சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் 76 வது சுதந்திரத்தை பற்றிய சில வார்த்தைகள்

Advertisement

76 வது சுதந்திர தின விழா கட்டுரை

அனைத்து தேசப்பற்று கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் நம் கொண்டாட இருக்கும் 76 வது தினத்தை பற்றி ஒரு சில வார்த்தைகளை படித்தறிவோம். பொதுவாக இந்த தினத்தை நாம் இந்தியர்களின் அமைதி நாள், இந்திய வளர்ச்சி அடைந்த நாள், நம் தேசத்தின் உகந்த நாள் என்று பல வார்த்தைகளால் சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்து வார்த்தைக்கும் மிகையாகும். வாங்க சுதந்திர தினத்தை பற்றி ஒரு சில வார்த்தைகளை இப்போது பார்ப்போம்.

தொடக்க இந்தியா:

நமது இந்தியாவை நம்மை தவிர வெவ்வேறு நாட்டவர்கள் ஆண்டு வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சொந்த மண்ணில் நமே அவர்களுக்கு அடைமையாக வாழ்ந்து வந்தோம். அவர்களின் ஆதிக்கம் நாளடைவில் அதிகமாக ஆனது. இதனை இந்தியர்கள் புரிந்துகொண்டால் அவர்களை எதிர்க்கவும் தடுக்கவும் முடியாமல் அவர்களுக்கு அடிமையாக வாழ்ந்து வந்தார்கள்.

வெளிநாட்டவர்களின் வருகை:

முதலில் வெளிநாட்டவர்களின் வருகை என்பது வணிகம் செய்யும் என்ற முடிவில் நம்  தேசத்திற்கு கடல் வழியாக வணிகம் செய்ய வந்தார்கள். போர்ச்சுகீசிய நாட்டை சார்ந்த வாஸ்கோடகாமா. இவரை பின் தொடர்ந்து ஐரோப்பியர்கள், டச்சு காரர்கள், ஆங்கிலேயர்கள், போன்றோர் வணிகம் செய்யும் நோக்கத்தில் இந்தியாவின் பல கடலோர பகுதிகளில் தடம் பதித்தனர்.

ஆங்கிலேயர்கள் ஐரோப்பியர்களை சூழ்ச்சியால் வீழ்த்திய பின்னர் அப்போதைய முகலாய பேரரசர் ஜஹாங்கிர் அனுமதியுடன் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் அமைத்தனர். வரி செலுத்தாமல் வாணிபம் செய்த ஆங்கிலேயர்களை வங்கதேச நவாப் “சிராஜ் உட துலாத்” என்பவர் எதிர்த்ததால் அவரை வீழ்த்த 1757-இல் ஆங்கிலேயர்கள் “பிளாசி யுத்தத்தை” தொடங்கினர்.

இதில் வங்கதேச நவாப் தோல்வியுற்றதால், இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசரிடம் அனுமதி பெற்று வங்கதேசத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டனர்.இதுவே பிற்காலத்தில் இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு அடித்தளமாக அமைந்தது.

பின்னர் இந்தியர்கள் மீது ஆங்கிலேயர்கள் விதித்த வரிகள், நிலங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் இந்தியா பெரும் பஞ்சத்துக்கு தள்ளப்பட்டது. கிரேட் பாமின் ஆஃப் 1876–78’ மற்றும் ‘இந்தியன் பாமின் ஆப் 1899–1900ல்’ ஆகிய பஞ்சங்களால் 2-கோடிக்கும் மேற்பட்ட மக்கள் செத்து மடிந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டு நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டதை கண்டு கொதித்தெழுந்த இளைஞர்கள் பலர் சேர்ந்து “1857 இந்திய கலகம்” என்ற இயக்கத்தினை உருவாக்கினர். இதுவே “முதல் இந்திய போர்” என்று அழைக்கப்பட்டது. ஒரு வருட போராட்டத்திற்கு பின்னர் இந்த இயக்கத்தை ஒடுக்கி அதன் தளபதியை நாடு கடத்தி முகலாய வம்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் ஆங்கிலேயர்கள்.

சுதந்திர இந்தியா:

ஆங்கிலர்களின் கொடுமையாக்களை கண்ட காந்தியடிகள் போராட்டங்களில் இடுப்பட்டார். அதன் அவரின் கடுமையான போராட்டத்தை கண்டு அவர்க்கு நிறைய வீரர்கள் பக்கபலமாக போராடினர். அப்போது காந்தியடிகள் இந்தியாவுக்கு எது மிகவும் பலம் குறைந்து இருக்கிறது என்று யோசித்தார். பலவீனத்தை அறிந்துகொண்ட அவர் அனைவருக்கும் அவரின் கருத்துக்களை சொல்லி அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொன்னார் அதன் கேட்டுக்கொண்டு அனைத்து மக்களும் அவருக்கு உறுதுணையாக நின்று போராடினர்.

ஆங்கிலயேயர் எத்தனை சோதனை கொடுத்தாலும் அவர்கள் ஒற்றுமையை யாருக்காவும் விட்டுக்கொடுக்கலாமல் ஒற்றுமையாக போராடினார்.

அவர்களின் தொடர்ந்த போராட்டத்தை கண்டு ஆங்கிலயேர்கள் நாட்டைவிட்டு வெளியேற நினைத்தார்கள். அதன் பின் இந்தியா ஆகஸ்ட் 15 சுதந்திர நாடக மாறியது. அதன் பின் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினமாக கொண்டாடபடுகிறது.

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement