கிறிஸ்துமஸ் பண்டிகை கட்டுரை | Christmas Katturai in Tamil | கிறிஸ்துமஸ் தினம் கட்டுரை

Advertisement

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை | Christmas Thinam Katturai in Tamil

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் வருடா வருடம் அனைவரும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம். இயேசு பிறந்த ஆண்டானது சரியாக இன்று வரை தெரியவில்லை என்பதால் கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி வைத்துள்ளார்கள். கிறிஸ்து பிறப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் ஆரம்பித்தார்கள்.

அந்த இனிய நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கி உற்சாகமாக ஆடி மகிழ்வார்கள். வாங்க இந்த பதிவில் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஒரு சிறப்பு கட்டுரையை படிக்கலாம்..

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு

பொருளடக்கம்:

1. முன்னுரை 
2. கிறிஸ்துமஸ் தினம் சிறப்பு 
3. கிறிஸ்துமஸ் தோற்றம்
4. கிறிஸ்துமஸ் பரிசு
5. 12 நாள் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் 
6. முடிவுரை 

முன்னுரை:

கிறித்தவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று தேவாலயம் சென்று இயேசு கிறிஸ்துவை வழிபாடு செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்தினை கூறி மகிழ்வார்கள். கிறிஸ்தவ மதத்தினர் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத் துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில் தான் என்பதும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவாக இருந்துள்ளது.

கிறிஸ்துமஸ் தினம் சிறப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறித்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் கூறுகிறது. எப்படி இருந்தாலும் கிறிஸ்துமஸ் தினத்தை உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினத்தில் ஒரு சிலர் புதிதாக பணிகளை செய்ய தொடங்குவார்கள். கடந்த 1643-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவிற்கு “கிறிஸ்துமஸ் தீவு” என்று பெயர் சூட்டினார்கள்.

கிறிஸ்துமஸ் தோற்றம்:

டிசம்பர் மாதம் 25ம் நாள்தான் இயேசு கிறிஸ்து பிறந்தாரா என்று கேட்டால்? உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாக யாரும் கூறிவிட முடியாது. பைபிளில் எந்த இடத்திலும் இயேசு கிறிஸ்து பிறந்த தினமானது குறிப்பிடப்படவில்லை. “பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்த காலம் தோன்றும் போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார்.”’ என்ற வேத வசனங்கள் சற்றுக் குழப்பத்தைத் தந்தாலும், “நடுக்கும் குளிரில் எங்கும் தங்க இடம் கிடைக்காமல் சூசையும் மரியாளும் ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆடு மாடு அடைக்கும் கொட்டகையில் தங்க நேர்ந்தது என்ற வேத வசனங்கள் அலசி ஆராயப்பட்டு நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் ஒன்று கூடி இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகிற விழாவாக இந்த நாட்களை மாற்றி விட முடிவு செய்தனர்.

முதன் முதலில் கிறிஸ்துமஸ் விழாவானது ஜனவரி 6ம் தேதி கொண்டாடப்பட்டதாக பழைய ஜூலியன் நாட்காட்டி குறிப்புகள் தெரிவிக்கின்றன. உரோமாபுரி நாட்டின் அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்பட்டதாகவும் பின்னர் கிரகோரியன் நாள்கட்டியின்படி 1743லிருந்து டிசம்பர் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் அறிவிக்கின்றது. இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் அன்றைய போப்பாண்டவர் ஜூலியஸ் I ஆவார்.

12 நாள் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்:

இங்கிலாந்து மற்றும் பிரான்சு தேசத்தில் டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் ஜனவரி மாதம் 6ம் தேதி வரையிலான 12 நாள் கிறிஸ்மஸ் தின விழாவாக நண்பர்கள், உறவினர்கள் போன்ற எல்லோரையும் சந்தித்து பரிசு பொருட்களை வழங்கி சிறப்பாக நாளினை கொண்டாடி வருகிறார்கள். அந்த நாளில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி கொள்வார்கள். சிலர் பாடிக்கொண்டே தெருக்களில் உலா சென்று வருவார்கள்.

கிறிஸ்துமஸ் பரிசு:

கிறிஸ்துமஸ் தினம் அன்று ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்குவது ஏன் என்றால் புனித மத்தேயு எழுதிய பரிசுத்த வேதாகமத்தின்படி, “உலகை உய்விக்கப் பிறந்துள்ள அன்னை மேரியின் தவப்புதல்வராம் குழந்தை இயேசுவைக் கண்டு தரிசிக்க வந்த மூன்று ராஜாக்கள் அந்தக் குழந்தையின் முன்பு மண்டியிட்டு வணங்கினார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொக்கிசங்களைத் திறந்து பொன்னும் பொருளும் பரிசுகளாக அளித்தனர். இதனால் தான் அன்றைய நாளில் பரிசுகள் வழங்கப்படுவது காரணமாக இருந்தது. 1800 வரை ஒருவருக்கொருவர் மற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிக் வந்ததாக தெரியவில்லை. பின்னாளில் “சாண்ட்ட கிளாஸ்” என்ற கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கிறிஸ்துமஸ் நாளில் பரிசுப் பொருட்கள் வழங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

முடிவுரை:

அமெரிக்க நாட்டில் கிறிஸ்துமஸ் தினமானது ஒரு விடுமுறை நாளாகவும் புனித நாளாகவும் கொண்டாடப்பட்டது. அந்த நாளானது குழந்தைகளுக்கு மிகவும் சிறப்பு தினமாக உள்ளது. கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மட்டும் என்றில்லாமல் தனியார் நிர்வாகங்கள் என்று விடுமுறை விடப்பட்டும், சில நிர்வாகங்கள் ஒன்று திரண்டு விடுமுறை அளித்து இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. முன்னெல்லாம் கிறிஸ்துமஸ் தினமானது சாதாரணமாக ஒரு திருப்பலி (Mass) மட்டுமே நடந்து வந்தது. அடுத்ததாக படிப்படியாக கிறிஸ்துமஸ் மரம், ஸாண்ட்டா கிளாஸ், வால் நட்சத்திரம், ஒளியுமிழ் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரத்துண்டு (Yule log), காலுறை தொங்க விடுதல், குழுப் பாடல், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை என்று பட்டியல் அதன் பிறகுதான் நீண்டது.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement