அண்ணல் அம்பேத்கர் கட்டுரை | Ambedkar Katturai in Tamil

Advertisement

அம்பேத்கர் கட்டுரை தமிழ் | Ambedkar Speech in Tamil

அம்பேத்கர் பற்றிய கட்டுரை:- விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர். சுதந்திரத்திற்கு பிறகு மன்னராட்சியை விட மக்களாட்சி தான் சிறந்தது என்று கூறியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். சட்டங்களை வரையறுத்தால் தான் நாடு முன்னேற்ற பாதையினை நோக்கி நகரும் என்று தலைவர்கள் சிந்தித்தனர், ஆனால் அதை நிறைவேற்றி காட்டியவர் அம்பேத்கர் அவர்கள். மேலும் அம்பேத்கரின் பல நலப்பணிகளை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
பிறப்பு
கல்வி
சாதனைகள்
சட்டமேதை
நாட்டு நலப்பணிகள்
முடிவுரை

முன்னுரை:

  • Ambedkar Speech in Tamil: கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர் எனும் மந்திரத்தை வார்த்தையாக சொல்லாமல் தனது வாழ்க்கையில் நிரூபித்து காட்டியவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள். மக்களின் அறியாமையையும், மூட நம்பிக்கையையும் அவர்கள் மனதில் இருந்து வேரறுக்க வேண்டும் என்று போராடிய ஒரு மாமனிதன். இவர் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து சாதனை படைத்தவர்.

பிறப்பு:

  • Ambedkar Essay in Tamil: மத்திய பிரதேசத்தில் மாவ் எனும் இடத்தில் ஏப்ரல் 14-ம் தேதி 1891-ம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி சக்பால், தாயார் பெயர் பீமாபாய். இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி. இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

கல்வி:

  • Ambedkar Katturai in Tamil: பள்ளியில் இவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். தாழ்த்தப்ட்ட பிரிவினை சார்ந்த பிள்ளைகள் பள்ளியில் நீர் அருந்த கூடாது என்றும், மற்ற மாணவர்களுடன் சரி சமமாக ஒரே இருக்கையில் அமர கூடாது என்றும் பல விதமான மூட நம்பிக்கைகள் இருந்தது.
  • இவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று அம்பேத்கார் எடுத்த ஆயுதம் தான் கல்வி. கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் முறையாக பயன்படுத்தி கொண்டு தனது உயர்கல்வியை வெளிநாட்டில் சென்று படித்தார்.
ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை

சாதனைகள்:

  • Ambedkar in Tamil Katturai: அன்று கல்வி கற்க கூடாது என்று சொல்லியவர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டுமாறு தனது படிப்பால் இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். பொருளியல், அரசியல், சட்டம், மெய்யியல், தத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடினார்.
  • வால், கத்தி போன்றவற்றால் செய்யும் போராட்டத்தை விட கல்வி மூலம் செய்யும் போராட்டம் மிகவும் சிறந்தது என உணர்த்தி காட்டியவர். இங்கிலாந்தில் இவருக்கு பாரிஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது. அமெரிக்கா சென்று கல்வி கற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர் அம்பேத்கர் அவர்கள்.

சட்டமேதை:

  • டாக்டர் அம்பேத்கர் கட்டுரைகள்: ஒரு நாடு முன்னேற்ற பாதையில் வளர வேண்டும் என்றால், அந்த நாட்டில் சட்டங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார் பீமாராவ் ராம்ஜி அவர்கள். நாட்டில் கல்வி, சுதந்திரம், பெண்களுக்கான உரிமைகள் இவற்றை எல்லாம் இந்த சமூகத்தில் அனைவரும் பெற வேண்டும் என்று மிக சிறந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார்.
  • இவரின் சட்டங்கள் யாவும் ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனைத்தும் விலக வேண்டும் என்றும் இருந்தது. மேலும் இவர் மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள் களைய வேண்டும் என்று அரும்பாடு பட்டார்.

இதையும் கிளிக் செய்யுங்கள்–> அம்பேத்கர் தத்துவம் | Ambedkar Thathuvam in Tamil

நாட்டு நலப்பணிகள்:

  • அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள்: நாட்டில் இருக்கும் பிரிவினையையும், வேற்றுமைகளையும் தகர்க்க முயற்சி செய்தார். Reserve Bank Of India உருவாக காரணமாக இருந்தவர். பெண்களின் நலனுக்காக பலவித சட்டங்களை இயற்றி அதை நடைமுறைபடுத்தினர்.

முடிவுரை:

  • Ambedkar Speech in Tamil: வாழும் காலத்தில் சொல்லிய வாக்குகள் அனைத்தையும் நடைமுறைபடுத்தியவர். இவருடைய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் யாவும் இன்று உள்ள மக்களுக்கு உதாரணமாக திகழ்கிறது.
  • நாட்டிற்கு பல பணிகளை செய்த அம்பேத்கர் அவர்கள் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறங்கி கொண்டிருக்கும் போதே டெல்லியில் அவருடைய உயிரை நீத்தார்.
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

 

இது போன்று பயனுள்ள பலவகையான கட்டுரைகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Tamil Katturai 
Advertisement