பாரதியார் பற்றிய கட்டுரை
நம் மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமைபட்டிருந்த காலத்தில் மக்களின் அறியாமையை போக்குவதற்காகவும், விடுதலை உணர்வை வளர்ப்பதற்காகவும் அரும்பாடுபட்ட பல தேச தலைவர்களில் மகாகவி பாரதியும் ஒருவர் ஆவார். அப்படிப்பட்ட மகாகவியின் தேசப்பற்றை தான் நாம் இன்றைய பதிவில் கட்டுரை வடிவில் பார்க்க போகிறோம்.
சுப்பிரமணிய பாரதியார் பற்றி தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பலவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்ந்தவர். இவரை பற்றி நாம் பாடப்புத்தகங்களில் படித்து இருப்போம். குறிப்பாக பாரதியார் கவிதைகள் பலவற்றை படித்து இருப்போம். இப்போது, இந்த பதிவின் வாயிலாக பாரதியாரை பற்றி கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
முன்னுரை:
தமிழுக்கு தொண்டாற்றிய பல போராட்ட வீரர்களில் பாரதி தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளார் என்றே கூறலாம். இவர் சுதந்திர போராட்ட வீரர், கவிஞர் மற்றும் பெண் விடுதலைக்காக போராடியவர் என்று இவரின் பணிகள் தமிழ்நாட்டில் எண்ணிலடங்காதது.
பாரதியார் பற்றிய கட்டுரை:
- பாரதியார் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் மாதம் 11-ம் தேதி 1882-ம் ஆண்டு சின்னசாமி மற்றும் இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தவர் ஆவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். பிள்ளை பருவத்திலேயே இவருக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் மிகுந்து இருந்தது. 11-ம் வயதில் இவரது கவி திறமையால் எட்டயபுர மன்னனின் பாராட்டை பெற்றார். மேலும் இவருக்கு சுப்பிரமணிய பாரதி என்ற புனை பெயர் கிடைத்தது.
- இவர் 15-ம் வயதில் செல்லம்மா என்பவரை மணந்தார். பிறகு தன் அத்தை ஊரான வாரணாசியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கல்வி பயின்று தேர்ச்சி பெற்றார். அங்கு தான் தலைப்பாகை அணியும் பழக்கம் உருவானது.
- இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி என பல சிறப்பு பெயர்களை உடையவர்.
பாரதியார் பற்றி கட்டுரை – மகாகவியின் படைப்புகள்:
- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற பல கவிதைகளை இயற்றியுள்ளார். மேலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே- என்ற பாடல் மூலம் இந்திய மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார்.
- பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவரையே சாரும். மேலும் எட்டயபுரத்தில் அரசவை கவிஞராக இருந்த போது இவரது பாடல்கள் 1903-ல் நூல்களாக வெளிவர ஆரம்பித்தன.
- பின் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தார். பின் மக்கள் பத்திரிக்கையில் வரும் செய்திகள் அனைத்தையும் நம்பி அறியாமையில் இருந்த போது சுதேச மித்திரன் எனும் பத்திரிக்கை மூலம் மக்களின் அறியாமையை நீக்கினார்.
- பல மொழிகளில் கைதேர்ந்தவராக பாரதி இருந்த போதிலும் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் சிறப்பை எடுத்துரைத்தவர்.
பெண் சுதந்திரம் – Bharathiyar Katturai in Tamil
- ஆணாதிக்கம் அதிகமாக இருந்தபோது பெண் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர். அதாவது பெண்கள் படிக்கக்கூடாது, குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமைகள் போன்றவற்றிற்காக பெண்கள் விடுதலை கும்மி எனும் நூலை இயற்றி அதில்
- “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்” என்று பாடியவர்.
- அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட மாந்தர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக “வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்ற வரிகள் மூலம் தனது கருத்தை வெளியிட்டவர்.
- இனப் பாகுபாடு, மத பாகுபாடு மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர் பாரதி ஆவார்.
முடிவுரை:
1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மரணமடைந்தார். தன் தேசத்தையும் தமிழையும் உயிருக்கு இணையாக நேசித்தவர் மகாகவி பாரதி. பாரதி மற்றும் பல தேசத்தலைவர்களின் வழியில் நாட்டையும் தமிழையும் காப்போம்.
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு
பாரதியார் கவிதைகள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |