வீட்டு விலங்கு பற்றிய கட்டுரை.!

Advertisement

வீட்டு விலங்குள் பற்றிய கட்டுரை | Veetu Vilangugal Katturai in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் பற்றி கட்டுரை வடிவில் தெரிந்துகொள்வோம். மனிதர்களின் அன்றாட வேலைகளுக்கு உதவி செய்யும் வகையில் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளே வீட்டு விலங்குகள். நாய், பூனை, பசு, வெள்ளாடு, ஆடுகள் மற்றும் கோழி போன்றவை பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படுகிறது.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவை நமக்கு பல நன்மைகளை தருகிறது. நாம் வீட்டில் வளர்க்கும் வீட்டு விலங்குகள் நமக்கு ஆரோக்கியமான மனநிலையையும் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வீட்டு விலங்குளை பற்றிய கட்டுரை ஒன்றே இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.

வீட்டு விலங்குகள் பற்றிய கட்டுரை:

வீட்டு விலங்குகள் பற்றிய கட்டுரை

முன்னுரை:

மனிதர்களுடன் நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் விலங்குகள் வீட்டு விலங்குகள் எனப்படுகின்றன. இவை மனிதர்களுக்கு பல்வேறு வகையான பயன்களை அளிக்கின்றன. வீட்டு விலங்குகள் மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இந்த கட்டுரை மூலம் வீட்டு விலங்குகளின் நன்மைகள் சிறப்புகளை பற்றி பார்க்கலாம்.

வீட்டு விலங்குகளின் வகைகள்:

வேலைகளுக்கு பயன்படும் விலங்கு, பாதுகாப்புக்கு பயன்படும் விலங்கு, உணவு தேவையை பூர்த்திசெய்யும் விலங்கு, மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் விலங்குகள்  என 4 வகையான வீட்டு விலங்குகள் உள்ளன.

domestic animal essay

வேலைக்கு பயன்படுத்தும் விலங்கு:

மாடு, எருமை போன்ற விலங்குகள் விவசாயத்தில் உதவுகின்றன. குதிரைகள், ஒட்டகம் போன்ற விலங்குகள் சுமையைச் சுமந்து செல்லப் பயன்படுகின்றன.

பசு, எருமை, ஆடு போன்றவை நம் வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் விலங்குகள்.

காளை மாடுகள் நமது நிலத்தை உழுவது விவசாயம் செய்வதற்கு பயன்படுகிறது. இப்போது அதிக அளவில் காளை மாடுகள் பயன்படுத்தவில்லை என்றாலும் அவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தில் உரமாக இன்றளவும் விவசாயத்தில் பயன்படுத்த படுகிறது. எனவே இவை விவசாயத்தின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.

பசு தெய்வத்தின் உருவமாக பார்க்கப்படுகிறது. பசு நமக்கு தேவையான உணவு பொருட்களை தருகிறது.

உணவு வழங்கும் வீட்டு விலங்குகள்:

  • ஆடுகள் நமக்கு இறைச்சியை வழங்குகிறது. செம்மறி ஆடுகள் அவற்றில் இருந்து கம்பளி கிடைக்கிறது.
  • மாடு, ஆடு, கோழி போன்ற விலங்குகள் நமக்கு பால், இறைச்சி, முட்டை போன்ற உணவுப் பொருட்களை வழங்குகின்றன.

பாதுகாப்பு வழங்கும் வீட்டு விலங்குகள்:

நாய் போன்ற விலங்குகள் வீட்டைக் காவல் காக்கின்றது. பயிற்சி செய்யப்பட்ட செல்லப்பிராணிகள் மனிதர்களுக்கு துணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துகிறது.

செல்லப் பிராணிகள்:

பூனை, நாய் போன்ற விலங்குகள் மனிதர்களுக்குத் துணையாக இருக்கின்றன. இவை மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்க உதவுகின்றது.

முடிவுரை:

வீட்டு விலங்குகள் நமக்கு துணையாக என்றும் இருக்கக்கூடியது. அதனை நல்ல முறையில் பராமரிப்பது நமது கடமையாகும். அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்தை அவற்றுக்கு நாம் வழங்க வேண்டும்.

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement