வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாணவர்களுக்காக 79-வது சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை

Updated On: August 12, 2025 3:36 PM
Follow Us:
79th independence day speech in tamil
---Advertisement---
Advertisement

79th Independents Day Speech in Tamil 

இந்தியா பிரிட்டிஸ் ஆட்சிகளிடமிருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் விடுதலை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 நாள் அன்று சுதந்திர தினமாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திரம் பெற போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. இத்தகைய சுதந்திர தினத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி என பல போட்டிகள் நடத்தப்படும். இந்த பதிவில் இவை 79-வது சுதந்திர தினத்தை பற்றி பேச்சு போட்டி கட்டுரையை தொகுத்தோள்ளோம்.

79-வது சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை:

இந்த சபையில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து எனது உரையை தொடங்குகிறேன். 

சுதந்திரம் என்றாலே நாம் நினைப்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் நாம் இல்லாமல் நமது எண்ணங்களை, செயலாக செயல்படுத்துவது தான். நம்முடைய நாடும் இப்படி தான். ஆயிரக்கணக்கானவர்களின் சுயநலமற்ற தியாகமே இந்தியா ஒரு சுதந்திர நாடு உருவாகுவதற்கு காரணமாக இருந்தது. 

1608-ம் ஆண்டு நம்முடைய நாட்டில் வணிகம் செய்ய கால் பதித்தவர்கள் தான் இந்தியர்கள். இப்படி வணிகத்திற்காக வந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாக நம்முடைய நாட்டையே அவர்களின் ஆட்சிக்குள் அடக்கிவிட்டார்கள். நம்முடைய செல்வத்தையும், வளத்தையும் சுருட்டி கொண்டு நம்மை அடிமை படுத்தினார்கள். 

சுதந்திர தின கவிதைகள்

 

அகிம்சை வழியில் சென்றவர் தான் நம்முடைய காந்தி. அகிம்சை என்பது பலவீனம் அல்லது பலம் என்பதை மக்களிடையே உணர்த்தினார்கள். அகிம்சை என்ற சக்தியை கொண்டு அனைவரையும் ஒற்றுமை படுத்தினார்கள். 

அகிம்சை, அறவளிப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் என சுதந்திரத்தை பற்றி அமைதி வழியில் மக்களை சந்தித்து பேச தொடங்கினார்கள் காந்தி. ஆனாலும் ஆங்கிலேயர்கள் சிறைச்சாலை அமைத்து அவர்களுக்கு அடங்காதவர்களை துன்புறுத்த ஆரம்பித்தார்கள். சுபாஷ் சந்திர போஸ், ஜவர்ஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், பகத் சிங், வ, உ,. சிதம்பரனார், பாரதியார், சுப்பிரமணிய சிவா, கொடி காத்த குமரன், பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லால் பகதூர் சாஸ்திரி, அன்னி பெசன்ட், சரோஜினி நாயுடு இன்னும் பல தலைவர்களின் தியாகமும், நாட்டுப்பற்று தான் ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தது.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நள்ளிரவில் தான் இந்திய விடுதலை சட்டத்தின் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு முதல் தலைவராக ஜவர்ஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்றார். டெல்லி செங்கோட்டையில் மூவர்ண இந்திய தேசிய கொடி ஆனது ஏற்றப்பட்டது. 

நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த தலைவர்களை பற்றி சிந்திக்க வேண்டும். உண்மையான நாட்டுப்பற்றுடன் நமது நாட்டை உயர்த்துவதே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இந்த எண்ணமானது நம்முடைய ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி எனது உரையை முடிக்கிறேன். ஜெய்ஹிந்த்!

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now