மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகங்கள்..!

Rainwater Harvesting in Tamil

மழை நீர் சேகரிப்பு வாசகங்கள் – Rainwater Harvesting in Tamil

உலகின் அறிய வரப்பிரசாதமான நீரைப் பற்றியும் , அவ்வாறு கிடைக்கும் நீரை எவ்வாறு சேகரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவில் மழைநீர் சேகரிப்பு வாசகங்களை சிலவற்றை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க..

மழை நீர் சேகரிப்பு வாசகங்கள் – Malai Neer Segaripu Vasagam:

சேகரிப்போம் ! சேகரிப்போம் !
மழைநீரை சேகரிப்போம் !

மழையால் ஆவது உலகு
அதற்கு மரம் வைத்து பழகு.

பாலைவனமானாலும் மழைநீர் சேமித்தால்
சோலைவனம் ஆகும்.

வான் தரும் மழை – அதை வீணாக்குவது
உன் பிழை.

இன்றைய தாகத்துக்கு நீர் தரும் பூமி !
நாளைய தேவைக்கு மழைநீரை சேமி !

மழை நீர் சேமிப்பு, மனைக்கிங்கே அவசியமே !

காப்போம் ! காப்போம் !
மண்வளம் காப்போம் !

துளி துளி மழைத்துளி
அது நம் உயிர்த்துளி..

வான் தரும் மழை – அதை
வீணாக்குவது நம் பிழை..

மழை நீர்த் தொட்டி
நம் வாழ்வுக்கு வட்டி..

மழையால் ஆவது உலகு
ஆகையால் மரம் வளர்த்து பழகு..

நீரின்றி பசுமை இல்லை
பசுமை இன்றி நீர் இல்லை..

நீர் வளம் பெருக்குவோம்
நீர் வளம் காப்போம்..

மரம் வளர்ப்போம்
மனம் குளிர்வோம்..

உயிர்களைக் காக்க
தண்ணீரைக் காப்போம்..

இன்று சேமிக்கப்படும் தண்ணீர்
நாளை துடைக்கப்படும் கண்ணீர்..

அவசியம் அவசியம்
நீர் பாதுகாப்பு அவசியம்..

சேகரிப்போம் சேகரிப்போம்
மழைநீரை சேகரிப்போம்..

மழை நீரை பற்றிய கவிதை:-

மழை நீர்
நிலத்தடி நீர் குறைவதாலே நமக்கு
மரத்தடி நிழலும் கிட்டாது.
நீரின்றி வாடும் நிலமும் உயிரினமும்
வளமின்றிக் கெட்டே விடும்.
வானம் தந்திடும் மழைநீரைச் சேமிக்கும்
ஞானம் அனைவருக்கும் தேவை.
விவசாயத்திற்கு மழைநீர் இல்லையெனில் என்றும்
பெருங்காயம் ஏற்படும் நமக்கு.
காலத்தே வந்திடும் மழைநீரைச் சேமித்து
ஞாலத்தைக் காத்திடுவோம் நாமும்.

மழைநீர்:

நீ இந்த மண்ணில் வழிந்தோடுவதை வேடிக்கை பார்த்து ரசித்து கைகொட்டி சிரித்த அந்த நாட்களை எண்ணி தற்போது தனியே கண்ணீர் வடிக்கிறேன் தாகத்தோடு தேடும் என் தொண்டை குழியை நனைக்க வழி இல்லாமல்! தெருதெருவாய் ஒரு பைத்தியம் போல!

தண்ணீரை
தாத்தா ஆற்றில் பார்த்தார் !
அப்பா கிணற்றில் பார்த்தார் !
நாம் குழாயில் பார்க்கிறோம் !

எனவே, இனிவரும் எதிர்காலத்தில் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இளைய தலைமுறையாகிய நீங்கள் மரங்களை நட்டு மண்வளம் காத்து மழையைப் பெற்று வளம் பெற வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்..

தொடர்புடைய பதிவுகள்
மழைநீர் சேகரிப்பு கட்டுரை
நீர் மேலாண்மை கட்டுரை
நீரின்றி அமையாது உலகு கட்டுரை
உலக தண்ணீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?

 

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai