குழந்தைகள் தின கட்டுரை | Children’s day speech in tamil
குழந்தைகளின் எதிர்காலத்தினை நல்ல திசையில் மாற்றி அமைப்பது நம் அனைவரின் கடமையாகும். குழந்தைகள் நமது நாட்டின் கண்கள் என்றார் ஜவஹர்லால் நேரு. அனைவரும் நேருவை நேரு மாமா என்று செல்லமாக அழைப்பார்கள். இந்திய அரசானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ஆம் தேதியினை ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக அறிவித்தது. குழந்தைகள் தினம் நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
நாளைய சமுதாயத்தின் தூண்களான குழந்கதைகள், அன்றைய தினத்தை அனைவருடன் சேர்ந்து ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்வார்கள். இதுமட்டுமல்லாமல் குழந்தைகள் தினத்திற்காக ஆசிரியை பெருமக்கள் பேச்சு போட்டி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்காக விளையாட்டு போட்டிகள், அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி பரிசாக வழங்குவார்கள். இத்தகைய சிறப்புமிக்க குழந்தைகள் தின விழா கட்டுரை பற்றி ஒரு சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகள் தின கட்டுரை
முன்னுரை:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். இந்த தினம் முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்⸴ இந்தியாவின் ஒளி விளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமுமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளும் நேருவும் :
- குழந்தைகளை கொண்டாடும் விதமாக குழந்தைகள் தினம் உலகம் முழுவதிலும் நவம்பர் 20ஆம் நாள் சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
- குழந்தைகள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவராவர் பிரதமர் நேரு. குழந்தைகளால் அன்புடன் நேரு மாமா என்று அழைக்கப்பட்டவர். குழந்தை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இன்று நம் குழந்தைகளுக்கு அளிக்கும் அன்பும் அக்கறையும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நாளை நம் நாட்டின் தலைவிதியாக மலரும். இந்தச் சிந்தனைக்குக் காணிக்கையாகவே குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
முன்னாள் பிரதமர் நேருவின் பார்வை:
நேரு அவர்கள் குழந்தைகள் பற்றிக் கூறும் போது “குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கும் போது தான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு பெரியதாக இருக்கும் “என்கின்றார்.
குழந்தைகள் தினக் கொண்டாட்டம்:
- பள்ளிகளில் குழந்தைகள் தினம் மிகவும் விமர்ச்சியாக கொண்டாடப்படும். நாளைய எதிர்கால தூண்களாகிய குழந்தைகளை இன்றே போற்றி வாழ்த்தும் நாளாக இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
- இன்றைய தினம் குழந்தைகளுக்கான தினமாக இருக்கும். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் அந்த நாள் குழந்தைகளால் அமர்க்களப்படும்.
முடிவுரை:
- எதிர்காலத்தின் தூணாகவும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இருக்கப்பெறுவர்கள் குழந்தைகளே எனவேதான் குழந்தைகள் தினம் நம் தேசத்தில் மிகுந்த மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.
- இன்றைய நாளில் முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தம் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.
🥰குழந்தைகள் தின நன்னாளினை உங்கள் அருமை மழலை செல்வங்களோடு இனிமையாக கொண்டாடி மகிழ பொதுநலம்.காம் பதிவின் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💐💐
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |