வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹாக்கி விளையாட்டு கட்டுரை.!

Updated On: December 20, 2024 4:08 PM
Follow Us:
Hockey Game Essay in Tamil
---Advertisement---
Advertisement

ஹாக்கி விளையாட்டு கட்டுரை | Hockey Game Essay in Tamil

வாசர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஹாக்கி விளையாட்டு கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம் . ஹாக்கி விளையாட்டினை வளைதடிப் பந்தாட்டம் என்று கூறுவார்கள். இது குழுவாக விளையாடக்கூடிய விளையாட்டு ஆகும். ஒவ்வொரு அணியிலும் 11 வீரரர்கள் இருப்பார்கள்.

ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் ஒரு மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டு ஆகும். இது இந்தியாவின் தேசிய விளையாட்டாக திகழ்கிறது. இந்த விளையாட்டினை பற்றி கட்டுரை வடிவில் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Essay on Hockey in Tamil:

ஹாக்கி விளையாட்டு கட்டுரை

முன்னுரை:

பிரபலமான விளையாட்டுகளில் ஹாக்கி விளையாட்டும் ஒன்று. ஹாக்கி விளையாட்டு ஆனது, ஒழுங்கு, ஒற்றுமை மற்றும் ஆற்றலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மட்டை மற்றும் ஒரு பந்தினை கொண்டு இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. ஒரு பந்தை மட்டையினால் அடித்து கோலுக்குள் அடிக்க வேண்டும். கோலுக்குள் செல்லும் போது புள்ளிகள் அளிக்கப்படுகிறது. அதிகப்படியான புள்ளிகள் எந்த அணி பெற்றிருக்கிறதோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.

ஹாக்கி விளையாட்டின் தாயகம் எது தெரியுமா..?

விதிமுறைகள் மற்றும் அணிகள்:

அணிகள் – ஹாக்கி விளையாட்டில் இரண்டு அணிகள் விளையாடுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் இருப்பார்கள். இதில் ஒரு வீரர் கோல் கீப்பராக செயல்படுவார். விளையாட்டின் நோக்கம், பந்தை எதிரணியின் கோல் பக்கத்தில் அடித்து முக்கி அடிப்பதாகும்.

ஆடுகளம் – ஹாக்கி விளையாட்டின் ஆடுகளம் செவ்வக வடிவமைப்பில் இருக்கும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.

ஆடும் நேரம் – ஹாக்கி விளையாட்டானது இரண்டு பகுதியாக விளையாடப்படும். முதல் பகுதி 35 நிமிடம் விளையாடப்படுகிறது. அடுத்து 5 நிமிடம் ஓய்வு நேரம். இரண்டாம் பகுதி 35 நிமிடங்கள் விளையாடப்படும். மொத்தம் 75 நிமிடம் விளையாடப்படுகிறது.

விளையாட்டு உபகரணங்கள்:

ஹாக்கி விளையாட்டில் முக்கிய உபகரணமாக கைக்கருவி (Stick) மற்றும் பந்து (Ball) பயன்படுத்தப்படுகிறது. ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தானது,  குறைந்தபட்சம் 156 கிராம் முதல் அதிகபட்சம் 163 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இதன் சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும். கைக்கருவி (Stick) ஆனது,  நீளமானதாகவும், வளைந்த வடிவத்துடன் இருக்கும்.

இந்தியாவில் ஹாக்கி:

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய ஹாக்கி அணிகள் சர்வதேச அளவில் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள். இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி கருதப்படுகிறது. 1928 முதல் 1956 வரை இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் ஆறு தொடர்ச்சியான தங்கப் பதக்கங்களை பெற்றது.

கால்பந்து விளையாட்டு கட்டுரை

முடிவுரை:

ஹாக்கி ஒரு விளையாட்டாக மட்டுமின்றி, ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் உடல் ஆற்றலை மேம்படுத்தும் விளையாட்டாகவும் கருதப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகள் நம் வாழ்க்கையில் வெற்றியையம் மகிழ்ச்சியையும் மட்டுமின்றி ஒழுங்கும் ஒற்றுமையும் வளர்கிறது. அழுத்தத்தை குறைத்து, உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஹாக்கி ஓட்டம், சுழல் மற்றும் வீச்சு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது மூலம் உடல் உறுதியை அதிகரிக்கிறது.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now