Latchiyam Katturai in Tamil
இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தை பற்றி அச்சப்பட தேவையில்லை. பிரபல விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், மேடம் கியூரி போல நீங்களும் சாதிக்கலாம். ஒவ்வொருவரும் லட்சியத்தை பெரிதாக வைத்துக் கொண்டால் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் என ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் கூறியுள்ளார். ஆகவே தங்களது வாழ்க்கையில் லட்சியத்தை பெரிதாக வையுங்கள். சரி இந்த பதிவில் லட்சியம் பற்றிய கட்டுரை ஒன்று படித்தறியலாம் வாங்க.
லட்சியம் பற்றிய கட்டுரை:
நம் எல்லோர் வாழ்க்கையிலும் லட்சியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நம்மில் வெகு சிலர் மட்டுமே தங்கள் லட்சியத்தை முழுமையாக அடைகின்றனர். காரணம் என்ன? நம்மில் பலருக்கு நம்முடைய லட்சியங்களில் தெளிவில்லை! பலர் பெயரளவில் லட்சியம் வைத்திருப்போம்! ஆனால் அதை அடைய முயற்சி இருக்காது. முயற்சி என்பது என்ன? நீருக்குள் மூழ்கிய அவன் எத்தகைய பிரயத்தனப்பட்டு வெளியே வர முயற்சிப்பான்? அத்தகைய முயற்சி இருந்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்று விவேகானந்தர் கூறுகிறார்.
உண்மையில் நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபடுகிறோம். லட்சியத்தை அடைவதற்கான முதல் செயல் இலட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதையை வகுத்தல் அதாவது சரியான திட்டம் தீட்டுவது, பிறகு முறையான அந்த திட்டத்திற்கு பலன் கிடைக்கும் அளவிற்கு கடுமையாக உழைப்பது.
உண்மையில் சிலர் நன்றாகவே திட்டம் தீட்டுவார்கள். ஆனால் செயல்படுவதில்லை. காரணம் தினப்படி பிரச்சனைகளாலும் அவர்களை அழுத்திக் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளின் நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும், திட்டத்தை செயல்படும் காலத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றுவிடும்.
மனிதனாக பிறந்த அனைவரும் தங்கள் வாழ்வினை எப்படியானதாக வாழ வேண்டும் என்பதற்காக இலட்சியம் ஒன்றினை கொண்டிருப்பர். அந்த வகையில் நீங்களும் உங்களுக்கென்று ஒரு இலட்சியத்தை வைத்து கொள்ளுங்கள் இதற்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்.
- 20 வயதுக்கு முன்பாகவே வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை வகுத்து கொள்ள வேண்டும்.
- அறிவை வளர்த்துக் கொள்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுங்கள்.
- அந்த லட்சியத்தை அடைய கடினமாக உழையுங்கள்.
- பிரச்னைகளை மனம் தளராமல் நேர்கொண்டு வெற்றியை வசப்படுத்துங்கள்.
இதற்கு கல்வி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். நான் நிச்சயம் வெல்வேன் என்று உங்களுக்குள் ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த அக்னி சிறகுகள் நிச்சயம் உங்களை டாக்டராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, ஆசிரியராக உருவாக்கும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |