எட்டுத்தொகை நூல்கள் பற்றிய கட்டுரை.! | Ettuthogai Noolgal Katturai Tamil

Advertisement

எட்டுத்தொகை நூல்கள் பற்றிய கட்டுரை வரைக

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் எட்டுத்தொகை நூல்கள் பற்றிய கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பதினெண் மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகும். இவற்றில் எட்டுத்தொகை நூல் பற்றி பார்க்கலாம். சங்க இலக்கியங்களில் ஒன்றான எட்டுத்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு என இந்த எட்டு நூல்களின் தொகுப்பே எட்டுத்தொகை ஆகும்.

இந்த எட்டு நூல்களையும் வெவ்வேறு புலவர்கள் இயற்றியுள்ளார். இந்த இலக்கிய நூல்கள் சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் அகம் புறம் சார்ந்த வாழ்க்கை முறையினையும் சமூக வாழ்கையினையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, எட்டுத்தொகை நூல்கள் பற்றி கட்டுரை வடிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Ettuthogai Noolgal Patri Katturai in Tamil:

Ettuthogai Noolgal Patri Katturai

எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை
  • எட்டுத்தொகை நூல்கள் யாவை
  • அகம் சார்ந்த நூல்கள்
  • புறம் சார்ந்த நூல்கள்
  • அகமும் புறமும் கலந்த நூல்கள்
  • எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்
  • முடிவுரை

முன்னுரை:

எட்டுத்தொகை நூல்கள் என்பது எட்டு நூல்கள் கொண்ட நூல்களின் தொகுப்பு ஆகும். எட்டுத்தொகை நூல்கள் பொதுவாக எண் பெருந்தொகை நூல்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு நூலும், பல புலவர்களால் பல்வேறு காலத்தில் எழுதப்பட்டு பின்னர் ஒன்றாக  சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றிலுள்ள பல பாடல்களின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. இந்த எட்டுத்தொகை நூல்களில் அகம் சார்ந்த நூல்கள், புறம் சார்ந்த நூல்கள் மற்றும் அகம் புறம் இரண்டும் கலந்த நூல்கள் போன்றவை உள்ளது. இந்நூல் ஆனது தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்பட்டமையால் தொகை என்றும் அழைக்கப்படுகிறது.

எட்டுத்தொகை நூல்கள் யாவை:

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. பதிற்றுப்பத்து
  5. பரிபாடல்
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8. புறநானூறு

இவை அனைத்தும் எட்டு தொகை நூல்கள் ஆகும். இந்நூல்களில் ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 25 அரசர்களும், 30 பெண்பாற்புலவர்களும் உண்டு. 102 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவிலை. இதனை தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் விவரம் பின்வருமாறு:

எட்டுத்தொகை நூல்கள் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
நற்றிணை பெயர் தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை பூரிக்கோ பெயர் தெரியவில்லை
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்து பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
பரிபாடல் பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
கலித்தொகை நல்லந்துவனார். பெயர் தெரியவில்லை
அகநானூறு உத்திர கண்ணனார். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
புறநானூறு பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை

இந்நூல்களில் நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் போன்ற நூல்களின் ஆசிரியர் யாரென்று இன்று வரை தெரியவில்லை.

அகம் சார்ந்த நூல்கள்:

எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு ஆகியவை அகம் சார்ந்த நூல்கள் ஆகும். அகத்தை பற்றி கூறும் நூல் ஆகும். அகம் என்பது, சங்க காலத்தில் தலைவன் தலைவி இருவருக்கும் மனதில் தோன்றும் உள் உணர்வுகளை அதாவது காதல் போன்ற உணர்வுகளை எடுத்துரைக்கும் நூல் ஆகும்.

இவற்றில் நற்றிணை 400 பாடல்களையும், குறுந்தொகை 400 பாடல்களையும், ஐங்குறுநூறு 500 பாடல்களையும், கலித்தொகை 150 பாடல்களையும்  அகநானூறு 400 பாடல்களையும் கொண்டுள்ளது.

தமிழ் இலக்கிய நூல்கள் பெயர்கள்

புறம் சார்ந்த நூல்கள்:

எட்டுத்தொகை நூல்களில் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து இவை இரண்டும் புறம் சார்ந்த நூல்கள் ஆகும். புறத்தை பற்றி கூறும் நூல் புறம் சார்ந்த நூல்கள் ஆகும். புறம் எனப்படுவது சங்க காலத்து மன்னர்களுடைய போரும்  வெற்றியும், ஈகையும் புகழும் போன்ற செய்திகளை வெளிப்படுத்தக்கூடிய பாடல்களாக அமைந்துள்ளது.

இவற்றில் புறநானூறு 400 பாடல்களை கொண்டுள்ளது. சேர அரசர்கள் 10 பேர் பற்றி 10 புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடியே தொகையே பதிற்றுப்பத்து. இவற்றில் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை. மீதமுள்ள 80 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

அகமும் புறமும் கலந்த நூல்கள்:

எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்து வருவது பரிபாடல் ஆகும். சங்க கால எட்டுத்தொகை நூல்களிலே அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டும் இணைந்து பாடப்பட்ட ஒரு நூலாக பரிபாடல் மட்டுமே இருக்கிறது. இந்நூலில் காதல் பற்றியும் மன்னர்களின் வீரம் கொடை பற்றிய செய்திகளும் காணப்படுகிறது. பா வகை கொண்டு எழுதப்பட்ட பரிபாடலில் மொத்தம் 70 பாடல்கள் இருப்பினும் அவற்றில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நூலில் முருகப்பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும் வைகையில் நீராடுவோரின் பல்வேறு செயற்பாடுகளும் அடங்கியுள்ளது.

எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:

எட்டுத்தொகை நூல்கள்  வேறு பெயர்கள் 
நற்றிணை
  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி
குறுந்தொகை
  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
  • இரும்புக் கடலை
பரிபாடல்
  1. பரிபாட்டு
  2. ஓங்கு பரிபாடல்
  3. இசைப்பாட்டு
  4. பொருட்கலவை நூல்
  5. தமிழின் முதல் இசைபாடல் நூல்
கலித்தொகை
  • கலி
    குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்
அகநானூறு
  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு
புறநானூறு
  • புறம்
  • புறப்பாட்டு
  • புறம்பு நானூறு
  • தமிழர் வரலாற்று பெட்டகம்
  • தமிழர் களஞ்சியம்
  • திருக்குறளின் முன்னோடி.

முடிவுரை:

தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய காலகட்டமாகவே சங்க காலம் இருக்கிறது. அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை எட்டுத்தொகை நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். எட்டுத்தொகை நூல்களில் பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும்,மறக்குடி மகளிரின் மாண்பினையும், போர் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும், புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறியலாம். ஆகையால் எட்டுத்தொகை நூல்கள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

சங்க இலக்கியம் கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement