வைக்கம் போராட்டம் பற்றிய கட்டுரை உங்களுக்காக…

Advertisement

வைக்கம் போராட்டம்

நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் சரித்திரத்தில் இடம் பிடிக்காது. குறிப்பிட்ட சில நிகழ்வுகள் தான் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அனைவரும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அதனை பற்றி மட்டுமே பேசுவார்கள் காரணம் அந்த நிகழ்வு ஏற்படுத்தி சென்ற தாக்கம். அது காலங்கள் மாறினாலும் மாறாத ஒன்றாக இருக்கும். நாம் வாழ்நாளில் நமக்கான நிதியை பெற போராட வேண்டும். அப்படி நாம் போராடும் அனைத்தும் சரித்திரத்தில் இடம் பிடிப்பதும் இல்லை, நிறைவேறுவதும் இல்லை. சில போராட்டங்கள் மட்டும் நமது நீதியை அடைய உறுதுணையாக இருக்கும். அத்தகைய ஒரு போராட்டம் தான் வைக்கம் போராட்டம். இன்றைய பதிவில் வைக்கம் போராட்டத்தினை பற்றிய கட்டுரையை பார்க்கலாம் வாருங்கள்.

வைக்கம் போராட்டம் பற்றிய கட்டுரை:

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
வைக்கம் போராட்டம்
போராட்டத்தின் பின்னணி
வைக்கம் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள்
வைக்கம் போராட்டத்தின் வெற்றி
முடிவுரை

முன்னுரை:

கேரளா சென்ற நூற்றாண்டில் வைதீகர்களின் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் இருந்தது. கேரளாவின் சில சமூக மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார். அதுமட்டும் அல்லாமல் அவர்களது உரிமைகளும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்கு வாழக்கூடிய மக்களது உரிமைகளை மீட்டெடுக்க வைக்கம் போராட்டம்நடைபெற்றது. இந்த வைக்கம் போராட்டம் பற்றிய இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

வைக்கம் போராட்டம்:

கேரள மாநிலத்தில் வைக்கம் எனும் இடத்தில் இருந்த மகாதேவர் கோவிலினைச் சுற்றியுள்ள பாதையில் தாழ்ந்த சாதியினர் நடமாடக்கூடாது என்ற பழக்கம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த தீண்டாமையை எதிர்த்து 1924 முதல் அமைதி போராட்டங்கள் நடைபெற்றது. அந்த உரிமைக்கான போராட்டத்தையே வைக்கம் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.

போராட்டத்தின் பின்னணி:

கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் அமைந்திருந்தது மகாதேவர் ஆலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்க தடை பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையிலும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த  காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த டி.கே.மாதவன் என்பவர் முதன் முதலில் இதற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.  டி.கே.மாதவனை தொடர்ந்து பல தலைவர்கள் இந்த தீண்டாமைக்கு எதிராக போராடினார்கள்.

வைக்கம் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள்:

தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் முதல் படியை, காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான டி.கே.மாதவன் ஆரம்பித்துவைத்தார். அதன் பின் பல்வேறு தலைவர்வர்கள் இந்த போராட்டத்தை வழிநடத்தினார்.

அவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் மகாத்மா காந்தி, தந்தை பெரியார், இராஜகோபாலச்சாரி, கிருஷ்ணசாமி ஐயர், அய்யாமுத்து மற்றும் கேளப்பன் போன்றவர்கள்.

வைக்கம் போராட்டத்தின் வெற்றி:

வைக்கம் போராட்டத்தின் விளைவாக 1925 ஆம் ஆண்டு அரசாங்கம் தீண்டாமையை ஒழித்து புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின் விளைவாக வைக்கம் கிராமத்தின் மகாதேவர் ஆலயத்தினைச் சுற்றியுள்ள வீதிகளில் அனைத்து மக்களும் சாதி பாகுபாடு இன்றி சுதந்திரமாக  வாய்ப்பு கிடைத்ததோடு, 1936 ஆம் ஆண்டு முதல் கோயிலினுள் அனைவரும் பிரவேசிப்பதற்கான நுழைவுப் பிரகடனமும் வெளியிட்டபட்டது. இவை வைக்கம் போராட்டத்தின் வெற்றியாகவே கொண்டாடப்பட்டது.

முடிவுரை:

நாம் வாழும் இந்திய நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த சாதி கட்டமைப்புகள் இறுக்கமாக இருப்பதனை காணலாம். நாமும் அதற்கு எதிராக குரல் கொடுப்போம் வாருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement