Arivatram Kakkum Karuvi Katturai In Tamil..!
வாசிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்ற திருக்குறளின் கட்டுரை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள் ஆகும். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல் தான் திருக்குறள் ஆகும்.
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
தமிழ் மனிதர்கள் மட்டும் இல்லமால் உலக அளவில் இருக்கக்கூடிய மனிதர்கள் கூட திருக்குறளை படித்து மனித வாழ்வை பற்றி தெரிந்துகொள்கிறார்கள். உலக அளவில் பேச கூடிய சிறப்புமிக்க தமிழ் நூல் திருக்குறளே என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம் தமிழர்கள். அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் திருக்குறளின் விளக்கத்தை கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
10 பெஸ்ட் திருக்குறள் மற்றும் விளக்கத்துடன் தெரிந்து கொள்வோம்
அறிவற்றங் காக்கும் கருவி கட்டுரை:
குறிப்பு சட்டகம்:
- முன்னுரை
- திரு மு.வரதராசனார் உரை
- பரிமேலழகர் உரை
- மணக்குடவர் உரை
- தேவநேயப் பாவாணர் உரை
- கலைஞர் உரை
- சாலமன் பாப்பையா உரை
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை
- திருக்குறள் வீ. முனிசாமி உரை
- தமிழ்க்குழவி உரை
- முடிவுரை
முன்னுரை:
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்பது 421 – ஆவது திருக்குறள். இது அரசியல் அதிகாரத்தை சேர்ந்தது ஆகும். நமக்கு அறிவு மட்டும் தான் அழிவிலிருந்து நம்மை காப்பாற்றும் கருவி ஆகும். அந்த அருவி என்னும் கருவி நம்மிடம் இருந்தால் எவ்வளவு பெரிய பகைவராக இருந்தாலும் நம்மை அழிக்க முடியாது என்று பொருள்படும்.
திரு மு.வரதராசனார் உரை:
திரு மு.வரதராசனார் அவர்கள் கூறுவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி ஆகும். பகையோடு நம்மை எதிர்பவருக்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
பரிமேலழகர் உரை:
பரிமேலழகர் அவர்கள் கூறுவது அரசர்க்கு அறிவு என்பது இறுதி வராமல் காக்கும் கருவி ஆகும், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும். அதுவே பகைவர்க்கு அழிக்கலாகா உள் அரணும் ஆகும்.
மண்டக்குடவர் உரை:
மண்டக்குடவர் அவர்கள் கூறுவது ஒருவனுக்கு குற்றமறைக்கும் கருவியாவது அறிவு பகைவராலும் உள்நுழைந்து அழிக்க முடியாததும் அதுதானே. இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கும் என்றும் பிறரால் வருந்தீமையைக் காக்கும் என்றும் அறிவினாலாம் பயன் கூறுகிறது.
தேவநேயப் பாவாணர் உரை:
தேவநேயப் பாவாணர் அவர்கள் கூறுவது நில உலகில் வாழ்பவர்களுக்கும் சிறப்பாக ஆழ்பவர்களுக்கும் அறிவானது அழிவு வராமல் காக்கும் கருவி ஆகும். அதுமட்டும்மின்றி பகைவராலும் அழிக்க முடியாத உள்அரனும் ஆகும். உட்புகுந்து அழிக்க முடியாத முன்னறிந்து தடுத்தல் ஆகும்.
கலைஞர் உரை:
கலைஞர் அவர்கள் கூறுவது பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
சாலமன் பாப்பையா உரை:
சாலமன் பாப்பையா அவர்கள் கூறுவது அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கூறுவது புத்திசாலித்தனந்தான் துன்பம் வராமல் தடுத்துக்கொள்வதற்கு ஆயுதம். அது மனத்துக்குள் இருப்பதானதால் பகைவர்களாலும் புகுந்து அழித்துவிட முடியாத பாதுகாப்பு.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
திருக்குறள் வீ.முனிசாமி அவர்கள் கூறுவது அறிவு என்பது இறுதி வாராமல் காப்பாற்றுகின்ற கருவியாகும். பகைவர்களாலும் அழிக்க முடியாத உள்ளிருப்பதாகிய காவலிடம் என்னும் கோட்டையாகும்.
தமிழ்க்குழவி உரை:
தமிழ்க்குழவி அவர்கள் கூறுவது ஒருவருக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு ஆகும். பகைவர்களால் தாக்கி அழிக்க முடியாத அரண் ஆகவும் அறிவு விளங்குகிறது.
முடிவுரை:
மனிதனுக்கு அறிவு இருந்தால் எவராலும் அழிக்க முடியாது என்று இந்த குறள் நமக்கு விளக்குகிறது. நம்முடைய பெரிய பாதுகாப்பே அறிவு ஆகும். எனவே நம் அறிவை வளர்த்து கொண்டு நம் வாழ்க்கையில் உயர்ந்து காட்டுவோம். அறிவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்று இந்த குறள் நமக்கு உணர்த்துகிறது.
திருக்குறள் கட்டுரை | Thirukkural Katturai in Tamil
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |