ஔவையார் பற்றிய சிறுவர் கட்டுரை | Avvaiyar Katturai in Tamil

Avvaiyar Katturai in Tamil

அறிவுசால் ஔவையார் கட்டுரை | Avvaiyar Essay in Tamil

சங்ககால புலவர்களுள் பலர் ஆண்பால் புலவர்களையே பெருமையாக பேசிட்டு வந்தனர். அதை தகர்த்து எறிந்து இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் ஒளவையார். தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்து மக்களுக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் கூறிய ஒரு மகத்தான புலவர். பெண்பாற் புலவர்களும் இலக்கியத்தை இயற்ற முடியும் என நிரூபித்து காட்டியவர் ஒளவையார் அவர்கள். இந்த பதிவில் ஒளவையாரின் சிறப்பு தொகுப்பை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

ஔவையார் பற்றிய சிறுவர் கட்டுரை

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
ஒளவையின் வீரம்
வாழ்வியல் நெறிகள்
நட்புறவு
முடிவுரை

முன்னுரை:

  • ஒளவையாரின் படைப்புகள் யாவும் காலத்தை வெல்ல கூடியதாக இருந்தது. சங்ககால தமிழர்களின் வரலாறு, வாழ்வியல் முறைகள், அறச்செயல்கள், தத்துவம், வீரம் போன்ற படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
  • ஒளவையார் எனும் பெயரில் சங்க காலம், இடைக்காலம், சோழர் காலத்தில் புலவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஒளவையார் வாழ்ந்த காலத்தில் பல மன்னர்களுக்கு பாடல்களை பாடி பரிசை பெற்றுள்ளார்.
  • மூவேந்தர்கள் தமிழ்நாட்டில் பெருமையுடனும், புகழுடனும் வாழ்ந்த காலத்தில் பெண் கவிச்சிங்கமாக உலா வந்தவர் தான் ஒளவையார்.

ஒளவையின் வீரம்:

  • Avvaiyar Patri Katturai in Tamil: ஒளவையார் என்னும் சொல் மூதாட்டி, அறிவில் சிறந்தவர், தவப்பெண் என்ற பொருள்களைக் குறிக்கும். இவர் எழுதிய பாடல்கள் யாவும் எல்லோரும் கூறும் கருத்துக்களை சொல்லவில்லை, அவரின் பாடல்கள் யாவும் தனித்துவமாகவும், வீரம் தாண்டவம் ஆடும் அளவிற்கு தான் இருந்தது.
  • முன்னர் போரில் தூது செல்வதற்கு புறா தான் அனுப்பப்படும் என்று நாம் படித்திருப்போம், ஆனால் அதியமானுக்காக ஒளவையார் போர் தூது சென்றுள்ளார். இதை நாம் புறநானூற்றில் அறியலாம். ஒரு அரசருக்கு தூது செல்லும் அளவிற்கு வாழ்ந்து காட்டி ஒரு சரித்திரத்தை படைத்தவர் ஒளவையார்.
  • தீராக்கோபம் போரா முடியும் என்ற பாடல் மூலம் போரால் வெறும் ஆபத்து தான் ஏற்படும், அதனால் பல உயிர்கள் பலியாகும் என்று போர் செய்வதை மறுத்தார். இதன் மூலம் ஒளவையாறுக்கு மானிடர்கள் மீது எவ்வளவு பற்று உள்ளது என்பது தெரிய வருகிறது.

வாழ்வியல் நெறிகள்:

“மன்னனும் மாசறக் கற்றேனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னனுக்குத்
தன்நேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற விடமெல்லாஞ் சிறப்பு”

  • என்ற பாடல் மூலம் மன்னருக்கு அந்த நாட்டில் உள்ளவர்கள் மட்டும் தான் புகழ் கிடைக்கும், புலவருக்கோ அவர் செல்லும் இடமெல்லாம் சிறப்பாக வாழ்வார் என்று கூறுகிறார். மேலும் கல்வி கற்காதவரின் நிலையையும் தனது பாடல் மூலம் கூறியுள்ளார்.

நட்புறவு:

  • Avvaiyar Katturai in Tamil: இப்போது இருக்கும் நட்பை விட சங்க காலத்தில் அதியமானுக்கும், ஒளவையாருக்கும் இருந்த நட்பு உயிரை கொடையாக கொடுக்கும் அளவிற்கு இருந்தது. எப்படியெனில், அதியமான் நீண்ட நாள் வாழ்வதற்காக கிடைத்த நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்தார். ஔவை அதியமானின் நட்பை சிறப்பிப்பதற்காக

நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல்நிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கி,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே என்று பாடினார். இதன் மூலம் அதியமானுக்கு ஔவை மீது இருக்கும் நட்பும், ஔவைக்கு அதியமான் மீது இருக்கும் நட்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

முடிவுரை:

  • தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக காலங்களை வென்று வாழும் தமிழ் பொக்கிஷங்களை உலகுக்கு கொடுத்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவையார். இவருடைய தொண்டு தமிழுக்கு மட்டுமல்ல சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும், நாடுகளுக்கு இடையில் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

ஒளவை என்னும் மூதாட்டி, அருமைத் தமிழை சீராட்டி, அறிவும் செறிவும் நிலைநாட்டி, அற்புதம் படைத்தார் கவிதீட்டி, அவர் ஒழுக்க வாழ்வுக்கு வழிகாட்டி..!

ஔவையார் எழுதிய நூல்கள்

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai