Essay on Children’s Day in 150 Words in Tamil
ஏதேனும் ஒரு சிறப்பு நாளை நினைவுக்கூறும் வகையில் உலகம் முழுவதும் அந்நாள் மிகவும் சிறப்பாக கொண்டப்படுகிறது. அப்படி கொண்டாடப்படும் நாட்களில் குழந்தைகள் தினம் ஒன்று. குழந்தைகள் தினம் என்பது ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி மிகவும் சிறப்பாக கொண்டப்படும் தினம் ஆகும். இந்நாளில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு குழந்தைகளுக்கென்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். எனவே இத்தினம் பற்றிய சில வரிகளை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
குழந்தைகள் தின வாழ்த்து கவிதைகள்..!
Short Essay on Children’s Day in Tamil:
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக பிறந்தவர் நேரு அவர்கள்.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க அரும்பாடுபட்ட தலைவர்களுள் முக்கியமானவர் ஜவர்களால் நேரு அவர்கள். இதனால் பலமுறை சிறைவாழ்க்கையும் அனுபவித்துள்ளார்.
பல போராட்டங்களுக்கு பிறகு, நாட்டின் ஜவகர்லால் நேரு ஆவார். முக்கியமாக இவர் அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டார்.
இதன் காரணமாக தான், இந்தியக் குழந்தைகள் அவரை “சாச்சா நேரு ” (மாமா நேரு) என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர்.
முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும்⸴ இந்தியாவின் ஒளி விளக்காகத் திகழ்ந்த மாந்தருள் மாணிக்கமுமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதியே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
பிரதமர் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக திகழ்ந்தார். இதனாலேயே இவர் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
இவர் குழந்தைகளின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர். நேருவின் மீது குழந்தைகளும் மிகுந்த அன்பு கொண்டுள்ளார்கள். அதனால் தான் அவரை “நேருமாமாˮ என அன்புடன் அழைக்கின்றனர்.
எதிர்காலத்தில் உலகை ஆள போகின்றவர்கள் குழந்தைகளே.. இவர்களை போற்றி கொண்டாடும் நாளே குழந்தைகள் தினம் என கூறியுள்ளார்.
அனைத்துக் குழந்தை செல்வங்களும்,
நாட்டின் வருங்கால தூண்கள்.
இந்தியாவின் வருங்கால தூண்களுக்கு
குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..!
குழந்தைகள் தினம் பேச்சு போட்டியில் ஜெயிக்க எளிமையான பேச்சு போட்டி கட்டுரை..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |