கட்டுரை எழுதுவது எப்படி | How to Write Katturai in Tamil

How to Write Katturai in Tamil

கட்டுரை எழுதுவது எப்படி தமிழ் | Katturai Eluthuvathu Eppadi in Tamil

பொதுநலம் அன்பர்களுக்கு பணிவான வணக்கம். இந்த பதிவில் கட்டுரை எழுதுவது எப்படி என்று பார்க்கலாம். கட்டுரை என்றாலே அதற்கு கச்சிதமான வடிவமைப்பு தேவை. கட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டது போல தோன்றவே கூடாது. கட்டுரையில் நாம் ஒரு செய்தியை சொல்லும் போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கட்டுரையில் இருந்து எடுத்து முன்வைக்க வேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என சம்பந்தம் இல்லாததை சொல்வதை தவிர்க்கவும். கட்டுரைகளில் பல வகையான கட்டுரை உண்டு. அவை விளக்க கட்டுரை, விவாகக் கட்டுரை, பயணக் கட்டுரை, அனுபவ கட்டுரை என பலவகையான கட்டுரை இருந்தாலும் பொதுவாக கட்டுரையை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொள்ளலாம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

கட்டுரை எழுதுவது எப்படி:

அமைப்பு:

கட்டுரைக்கு முக்கியம் முன்னுரை, மைய கருத்து, முடிவுரை. இந்த வடிவில் இருந்தால் தான் கட்டுரையானது முழுமை பெறும். படிப்பதற்கும் வசதியாக இருக்கும்.

முன்னுரை:

படிக்கும் வாசகர்களுக்கு முன்னுரையிலே நாம் சொல்ல வந்ததை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு இருத்தல் வேண்டும். கட்டுரையில் முன்னுரையானது அதிக அளவில் இல்லாமல் சிறிய அளவில் இருத்தலே சிறந்தது.

மையக்கருத்து:

நாம் எழுதும் கட்டுரையில் அதற்கான மையக்கருத்தினை முதல் வரியிலையே வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதாவது கட்டுரை இதனை பற்றியது தான் என்று அவர்களுக்கு படித்தவுடனே தெரிந்துக்கொள்ளுமாறு இருக்க வேண்டும்.  நாம் எழுதும் கட்டுரையின் பொருளை விளக்கி கூறும்போது பத்தி பிரித்து எழுத வேண்டும்.

ஒரு பத்தி (பந்தி) எழுதும் போது அதன் கருத்து முழுமையாக இருக்க வேண்டும். ஒரு பத்தி (பந்தி) முழுமையாக நிறைவடைந்த பின் அடுத்த பத்தியில் (பந்தியில்) வேறு கருத்துக்களை எழுத தொடங்க வேண்டும். பத்தி (பந்தி) பிரிக்கும் போது கருத்தின் அடிப்படையிலே பத்தி பிரிய வேண்டும்.

மையக்கருத்தை விளக்கும் இடத்தில் அதற்கான ஆதாரம், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அனுபவங்கள் போன்றவற்றை இணைத்து எழுதி வந்தால் கட்டுரை நயம் நன்றாக இருக்கும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை

கட்டுரை எழுதும் போது நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

  1. கட்டுரை எழுத தொடங்கும் முன் கட்டுரையின் தலைப்பினை படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் வகையில் விளக்கவும்.
  2. படிப்பவர்கள் அனைவருக்கும் தெளிவான மொழிநடையில் விளக்க கூடியதாக கட்டுரையை எழுத வேண்டும்.
  3. கட்டுரையில் எழுத்து பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும்.
  4. குறிப்பாக கட்டுரையில் சரியான நிறுத்தல் குறியீடுகள், மேற்கோள் குறிகள் பொருத்தமான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
  5. கட்டுரை தலைப்பை நோக்கி ஏன்..? எப்படி..? எதற்கு..? யார்..? என சில கேள்விகளை கேளுங்கள் அதற்கு விடையாக வருவதை கொண்டு சிறந்த கட்டுரையினை எழுத முடியும்.
  6. நீங்கள் எழுதும் கட்டுரை படிப்பவர்களின் மனதை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும். வாசகர்கள் கட்டுரையை ஆர்வமாக படிக்கும் படி எழுத வேண்டும்.

முடிவுரை:

முடிவுரை என்பது கட்டுரையில் நாம் கூறிய மையக்கருத்தை தெளிவாக வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அத்துடன் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்து கூறுவதாக அமைய வேண்டும்.

கட்டுரையின் முடிவுரையை அதிகமாக எழுதுதல் கூடாது. முடிவுரையை நான்கு அல்லது ஐந்து வரிகளுக்குள் எழுதி முடிக்க வேண்டும். அதுவே கட்டுரைக்கு சிறப்பு.

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil