Advertisement
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை | Indiavin Valarchi Katturai in Tamil | வளர்ச்சி பாதையில் இந்தியா கட்டுரை
உலக நாடுகளுள் மிக சிறந்த நாடாகவும், புகழ்பெற்ற நாடாகவும் இருப்பது நமது இந்தியா. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாம் இப்பொழுது சுதந்திரமாக சுற்றி திரிவதற்கு காரணமாக இருப்பவர்கள் இந்த நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த அனைத்து தலைவர்களும் தான். சுதந்திரத்திற்கு பிறகு நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி எண்ணில் அடங்காதது. நாம் இந்த பதிவில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.
சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை |வளரும் இந்தியா கட்டுரை | சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை:
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
பொருளாதார வளர்ச்சி |
தொழில்நுட்ப வளர்ச்சி |
இராணுவ வளர்ச்சி |
அறிவியல் வளர்ச்சி |
இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு |
முடிவுரை |
முன்னுரை – இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை:
- செல்வங்கள், தொன்மைகள், பழக்கவழக்கங்கள், கல்வி, விளையாட்டு துறை, விண்வெளித்துறை, தொழில்நுட்பம் என அனைத்திலும் நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடுகிறோம். ஜனநாயக நாடாக இருப்பதால் இந்தியா பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி – இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை:
- தொழில் துறைகளும், தொழில் நுட்ப வளர்ச்சியும், கைத்தொழில்களும், விவசாயம்⸴ போக்குவரத்து துறைகளும் அதிகரித்ததால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தன. பொருளாதார வளர்ச்சி மட்டும் இன்றி கல்வி வளர்ச்சியிலும் இந்தியா சாதனை படைத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி – Indiavin Valarchi Katturai in Tamil:
- எனது இந்தியா பற்றிய கட்டுரை: மனிதனின் வேகத்திற்கும், திறனுக்கும் ஈடுகொடுக்கும் படி இந்தியாவில் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்றே சொல்லலாம். கணினி, தொலைபேசி, பொறியியல் துறை, விவசாயத்திற்கு நீர் பாய்ச்சவும், களையெடுக்கவும், அறுவடை செய்யவும் தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது.
இராணுவ வளர்ச்சி:
- நாம் இன்று எந்த கவலையும் இல்லாமல் இருப்பதற்கும், அயல்நாட்டவரின் தாக்குதல்களிலும் இருந்து விடுபடுவதற்கு காரணம் இராணுவத்துறை. போரிலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்திய இராணுவம் தனது இராணுவ பலத்தை உயர்த்தி கொண்டே உள்ளது.
அறிவியல் வளர்ச்சி – இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை:
- விண்கலங்களை உருவாக்கியதன் மூலம் பூமியில் வாழ்கின்ற நாம் இந்த பூமியை விட்டு விண்வெளியில் வசிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி இந்தியாவில் யாரும் எட்ட முடியாத வளர்ச்சியை பெற்றுள்ளது. படிப்படியாக அறிவியலில் ஏற்பட்ட மாற்றங்கள் மனித வாழ்க்கையை மிகவும் எளிமையாக மாற்றிவிட்டன.
- அறிவியல் வளர்ச்சி இந்தியாவை மட்டுமல்ல இல்லத்தரசிகளின் வேலையையும் எளிமையாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
தூய்மை இந்தியாவின் மாணவர்களின் பங்கு |
இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு:
- இந்தியாவின் சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் பாடுப்பட்டதை போல, இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்கள் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர். விளையாட்டு துறை, அறிவியல், தத்துவம் என அனைத்திலும் இளைஞர்களின் பங்களிப்பு முதன்மையானதாக உள்ளது.
முடிவுரை – Indiavin Valarchi Katturai in Tamil:
- இந்தியாவில் கல்வி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் முன்னேறி கொண்டு இருந்தாலும் ஏழை மக்களின் வாழ்வில் வளர்ச்சி என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
- இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்றால் இந்த திருநாட்டில் லஞ்சம், ஊழல் என்பது இல்லாமல் போக வேண்டும். இவை இல்லாமல் போனால் இந்தியா இன்னும் பல உயர்ந்த இடத்தை அடைய முடியும்.
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
Advertisement