நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை..! | Essay on role of youth in country development In Tamil..!
நாட்டில் இளைஞர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. நாட்டில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதில் இளைஞர்களின் பங்கு கண்டிப்பாக இருக்கும். அந்த விஷயம் நல்லதாக இருந்தால் அதை சமூக ஊடங்கங்கள் மூலம் உடனுக்குடன் அந்த தகவலை இளைஞர்கள் தான் பகிர்வார்கள். இதே கெட்ட விஷயமாக இருந்தால் அந்த செயலை எதிர்த்து போராடுவதும் இளைஞர்களாக தான் இருக்கிறார்கள். இப்படி நாட்டில் நடக்க கூடிய அனைத்து விஷயங்களிலும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
நாட்டில் உள்ள மாநிலங்களை யார் ஆள வேண்டும் என்றும் இளைஞர்கள் தான் தங்கள் வாக்கை பதிவு செய்து முடிவு செய்கிறார்கள். இப்படி இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும் தங்கள் பங்களிப்பை அளிக்கிறார்கள். இன்றைய பதிவில் நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் பங்களிப்பு கட்டுரையை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை:
குறிப்புச்சட்டகம்:
- முன்னுரை
- நாட்டின் பொருளாதாரம்
- சமுதாய தொண்டு
- உலக அளவில் – இந்தியா
- வளர்ந்த நாடுகள்
- முடிவுரை
முன்னுரை:
“என்னிடம் நூறு இளைஞர்களை தாருங்கள் நான் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன்” என்றார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை இளைஞர்கள் மேல் வைத்தார்கள் முன்னோர்கள். எதிர்காலம் மட்டுமன்றி நிகழ்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வளர்ச்சி சமத்துவத்தைப் பரவலாக்குவதற்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சி பங்காளிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். நம் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டின் பொருளாதாரம்:
ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தான் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மேம்பட்ட வேண்டுமாயின் அங்குள்ள உழைக்கும் வர்க்கம் மிகவும் ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். இளைஞர்களுடைய கடினமான முயற்சிகள் தான் நமது நாட்டின் பொருளாதாரத்தை பல மடங்காக அதிகரிக்க உதவுகிறது. இவர்களின் ஈடுஇணையற்ற, நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்பால் நவீன இந்தியா சவால்களையும் சறுக்கல்களையும் எதிர்கொண்டு அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து சமூக, பொருளாதாரத் தளத்தில் வளமான பாதையில் பயணித்து வருகின்றது.
சமுதாய தொண்டு:
இளைஞர்கள் புதுமையான மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைகள் உடையவர்கள் தேசத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை இளைஞர்களால் சிறப்பாக செயல்படுத்த முடியும். நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக பல்வேறு தொண்டுகள் செய்கிறார்கள்.
உலக அளவில் – இந்தியா:
இன்று உலக அரங்கில் இந்திய இளம் சமுதாயத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கல்வி, அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் சர்வதேச வணிகம் என்பவற்றில் இந்திய இளைஞர்கள் தடம் போதிக்கிறார்கள். உலகில் சில நாடுகள் தான் மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை வரப்பிரசாதமாகப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர்.
வளர்ந்த நாடுகள்:
அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் பெரிய மாற்றங்களை கொண்டுவருகிறது. இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாக உருவாகி நிற்கிறார்கள். வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அவர்களின் உறுதிமிக்க பங்களிப்பும் தான்.
முடிவுரை:
இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக கருதப்படுகிறார்கள். இளைஞர்களை சரியான திசையில் பயன்படுத்தினால் அவர்கள் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும். னவே ஒவ்வொரு நாட்டிலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. பன்முகத் திறன் கொண்ட இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் தனித் திறன்களை இழந்துவிடாமலும் அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தி விடாமலும் இருக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் முறையான கண்காணிப்பு தொடரும் பட்சத்தில் அவர்கள் வளர்ச்சிக்கான மாற்று சக்திகளாக அடையாளம் காணப்பட்டு திறன்மிகு இந்தியா மட்டுமல்ல வல்லரசு இந்தியாவை, வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். அதற்கு அரசுகள், மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு இயக்கங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்.
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை | Indiavin Valarchi Katturai in Tamil
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |