அறம் செய்ய விரும்பு கட்டுரை | Aram Seiya Virumbu Katturai In Tamil

Advertisement

அறம் செய்ய விரும்பு பேச்சு போட்டி | Aram Seiya Virumbu Speech in Tamil

அறம் செய்ய விரும்பு எவ்வளவு அழகாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்னே அவ்வை பாட்டி சொல்லி சென்ற ஒரு அழகான காவியம். நாம் பள்ளியில் சேர்ந்தவுடன் தமிழ் எழுத்துக்களுக்கு பிறகு, நமக்கு சொல்லி கொடுக்கும் முதல் பாட்டு ஆத்திசூடி. இந்த பாட்டின் மூலம் ஒளவையார் சொல்லும் ஒவ்வொரு கருத்துமே முத்து போன்றவை. அந்த வகையில் ஆத்திசூடி பாடலில் வரும் அறம் செய்ய விரும்பு எனும் வரி சொல்லும் அழகை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
அறத்தின் முக்கியத்துவம்
ஒளவையார் கருத்து
திருவள்ளுவர் கருத்து
முடிவுரை

முன்னுரை:

அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். வாரிகொடுத்த வள்ளல்கள் பலர் வாழ்ந்து வந்த புண்ணிய பூமி இது. நாம் இந்த பிறவியில் செய்யும் ஒவ்வொரு பலன்களும் தான் நமக்கும், நம் சந்ததியினருக்கும் நற்பலன்களை கொடுக்கும். அறத்தின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தான் திருவள்ளுவர் அறத்துப்பால் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார்.

அறத்தின் முக்கியத்துவம்:

  • Aram Seiya Virumbu Katturai In Tamil: அறம் என்பது பசி என்று கையேந்தி வருபவருக்கு உணவளித்தல், நேர்மையாக இருப்பது, பொய் பேசாமல் உண்மையை மட்டும் பேசுவதே ஆகும். மற்றவர்களுக்கு எப்போதும் கெடுதல் நினைக்காமல், நல்ல எண்ணங்களுடன் வாழ்வதே நல்லது.
  • அறம் கொண்டு வாழ்பவரின் வாழ்க்கை எப்போதும் செல்வாக்கு, புகழ் கொண்டு சிறப்பாக அமைகிறது. நேர்மையில்லாமல் வாழ்பவர்கள் வாழ்க்கையில் பெரும் துன்பத்தை சந்திக்கிறார்கள். அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல, அற வழியில் நிற்றல் ஒழுங்கான தர்ம வழியில் நிற்பது என்று பொருள்.

ஒளவையார் கருத்து:

  • Aram Seiya Virumbu Speech in Tamil: அறத்தின் நெறி தவறியவர்கள் மறு ஜென்மத்தில் வாழ்வதற்கான தகுதியை இழந்தவர்கள். வறுமையிலும் நாம் சிறப்பான நிலையில் வாழ வேண்டும் என்றால் அறநெறியை பின்பற்றி வாழ வேண்டும் என்று ஒளவையார் உரைக்கிறார்.
வாய்மையே வெல்லும் கட்டுரை

திருவள்ளுவர் கருத்து:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

எனும் குறட்பாவின் மூலம் திருவள்ளுவர் பொறாமை, தீயசொல், வெகுளி போன்றவற்றை தகர்த்து அறத்துடன் வாழ வேண்டும் என்று உரைக்கிறார். நாம் மற்றவர்களுக்கு செய்கின்ற தர்மம் எப்பொழுதுமே நமக்கு துன்பத்தை தராது, அது எப்போதுமே இன்பத்தை மட்டுமே தரும்.

மனிதர்களாகிய நாம் வாழ்வில் மேன்மை அடைய அறம் என்கின்ற உயரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நம் முன்னோர்கள் அறம் தவறி வாழ்வதற்கு பதிலாக உயிர் துறப்பது மேல் என்று வாழ்ந்தவர்கள். அறம் என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால் மனிதர்களின் இதயத்தில் மிருகங்கள் வாழ ஆரம்பித்து விடும்.

முடிவுரை:

Aram Seiya Virumbu Essay in Tamil: அறம் செய்வதால் உண்டாகும் மகிழ்ச்சி நீங்கள் வேறு எது செய்தாலும் கிடைக்காது. அறப்பணியை மேற்கொண்டு வாழ்பவர்களின் உயிர் இப்பூமியை விட்டு பிரியும் போது சொர்க்கத்தை அடைவார்கள்.

இன்றைய சூழலில் அறத்தின் வழியில் நடப்பவர்களை பார்ப்பதே மிகவும் அரிதாக உள்ளது. நேர்மையின்மையும், அநியாமமும் இப்போது அதிகமாக உள்ளது. இதனை தவிர்த்து நாம் அறத்துடன் வாழ வேண்டும், மற்றவர்களுக்கும் அறத்தின் சிறப்பை எடுத்துரைக்க வேண்டும்.

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

 

இது போன்று பயனுள்ள பலவகையான கட்டுரைகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் –> Tamil Katturai 
Advertisement