மகாத்மா காந்தி கட்டுரை
நண்பர்களே வணக்கம் இன்று நம்முடைய தேச தலைவர்களில் மிகவும் முக்கியமான ஒருவரான மகாத்மா காந்தியை பற்றிய சில வரிகளை பார்க்க போகிறோம். நாம் இன்று இவ்வளவு சுதந்திரமாக இருக்க பல வீரர்களில் மூச்சு கலந்து உள்ளது அதில் இன்று மகாத்மா காந்தியை பற்றி சில வரிகளை பற்றி தெரிந்துகொள்வோம்..!
முன்னுரை:
இந்தியாவின் தேச பிதா என்று இவரை அன்பாக அழைப்பார்கள். இவரின் தியாகங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. காந்தி உலகின் தலைசிறந்த தலைவர் ஆவார். இவரை அகிம்சையின் அடையாளம் என்றும் அழைப்பார்கள்.
காந்தியின் பிறப்பு:
காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஆகும். இவர் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் போர் பந்தர் எனும் இடத்தில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி மொழியாகும்.
கல்வி:
காந்தி அடிகள் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் கல்வி படிப்பை முடித்தார் அதன் பின் படிப்பினை முடித்த காந்தியடிகள் இந்தியாவில் மும்பையில் வழக்கறிகராக பணியாற்றினார்.
1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பணியை மேற்கொள்ள பயணம் மேற்கொண்டார்.
காந்தி விடுதலை போராட்ட நிகழ்வுகள்:
இந்திய விடுதலை போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் போராட்ட வீரர் ஆவார். இவர் அந்நிய பொருட்களை புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரக போராட்டம், ஒத்துழையாண்மை இயக்கம், வரிகொடா இயக்கம், ஆங்கிலேயரை வெளியேற்ற நடத்திய போராட்டம் என அறவழியில் முன்னெடுத்து நடத்தினார்,
இதனால் இவரை இந்தியாவின் தந்தை என அழைக்கப்படுகிறார், அகிம்சை என்னும் வன்முறையற்ற மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்டார்.
காந்தியின் கொள்கை:
காந்தியடிகள், பகவத்கீதை, சமயக்கொள்கைகள் லியே டால்ஸ் டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டார். சத்தியம் அகிம்சை ஆகிய கொள்கைகளை கடைபிடித்தார்.
காந்தியடிகள் பழங்கள், கடலை ஆட்டு பால், போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். மேலை நாட்டு உடைகளை தவிர்த்து இந்திய நாட்டின் காதி ஆடையை அணிந்தார்,
காந்தியின் இறப்பு:
நம்முடைய மாபெரும் தலைவரின் உயிரானது துப்பாக்கி குண்டில் பறிபோனது, 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 நாள் அவருடைய உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது, அவருடைய இழப்பு என்பது இந்தியாவிற்கு பெரும் இழப்பாகும்,
காந்தியை சுட்டுகொன்னவர் நாது ராம் கோட்சே என்பவர் நம்முடைய தலைவரை சுட்டுக்கொன்றார்,
இவர் பிறந்த நாள் அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம்.
முடிவுரை:
அகிம்சை என்றால் காந்தி, காந்தி என்றால் அகிம்சை என்று இந்திய மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் மத்தியிலும் ஒரு முன் உதாரணமாக இன்று வரை இருந்து வருகிறார்.
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |