அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் கட்டுரை | Annaiyum Pithavum Munari Deivam Tamil
நாம் இந்த உலகில் வருவதற்கு முன்னரே நம்மை நேசித்த ஒரு இதயம் என்று சொன்னால் நம்முடைய பெற்றோர்கள் தான். நாம் வயிற்றில் இருக்கும் போதே நமக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். நாம் என தான் தவறு செய்தாலும் நம்மை வெறுக்காமல் முழுமையாக நேசித்தவர்கள் என்று சொன்னால் நம்முடைய பெற்றோர்கள் தான். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது உண்மையாக நேசிக்க கூடியவர்கள். நமக்கு எவ்வளவு வயதானாலும் நம்மை குழந்தைகளாகவே பார்க்க கூடியவர்கள். பெண் பிள்ளைகள் தன்னுடைய அப்பாவை தான் ஹீரோவாக வைத்திருப்பார்கள். அப்பாவிடம் தான் எல்லா விஷயத்தையும் ஷேர் செய்வார்கள். அது ஆண் பிள்ளைகள் அம்மாவிடம் தனக்கு வேண்டியதை மட்டும் கேட்க கூடியவர்களாக இருப்பார்கள். அடு போல பெண் பிள்ளைகளுக்கு அம்மாவது உணர கூடிய தருணம் என்று பார்த்தால் அவர்களுக்கு ஒரு குழந்தை வந்த பிறகு தான் அவர்களை உணர்வார்கள். அதன் பிறகு அம்மா பிள்ளை உறவை எக்காலத்திற்கும் பிரிக்க முடியாது. நம்முடைய பெற்றோர்களை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த பதிவில் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் கட்டுரை வடிவில் அறிந்து கொள்வோம் வாங்க..
முன்னுரை:
கொன்றை வேந்தன் என்ற நூலில் ஓவை பாடி முதலாவதாக அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் நாம் தாய் தந்தையரை தான் தெய்வங்களாக நினைக்க வேண்டும்.அதன் பிறகு எந்த கடவுளையும் வணங்க வேண்டும் என்பது உணர்துகிறார். நாம் கோவிலுக்கு சென்று வழிபடும் போது தெய்வங்களை வழிபடுகிறோம். அப்படி வழிபடும் போது நாம் அங்குள்ள கடவுளையே நாம் அம்மா அப்பாவை நினைக்க வேண்டும்.
அன்னையும் பிதாவும்:
நம்முடையஅம்மா, அப்பா என்கிறவர்கள் நம்முடைய கண்கள் போல. ஏனென்றால் கண்கள் இல்லாதவன் இந்த உலகத்தில் எத்தனை துன்பங்களை சந்திக்கிறார்கள். இந்த கண் உடையவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்கிறார்கள். எந்த குழந்தையும் சரி தாய் இல்லாமல் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது. நம்முடைய அம்மாவின் அன்புக்கு எதனை வைத்தாலும் ஈடாகாது.
ஒவ்வொரு குழந்தையும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு, ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்கும் தாய் தான் முதன்மையான காரணமாக இருக்கிறாள். எந்த குழந்தையாக இருந்தாலும் சரி மண்ணில் பிறக்கும் போது ணகில்லா குழந்தையாக தான் இருக்கிறாள். அவர்கள் தீயவர் ஆவதும், நல்லவர் ஆவதும் அன்னை வளர்ப்பதில் தான் இருக்கிறது.
மகன் தாய்க்கு செய்ய வேண்டியது :
தன் மகனை கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் ,நற்பண்பு நிறைந்தவன் என சிவஞான அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய் தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
தந்தை மகனுக்குச் செய்ய வேண்டியது:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும் என்று குறிப்பிடுகின்றாா்.
மகன் தந்தைக்குச் செய்ய வேண்டியது:
நற்பண்புகளை வாழ்வில் உடைமையாகக் கொண்டு நல்லியல்புடையவராய்,
அறநெறி பிறளாது , வாழ்தல் வேண்டும்.
முடிவுரை:
நம்முடைய பெற்றோர்களை உயிருள்ள போதே அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு வயது ஆக ஆக குழந்தைகள் ஆகிவிடுவார்கள். குழந்தைகள் பெற்றோர்களாக ஆகிவிடுவார்கள். அதனால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் அவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.
பெற்றோர்கள் உயிருடன் இல்லா விட்டாலும் கூட அவர்களை தெய்வங்களாக வழிபட வேண்டும். தை அமாவாசை அன்று விரமிருந்து வழிபடுவது சிறப்பு. அது போல ஆடி அமாவாசை அன்றும் பெற்றோர்களை நினைத்து வழிபாடு செய்யலாம.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |