இணைய வழிக்கல்வி கட்டுரை..! | Inaya Vali Kalvi Katturai In Tamil..!
இன்றைய சமுதாயம் இணையத்தை அடிப்படையாக கொண்டு தான் எந்த செயலும் செயல்படுகிறது. கல்வி கூட இணையம் மூலம் தான் கற்றுக்கொள்கிறார்கள். 2000 ஆம் ஆண்டிற்கு பிரேக்கில் இருந்து தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது. சமீப காலமாக மக்கள் அனைவரும் இணையத்திற்கு அடிமையாகி விட்டனர் எல்லா செயல்களையும் இணையம் மூலம் தான் கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்கள் கூட இணையம் மூலம் அனைத்து விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். இந்த பதிவில் இணைய வழில்கல்வி பற்றிய கட்டுரை தான் பார்க்கப்போகிறோம்.
இணைய வழிக்கல்வி கட்டுரை:
குறிப்புச்சட்டகம்:
- முன்னுரை
- தர்காலமும் இணையமும்
- இணைய வழிக்கல்வி நன்மைகள்
- இணைய வழிக்கல்வி தீமைகள்
- முடிவுரை
முன்னுரை:
நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பது தொழில்நுட்ப யுகத்திலாகும். எனவே மனிதன் தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னுடைய எல்லா வேலைகளையும் இலகுவாக செய்து கொள்ளும் வகையில் இணையத்தை பயன்படுத்துகின்றான். அந்த வகையில் கல்வியும் இணையத்தின் மூலமே இலகுவாக தேடி கற்றுக் கொள்ளும் வகையில் இன்றைய நிலைமை மாறிவிட்டது.
தர்காலமும் இணையமும்:
இன்றைய உலகம் நாளுக்கு நாள் மாற்றங்களுக்கு உட்பட்டு புதிய மாற்றங்களுடனேயே செயற்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே நவீன யுகத்தில் மக்கள் அனைவரும் தங்களது வேலைகளை இணையதளத்தின் மூலமே செய்து வருகின்றனர். அதன் விளைவாகவே இன்று மருத்துவம், வானவியல், சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் இணையதளத்துக்குள் அடங்கிவிட்டன. இன்றைய மாணவர்களும் தங்களுடைய கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலகுவான ஒரு வழிமுறையாகவே இணையதளத்தை பயன்படுத்துகின்றனர்.
இணைய வழிக்கல்வி நன்மைகள்:
நெருக்கடியான காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த போது, தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இணைய வழி கல்வியே உதவியாக இருந்தமையைக் குறிப்பிடலாம்.
மேலும் இந்த இணைய வழி கல்வியானது பயண செலவு, உணவு , தங்குமிட செலவு எதுவுமே இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வியினை மேற்கொள்வதற்கு உதவுவதாக காணப்படுகின்றது. அத்தோடு மாணவர்களுக்கு தேவையான சகல விதமான கேள்விகளுக்கான பதில்களையும், மேலதிக குறிப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கு இந்த இணைய வழிக் கல்வி உதவுகின்றது எனலாம்.
இணைய வழிக்கல்வி தீமைகள்:
இணைய வழி கல்வியில் மாணவர்கள் ஆசிரியர்கள் என்ற முகத்துக்கு முகமான கல்வி முறையினை காண முடியாது. அதாவது நேரடியாக கற்பது போன்று தெளிவாகவும், சந்தேகம் இன்றியும் கற்கின்ற வாய்ப்பை மாணவர்கள் இந்த இணைய வழிக் கல்வியில் இழக்கின்றனர்.
முக்கியமாக தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு வசதி இல்லாத மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாத ஒரு நிலைமையைக்கு உள்ளாகின்றனர். மேலும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகையில் கல்விக்காக மட்டுமின்றி தவறான வழிமுறைகளிலும் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இவ்வாறான பாதகங்களும் இணைய வழிக் கல்வியில் காணப்படுகின்றன.
முடிவுரை:
இன்றய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தங்களுடைய கல்வி அறிவினையும், தொழில்நுட்ப அறிவினையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இணைய வழி கல்விக்காக தொழில்நுட்பங்களை பாயன்படுத்துகையில், அதில் நன்மை, தீமை ஆகிய இரண்டு பக்கங்களும் காணப்படவே செய்யும். எனவே மாணவர்கள் தொழில்நுட்பங்களை பாயன்படுத்தும் போது சரியான முறையில் அதனை பாவித்து அதன் மூலம் பயன்களை பெற்றுக் கொள்வது அவசியமானதாகும்.
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |