இன்றைய கல்வி முறை கட்டுரை | Indraya Kalvi in Tamil Katturai

Indraya Kalvi in Tamil Katturai

இன்றைய கல்வி முறை வளர்ச்சியா வீழ்ச்சியா கட்டுரை | Indraya Kalvi Murai in Tamil Essay

ஒரு நாடு பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான ஒன்று கல்வி. கல்வி தான் மக்களின் அறியாமை மற்றும் மூடநம்பிக்கையை வேரறுக்கும் ஆயுதமாக இருக்கிறது. ஆனால் இப்போது உள்ள கல்வி முறை மாணவர்களுக்கு சுகமாய் இருப்பதை விட சுமையாய் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.சரி வாங்க நாம் இன்றைய கட்டுரை பதிவில் இன்றைய கல்வி முறையை பற்றி விரிவாக காண்போம்.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
அன்றைய கல்வி முறை
இன்றைய கல்வி முறை
கல்வியின் நோக்கம்
முடிவுரை

 

இன்றைய கல்வி முறை கட்டுரை

முன்னுரை:

இந்த உலகத்தில் நம்முடைய பங்கு என்னவென்று தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி தருவது கல்வி தான். ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து வேறுபட்டு சக்தி வாய்ந்த உயிரினமாக மாறுவதற்கு கல்வி தான் அடிப்படை. நம் முன்னோர்கள் இழை தழைகளை அணிந்து இருக்கும்போது கூட கல்வி கற்பதற்காக பாட சாலையை நோக்கி தான் பயணித்தார்கள், ஆனால் இப்போது மாணவர்கள் பள்ளியை பார்த்து பயப்படுகிறார்கள்.

அன்றைய கல்வி முறை:

 • அன்றைய காலத்தில் இருக்கும் கல்வியை நாம் படிக்கும் இலக்கியங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். கல்வி, கேள்வி, போர்க்கலை, வித்தைகள், இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்றவற்றில் பல மாணவர்கள் சிறந்து விளங்கினர்.
 • அம்பேத்காரின் கல்வி மூலம் தான் சட்டம் உருவானது, பாரதியார் எழுதிய பாட்டு மூலம் தான் மக்களுக்கு சுதந்திர வேட்கை எழுந்தது. கல்வியின் மூலம் சாதித்த பல தலைவர்கள் நம் நாட்டில் உள்ளனர்.
 • பக்தி சார்ந்த இலக்கியங்களான தேவாரங்கள், ஆழ்வார் பாடல்கள் என பல பக்தி இலக்கியங்கள் அக்கால கல்வி வளர்ச்சியை எடுத்து காட்டுகின்றன. மேலும் சோழர் காலத்தை நாம் பொற்காலம் என்றே கூறலாம், ஏனெனில் அப்போது தான் கல்வி நிலையங்கள், நூலகங்கள் போன்றவை உருவானது.
 • இது போன்று கல்வியின் தேவையை அறிந்தும், எப்படி படிக்க என்பதை உணர்ந்தும் படித்தார்கள்.

இன்றைய கல்வி முறை:

 • அன்றைய கல்வி முறையில் மாணவர்கள் படிப்பை விரும்பி படித்தனர், அதனால் தான் நமக்கு மருத்துவர், அறிவியல் அறிஞர், காவலர்கள் போன்ற பல துறைகள் உருவாகியது.
 • இன்றைய கல்வி முறையில் மாணவர்கள் பெற்றோரின் கட்டாயத்திலும், சமுதாயத்தின் கட்டாயத்திலும் படித்து வருகிறார்கள்.
 • ஒரு சில மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மட்டும் படித்து கொண்டிருக்கிறார்கள்.
 • நாம் என்ன படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம் என்று புரியாமல் படித்து வருகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை மதிப்பெண்களுக்காக படிக்க சொல்வது தவறு.
 • எல்லா மாணவர்களாலும் முதல் மதிப்பெண்களை பெற இயலாது. படிப்பது என்பது சுதந்திரமான மன நிலையில் இருக்க வேண்டும். மற்றவர்களின் கட்டாயத்தின் அடிப்படையில் இருக்க கூடாது.

கல்வியின் நோக்கம்:

 • கல்வியில் மதிப்பெண்ணை எடுப்பது மட்டும் குறிக்கோளாக இருக்க கூடாது. மதிப்பெண்களையும், சான்றிதழையும் வைத்து மட்டும் யாராலும் சாதிக்க முடியாது.
 • கல்வி மாணவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துங்கள், அதை அவர்களுக்கு சுமையாக பயன்படுத்தாதீர்கள்.
 • கல்வி வேலை பார்த்து சம்பாரிப்பதற்கு மட்டுமல்ல வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் தான் என்பதை புரிந்து பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க வைப்பது நல்லது.

முடிவுரை:

கல்வி மதிப்பெண்களுக்காக மட்டுமல்ல வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கும் தான். ஓடி விளையாடு பாப்பா எனும் பாரதியின் பாட்டை படிக்க வைத்து விளையாட நேரம் கொடுக்காமல் இருப்பது தவறல்லவா..!

கல்வியை கொடுங்கள்..! அளவோடு கொடுங்கள்..! பிள்ளைகளின் திறனை அறிந்து கொடுங்கள்..!

பெண் கல்வி கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai