
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகள் கட்டுரை
இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாமல் வாழ்வதே இல்லை, வீட்டிற்கு செலவு செய்ய யோசிக்கும் பலர் மது வாங்குவதற்கு யோசிப்பதே இல்லை. மது உணர்வுகளை வெளிப்படுத்தும் பொருள் அல்ல, உடலை அழிக்கும் பொருள். மது அருந்துவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள், ஆனால் மதுவால் ஏற்படும் பின் விளைவுகளை யாரும் அறிவதே இல்லை. மதுவால் ஏற்படும் விளைவுகளை பற்றி இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
மது ஒழிப்பின் அவசியம் |
மதுவால் ஏற்படும் விளைவுகள் |
மது பற்றிய விழிப்புணர்வு |
முடிவுரை |
முன்னுரை:
- மது அதை குடிப்பவர்களுக்கும் மட்டும் இன்றி அவர்களை சார்ந்து இருப்பவர்களையும் சேர்ந்து பாதிக்கிறது. இந்த நாட்டில் மதுவை குடித்து இறக்கும் உயிர்கள் பல்லாயிரங்களை எட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சிறிது நேரத்திற்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என்பதற்காக தங்களின் வாழ்க்கையை இன்று உள்ள பல இளைஞர்கள் இழந்து வருகின்றனர்.
மது ஒழிப்பின் அவசியம்:
- Madhu Olippu Speech in Tamil: நம் முன்னோர்கள் மது குடிப்பவர்களை அடியோடு வெறுத்து வந்தார்கள், ஆனால் இப்போது மது பழக்கம் நாகரிக பண்புகளில் ஒன்றாக உள்ளது. மதுவிற்கு அடியமையானவர்கள் பெரும்பாலும் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் போன்றவர்களாக தான் இருக்கிறார்கள்.
- இது அவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் தீமைகளை தரக்கூடியவையாக இருக்கிறது. நாட்டில் எப்படி சாதி ஒழிப்பு அவசியமோ அதே போன்று மது ஒழிப்பும் அவசியமான ஒன்று.
- முன்பு நாட்டின் வளர்ச்சி கல்வியில் இருந்தது, இப்போது பார்களில் உள்ளது. நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு மது ஒழிப்பு அவசியம்.
மதுவால் ஏற்படும் விளைவுகள்:
- மனிதனை குடிக்கும் மது கட்டுரை: மது குடிப்பதால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது, புற்றுநோய், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்படுகிறது.
- அடிக்கடி மது அருந்துபவர்களுக்கு மனநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடன் வாங்கியாவது மது குடிப்பவர்கள் இன்றைய சமூகத்தில் ஏராளமானவர்கள் உள்ளவர்கள்.
மது பற்றிய விழிப்புணர்வு:
- Madhu Patri Katturai in Tamil: இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நம்மால் முடிந்தவரை கூட்டங்கள் அல்லது கருத்தரங்குகள் அமைத்து மதுவால் ஏற்படும் தீமைகளையும், விளைவுகளையும் எடுத்துரைக்க வேண்டும்.
- மது ஒழிப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றாலும் சிறிது சிறிதாக மது குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
முடிவுரை:
- மது ஒழிப்பு கட்டுரை: இன்றைய சமுதாயத்தில் அதிக அளவிற்கு இருக்கும் தீய குணங்கள், வன்முறைகள், தவறான செயல்கள் போன்றவற்றை அடியோடு அழிப்பதற்கு மது ஒழிப்பு மிகவும் முக்கியமான ஒன்று.
- மதுவால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பதற்கு மது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மதுவை ஒழிப்பது இந்த சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Tamil Katturai |