பெரியார் கட்டுரை | பெரியார் வரலாறு கட்டுரை
Periyar Essay in Tamil: “உன் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுளே தேவையில்லை” என்ற முத்தான பொன்மொழிகளை இந்த நாட்டுக்கு தந்து சென்றவர் தந்தை பெரியார். சாதி, மத வேறுபாட்டையும், பெண்கள் அடிமைத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் வேரோடு அளிக்க வேண்டும் என்று போராடிய பல தேசத் தலைவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார். பெரியார் அவர்களின் கருத்துக்களையும், நாட்டு பற்றையும் கட்டுரை வடிவில் இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
பெரியார் கட்டுரை | Thanthai Periyar Katturai in Tamil:
குறிப்பு சட்டகம்
முன்னுரை |
இளமை |
தேசப்பற்று |
சமூகப் பற்று |
பெண் உரிமை |
முடிவுரை |
முன்னுரை – பெரியார் கட்டுரை:
- தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்படும் தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டிற்காக செய்த நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளை நீக்குவதற்காகவும், சாதி, இன வேற்றுமைகள் களைவதற்காகவும் அரும்பாடுபட்டவர்.
இளமை – பெரியார் கட்டுரை – Thanthai Periyar Tamil:
- 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் வெங்கட நாயக்கர், தாயின் பெயர் சின்னதாயம்மாள் ஆவார். இவருடைய ஊர் ஈரோடு.
- இவருக்கு 1 சகோதரனும், 2 சகோதரிகளும் உள்ளனர். சகோதரியின் பெயர் கண்ணம்மா, பொன்னுத்தாயி. சகோதரனின் பெயர் கிருஷ்ணசாமி என்பவர். இவரது இயற்பெயர் ஈ.வெ. ராமசாமி.
- திண்ணை பள்ளியில் இவரது கல்வியை பயின்றார் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இவர் படித்துள்ளார்.
- 19 வயதில் நாகம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தேசப்பற்று – நான் விரும்பும் பெரியார் கட்டுரை:
- இளம் வயதிலேயே பகுத்தறிவு அதிகம் உள்ள பெரியார் அவர்கள் மத எதிர்ப்பாளராக மாறுவதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் இருந்த மத வேறுபாடு தான்.
- “மற்ற நாடுகளில் மக்களை ஒன்றுப்படுத்தவே கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள், மதம் இருக்கின்றன” என்ற பொன்மொழியின் மூலம் தனது மத எதிர்ப்பை காட்டினார்.
- மத எதிர்ப்பை காட்டுவதற்காக அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து உணவு உண்டார்.
சமூகப் பற்று – நான் விரும்பும் பெரியார் கட்டுரை:
- இவர் அரசியல்வாதியாக இருந்த போதிலும் மக்களின் மூட நம்பிக்கைகளை கலைப்பதற்காகவே போராடினர், அதனால் மக்களின் பேர் ஆதரவை பெற்றார்.
- நாட்டு பற்று அதிகம் உள்ள பெரியார் அவர்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காவும் பல போராட்டங்களில் கலந்து கொண்டார். மது ஒழிப்பு, லஞ்சம், ஊழல், சமத்துவம், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் போன்றவற்றை தமிழ் நாட்டில் இல்லாமையாக்க வேண்டும் என்றும் அனைவரும் சமமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்டார்.
- சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்துவதற்காக திராவிடர் கழகம் மற்றும் மூட நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து நீக்குவதற்காக சுய மரியாதை இயக்கம் போன்ற இயக்கங்களை தோற்றுவித்தவர்.
பெண் உரிமை – நான் விரும்பும் பெரியார் கட்டுரை:
- பெண்களின் உரிமைக்காக போராடிய பல தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள். பெண் அடிமைத்தனம், பெண் கல்வி போன்றவற்றிற்காக பெரிதும் பாடுபட்டவர். ஒழுக்கம் என்பது ஆண், பெண் இருவருக்கும் சமம் என்று இந்த உலகிற்கு புரிய வைத்தவர்.
பெரியார் பொன்மொழிகள் |
முடிவுரை – பெரியார் கட்டுரை – நான் விரும்பும் தலைவர் பெரியார் கட்டுரை:
- மற்ற நாடுகளை விட என்னுடைய நாடு பின்னிலையில் இருப்பதற்கான முக்கிய காரணம் சாதி, மத பிரிவினை மற்றும் அறியாமை தான். இந்த அறியாமை எமது நாட்டில் இல்லாமல் இருந்தால் எனது நாடு பெரிய வளர்ச்சியை பெரும் என்றார்.
முட்டாள் தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது, அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.
- பகுத்தறிவின் சிற்பி என போற்றப்படும் பெரியார் அவர்கள் 1973-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். இவர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இவருடைய கொள்கைகள் இன்னும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
விதியை நம்பி! மதியை இழக்காதே!
பாரதியார் கட்டுரை |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |