Independence Day Speech in Tamil 2024
பொதுவாக நாம் பள்ளி பருவத்தில் தமிழில் கட்டுரை எழுதுவது அல்லது பேச்சு போட்டியில் பேசுவது என எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொள்வோம். அதில் வருகின்ற 15-ம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் வருகிறது. இந்நாளில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் சுதந்திர பேச்சு போட்டி கட்டுரையை காண்போம்.
மகாத்மா காந்தியும் சுதந்திர போராட்டமும்:
இந்தியா சுதந்திரம் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய பெருமை மகாத்மா காந்தியை சாரும். இவர் எடுத்த சத்தியாகிரக போராட்டம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவியதோடு மட்டுமில்லாமல் மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது.
1924-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். மகாத்மா கண்ட்ஜி அவர்கள் சுதந்திர போராட்டத்திற்கு மட்டுமில்லாமல் மது ஒழிப்பு, தீண்டாமை, சமூக நீதி பல சீர்திருத்தங்களுக்காக போராடியுள்ளார.
1930-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து 240 மைல் தொலைவில் உள்ள தாண்டிக்கு 23 நாட்கள் பேரணியாகச் சென்று, மக்களின் ஆதரவுடன் அங்குள்ள கடல்நீரில் இருந்து உப்பைக் காய்ச்சி அங்கிருந்த அனைவருக்கும் உப்பை விநியோகித்தார். இதனால் தான் அங்கிருந்த மக்களும், காந்தியும் சிறையில் அடைக்கப்பட்டார். போருக்கு பிறகு தான் பிரிட்டிஷ் அரசு உப்பு மீதான வரியை திருமப பெற்றது.
சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் 76 வது சுதந்திரத்தை பற்றிய சில வார்த்தைகள்
இவர் எதிர்ப்பாராத விதமாக 1948-ம் ஆண்டு ஜனவரி, 30 அன்று டெல்லியில் நாதுராம் கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். இவர் மறைந்த தினத்தை தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
வ. உ. சியும் சுதந்திர போராட்டமும்:
ஆங்கிலேயர் வணிகத்திற்காக தான் நம் நாட்டிற்கு வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்தது. அவர்கள் தங்களின் வணிகத்தை பரப்பியதோடு மட்டுமில்லாமல் நம்மையும் அடிமைப்படுத்த ஆரம்பித்தனர். 1906-ம் ஆண்டு சுதேசி நாவாய் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தை முறைப்படி பதிவு செய்த அவர் பல பேரின் உதிவியோடு கப்பலை வாங்கி அதை இந்தியா, இலங்கை இடையே பயணிக்க செய்தார். இந்திய மக்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் கப்பலை புறக்கணித்து வ. உ. சியின் கப்பலில் பயணிக்க துவங்கினர்.
ஆங்கிலேயர்கள் எப்படியாவது சுதேசி நாவாய்ச் சங்கத்தின் கப்பலை அழிக்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக அவர்களின் கப்பலில் இலவச பயண திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். மக்கள் ஆங்கிலேயர்களின் திட்டத்தை அறிந்து கொண்டு வ. உ. சியின் கப்பலில் பயணித்தார்கள். வ. உ. சி ஆங்கிலயேர்களுக்கு எதிராக மக்களை திருப்பி விடுகிறார் என்ற குற்றம் சாட்டி வ. உ. சி சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு 6 ஆண்டுகள் குறைக்கப்பட்டது. இவரை விடுதலை ஆன பிறகு சுதந்திர போராட்ட நிலை முற்றிலும் மாறியிருந்தது. இவர் அகிம்ஸை வழியை விரும்பவில்லை. அதனால் சுதந்திர போராட்டத்திலுருந்து தன்னை சற்று ஒதுக்கி கொண்டார்.
மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்:
தன நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது என்று நினைத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இவர் இந்தியா வந்ததும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் அரசியல் குருவாக சி.ஆர் தாசை கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 1922-ம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு எடுத்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி நேதாஜி விமானத்தில் பயணித்த போது பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.
காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள் |
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |