மகாகவி பற்றிய 10 எளிய பேச்சு போட்டி வரிகள்..!

Advertisement

Bharathiyar Speech in Tamil 10 Lines

வருகின்ற திங்கட்கிழமை பாரதியாரின் 141-வது பிறந்தநாள்.. பாரதியார் 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்தவர். இவரது பிறந்தநாளை இந்திய முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அன்று பல இடங்களில் கொண்டாடுவார்கள். ஆக அன்றைய தினம் கண்டிப்பாக பேச்சு போட்டி வைப்பது வழக்கமான விஷயம்.

ஆக அந்த பேச்சு போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இங்கு மகாகவி பாரதியார் பற்றிய 10 எளிய பேச்சு போட்டி வரிகளை பதிவு செய்துள்ளோம். ஆக அவற்றை படித்து போட்டியில் வெற்றி பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் பற்றிய 10 வரிகள்

மகாகவி பற்றிய 10 எளிய பேச்சு போட்டி வரிகள்..!

  1. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர், சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி.
  2. பாரதியார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் என்ற ஊரில் டிசம்பர் 11, 1882-ஆம் ஆண்டு பிறந்தவர்.
  3. இவரது தந்தை பெயர் சின்னசாமி ஐயர், தயிர் லட்சுமி அம்மாள்.
  4. பாரதிக்கு 11-வயது இருக்கும்போது இவருடைய கவிபுலமையை பாராட்டி எட்டயபுர மன்னர் பாரதி என்ற பட்டத்தை வழங்கினார், அன்று முதல் இன்று வரை சுப்பிரமைய பாரதியார் என அழைக்கப்பட்டார்.
  5. பாரதியார் அவர்கள் 1897 ஆம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
  6. பாரதியார் தமிழ் மட்டுமன்றி இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம், வங்காளம் போன்ற பிளா மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார்.
  7. விடுதலை போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்ததால் பாரதி தேசியக் கவி என போற்றப்பட்டார்.
  8. பாரதியார் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற புகழ் பெற்ற காவியங்களை எழுதினார்.
  9. மகாகவி மக்கள் கவிஞர், தேசியகவி, உலக கவி, செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ் தேர்ப்பாகன் சிந்துக்கு தந்தை போன்ற பல சிறப்பு பெயர்களால் பாரதியார் போற்றப்படுகிறது.
  10. பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி தனது 39 வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் பற்றிய பொது அறிவு வினா விடை..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement