எரிபொருள் சிக்கனம் கட்டுரை | Eriporul Semippu Katturai in Tamil

எரிபொருள் சிக்கனம் பற்றிய கட்டுரை | Eriporul Sikkanam Tamil Katturaigal

Eriporul Semippu in Tamil: நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை பொருட்களின் உயர்வை கட்டுப்படுத்த எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் முக்கியான ஒன்று. நாட்டில் கிடைக்கக்கூடிய எரிபொருள் வகைகளான டீசல், பெட்ரோல் மற்றும் நிலக்கரியின் அளவானது இப்போது மிகவும் குறைந்துக்கொண்டே போகிறது. எரிபொருள்களை நாம் அதிகளவு உபயோகிக்கும் போது சுற்றுசூழலுக்கு மாசு அடைந்து நமக்கும் கேடு விளைவிக்கிறது. எரிபொருளை சேகரிக்க மிதிவண்டி ஒட்டி பழகிக்கலாம். சைக்கிள் ஓட்டுவது மாசு கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. இந்த பதிவில் எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரையை படித்து பயன் பெறுவோம்.

பொருளடக்கம்:

எரிபொருள் சிக்கனம் பற்றிய கட்டுரை

1. முன்னுரை 
2. எரிபொருள் சிக்கனம் 
3. எரிபொருள் சிக்கனத்தை பயன்பாடுகள் 
4. காரணம் 
5. முடிவுரை 

முன்னுரை:

நமது இந்திய நாட்டில் பல போர்கள் நடந்துள்ளன. அடுத்து உலகப்போர் என்று ஒன்று வந்தால் அது நீருக்குத்தான் மக்களே..அப்படி என்ன போராட்டம் என்று கேட்கிறீர்களா? அது பெட்ரோல், டீசல், நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்படும் போராட்டமாகத்தான் இருக்கும். மனிதருடைய வாழ்க்கையில் எரிபொருளானது மிகவும் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது.

தன்னம்பிக்கை கட்டுரை

எரிபொருள் சிக்கனம்:

ஒவ்வொருவருடைய மனிதர் வாழ்க்கையிலும் மின்சாரம், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்ற நீர் சம்பந்த ஆதாரத்தினை கொண்டே வாழ்க்கை நகர்ந்துக்கொண்டு இருக்கிறது. 24 மணி நேரமும் மனிதருக்கு எரிபொருளின் அவசியம் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

எரிபொருள் தயாரிப்பு நிலையை விட அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. இதனால் உலகில் அதிகமாக மாசடைந்து சுற்றுசூழல் பாதிப்படைகிறது. ஆண்டுதோறும் எரிபொருள் சிக்கனம் தேதியாக டிசம்பர் 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எனவே எரிபொருளை அதிகமாக உபயோகிப்பதை தவிர்த்து சிக்கனமாக செலவழிக்க வேண்டும்.

எரிபொருள் சிக்கனத்தை பயன்பாடுகள்:

எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வகையில் குறைவான அளவே மின் சக்தியில் எரியும் மின் விளக்குகள், சூரிய ஒளியில் எரியும் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால் எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கும். நாம் சுவாசிக்கும் காற்றினில் அதிகளவு மாசடைவதற்கு முக்கிய காரணம் அதிகமாக எரிபொருள் பயன்படுத்துவதே.

காரணம்:

நாம் சேமித்து வைத்துள்ள எரிசக்தி புதிய எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குச் சமம். நாம் மின்சாரத்தில் 1 யூனிட் அளவு சேமித்தால் 2 யூனிட் அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். எரிபொருளானது அதிகளவு வெளியாகுவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசலும் கூட சொல்லலாம். நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலானது அதிகரித்து கொண்டேதான் போகிறது. அதனால் எரிபொருளை சேமிக்க போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும் 

முடிவுரை:

மின்சார ரயிலிலும், சாதாரணமான ரயிலிலும் அதிகமாக மின்சாரம் வீணாகிறது. இது போன்ற தவறினை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். எரிபொருளை நாம் சேகரித்தால் எதிர்கால சந்ததிகளுக்கு மிகவும் பயன்படும். வாகன ஓட்டிகள் அனைவருமே எரிபொருள் சிக்கனத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil