செயற்கை நுண்ணறிவு கட்டுரை..! | Artificial Intelligence Katturai In Tamil..!
இன்று தொழில்நுட்பம் நன்கு வளர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மனிதர்களின் வேலையை இந்த செயற்கை நுண்ணறிவு மிகவும் எளிதாக ஆக்குகிறது. மாணவர்கள், ஊழியர்கள் என்று அனைத்து மக்களும் செயற்கை நுண்ணறிவை நன்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அலுவகத்தில், கல்லூரியில், பள்ளிகளில் போன்ற அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவை வைத்து தான் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருகிறார்கள். ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவை வைத்து தங்கள் வேலையை சுலபமாக முடித்து விடுகிறார்கள். இன்றைய பதிவில் செயற்கை நுண்ணறிவு பற்றிய கட்டுரையை தான் பார்க்கப்போகிறோம்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு கட்டுரை:
குறிப்புச்சட்டகம்:
- முன்னுரை
- செயற்கை நுண்ணறிவு என்பதன் பொருள்
- செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம்
- செயற்கை நுண்ணறிவின் வகைகள்
- செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்
- செயற்கை நுண்ணறிவின் தீமைகள்
முன்னுரை:
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களின் சிந்தனை முறைகளை போன்று இயந்திரங்கள் மற்றும் கணினிகள் செயல்படக்கூடிய தொழில்நுட்பம் ஆகும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது, அறிவியல் உலகில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தி உள்ளது. மனிதகுலம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீவைத் தரக்கூடிய வல்லமை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுடபத்துக்கு உண்டு. செயற்கை நுண்ணறிவு மருத்துவம், வணிகம், கல்வி, கலை, அறிவியல் போன்ற பல துறைகளிலும் பயன்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு என்பதன் பொருள்:
செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களை சிந்திக்க வைக்க கூடியது. மனிதனின் மூளை சிந்தித்து செயல்படுவது போல இயந்திரங்களும் தன்னிச்சையாக யோசனை செய்து செயல்படக்கூடிய திறனோடு உருவாக்குவதே செயற்கை நுண்ணறிவு ஆகும். நாம் பயன்படுத்தும் ஒரு இயந்திரமோ, மென்பொருளோ நாம் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப சிந்தித்து செயல்பட்டால். அதுவே செயற்கை நுண்ணறிவு ஆகும்.
செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம்:
- மருத்துவம் : நோய்களை கணித்து முறையான சிகிச்சையை பரிந்துரை செய்யப்படுகிறது.
- கல்வி : தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்குகிறது.
- தொழில் : வேகமான மற்றும் துல்லியமான முடிவுகளை எடுக்கும் திறன்.
- பொருளாதாரம் : பங்கு சந்தை மற்றும் நிதி மேலாண்மையில் மிக்க பயன்பாடு.
செயற்கை நுண்ணறிவின் வகைகள்:
செயற்கை நுண்ணறிவை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதலாவது பொது செயற்கை நுண்ணறிவு (General AI) என்பதாகும். அதாவது இயந்திரன்குளம் மனிதர்களைப் போலவே எல்லா வகையிலும் யோசித்து செயல்படக்கூடிய வகையாகும். இரண்டாவது குறுகிய செயற்கை நுண்ணறிவு (Narrow AI) எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்ய வடிவமைக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் நன்மைகள்:
மிகவும் சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க முடியும். பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டிற்கு உதவுகிறது. கல்வி, மாணவர்களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுதுத்துதல், போக்குவரத்து, உற்பத்தி, விவசாயம், நிதி நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு, சூழல் பாதுகாப்பு, வானிலை மற்றும் பருவநிலை மாற்றம் கணித்தல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இணையதள தேடல், மின் வணிகம், சமூக ஊடகங்கள், போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களின் நோயறிதல், தாவரங்களில் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றை கண்டறியவும் பயன்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தீமைகள்:
செயற்கை நுண்ணறிவு பல பணிகளை தானியங்கி செயல்படும் திறன் கொண்டதால், பலருக்கு வேலை இழப்பு ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவு நம்மை பற்றிய தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் போது தனியுரிமை பாதிக்கப்படலாம். செயற்கை நுண்ணறிவை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடையே நேரடி தொடர்புகளை குறைத்து, தனிமைப்படுதலை அதிகரிக்கும்.
முடிவுரை:
செயற்கை நுண்ணறிவு ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பமாகும். இது நமக்கு பல நன்மைகளை தரும் அதே வேளையில் சில சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. நாம் செயற்கை நுண்ணறிவை மனித நலனுக்காக பயன்படுத்தி நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
AI தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் யார்..? | Artificial Intelligence Inventor in Tamil..!
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |