எனது பயணம் என்னும் தலைப்பில் கட்டுரை.!

Advertisement

Enathu Payanam Katturai Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எனது பயணம் கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க. மனிதன் வாழ்க்கையில் பயணம் என்பது ஒரு பகுதியாகும். பயணம் இயற்கையான காட்சிகளையும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களையும் நினைவுகளையும் தருகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்கள் சென்ற ஒரு பயணம் மறக்க முடியாததாக இருக்கும். எதனை வருடம் கடந்து வந்தாலும், எப்போதோ சென்ற பயணத்தின் ஞாபகம் மனதில் மறக்க முடியாத நினைவுக்காக இருக்கும்.

பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பயணம் போக போகிறோம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவ்வளவு சந்தோசத்துடன் இருப்பார்கள். எனவே, பயணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் முக்கிய அங்கமாக இருக்கிறது. அந்த வகையில், எனது பயணம் என்னும் தலையில் கட்டுரை கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

எனது பயணம் கட்டுரை:

எனது பயணம் கட்டுரை

குறிப்பு சட்டகம் 
  • முன்னுரை
  • தொடர்வண்டி பயணம்
  • பொதிகை மலையில் தவழும் மேகங்கள்
  • விண்ணாறு பாய்ந்தது
  • ஐந்தருவி எனும் அமுதூற்று
  • முடிவுரை

முன்னுரை:

இந்த உலகம் எழில்மிக்கது. அதனை காணும் கண்கள் கொடுத்துவைத்தவை. காட்சிகள் கற்பனையாய் விரிய கதை பிறக்கும். கவிதை துளிர்க்கும். ஏட்டில் எழுத முடியா வரிகளை வண்ணங்களால் தீட்ட ஓவியம் உருவாகும். இவை அனைத்தும் பயணம் செய்தும் போது நிகழும். இதோ என பொதிகை மலை பயணம்.

தொடர்வண்டி பயணம்:

சாளரங்கள் கனவுலகின் திறவுகோல்கள். ஆம், காட்சிகளைக் கண்ணுக்குள் விரியவைப்பவை அவைதானே? விருதுபட்டியில் செங்கோட்டை விரைவு வண்டியைப் பிடித்தேன். சாளரத்து இருக்கை, இனிதான தென்றல் தாலாட்டியபடி என் தொடர்வண்டிப் பயணம் தொடர்ந்தது.

பயணம் பற்றிய கவிதைகள்..!

பொதிகை மலையில் தவழும் மேகங்கள்:

இராசபாளையத்தைத் தொட்டதும் தென்றல் என்னைத் தொட்டது. பசுமை போர்த்திய மலைகள், கத்தரிக்கப்பட்ட பூங்காப் பொம்மைகளெனத் தெரிந்தன. சூல்கொண்ட மேகங்கள் மலைமுகட்டில் காலூன்றப் பார்த்தன.

விண்ணாறு பாய்ந்தது:

தென்காசிச் சாரலில் நனைந்தபடி குற்றாலம் சென்றடைந்தோம் பேருந்தில். வெள்ளியை உருக்கிவிட்டதென துள்ளிப் பாய்ந்தது அருவி தூரத்துப்பார்வைக்கு. கிட்டப்போய்ப் பார்த்தால் விண்ணாறு பொங்கி வழிந்து வீழ்ந்தது. தேனருவி திரையெழும்பி வானின் வழியொழுகும் என்ற திரிகூடராசப்பக்கவிராயரின் வரிகள் நினைவிலாடின. முக்குளித்தோம் மூச்சடக்கி, மூலிகை மணம் நுகர்ந்தோம்.

ஐந்தருவி எனும் அமுதூற்று:

மலைமகளின் நீர்ச்சடைகளாய் விரிந்து வழிந்த அருவிகள் மண்மகளின் பாதம் தொட்டன. கள்ளூறும் பூக்கள் உள்ளூறப் பார்க்க ஐந்தருவியில் நீராடினோம். மலைமுகடுகள் அடைகாக்க அரையாடையுடன் மேனி சிலிர்க்க, பொதிகைத் தென்றலின் தீண்டலில் மெய்சிலிர்த்தோம்.

முடிவுரை:

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும். மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

குற்றாலக்குறவஞ்சி வரிகளை நேரில் கண்டோம், பெருமகிழ்வுற்றோம். குளிரூட்டிகளும் கூரைக்காற்றாடிகளும் என்றாகிவிட்ட நம் வாழ்வில் மனிதம் துளிர்விடுவதே இப்படியொரு
இயற்கைத் தீண்டலால்தான். மீண்டும் எப்போதோ ? என மனம் ஏங்குகிறது.

பயணம் செய்யும் போது வாந்தி எடுப்பவர்களுக்கு இதை கொடுத்தால் போதும் வாந்தி வராமல் தடுக்கலாம்..!

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement