இணையவழி விளையாட்டின் தீமைகள் கட்டுரை | Iniyavali Vilayatin Theemaigal Katturai In Tamil
அன்றைய காலத்தில் குழந்தைகள் தெருவில் ஓடி விளையாடி கொண்டிருந்தனர் ஆனால் சமீப காலங்களில் இணையவழி விளையாட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய கால கட்டத்தில் பம்பரம், பட்டம், கோழி குண்டு, நொங்கு வண்டி, உப்பு மூட்டை, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர்.
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் மொபைல் போனில் விளையாட்டுகள் விளையாடுகின்றனர். குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வராமல் எப்பொழுதும் மொபைல் போனில் விளையாடி கொண்டிருந்தாள் அவர்கள் சோர்வாக இருப்பார்கள் உடல் நலம் பாதிக்கப்படும். ஆகவே இணையவழி விளையாட்டின் தீமைகள் பற்றிய கட்டுரை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றி கட்டுரை | Olympic Katturai in Tamil
இணையவழி விளையாட்டின் தீமைகள் கட்டுரை:
குறிப்புச்சட்டகம்:
- முன்னுரை
- இணையவழி விளையாட்டு
- இணையவழி விளையாட்டுகளில் மாணவர்கள் ஈர்க்கப்படுவதன் காரணம்
- இணையவழி விளையாட்டுகளின் தீமைகள்
- இணையவழி விளையாட்டை தவிர்ப்பதற்கான வழிகள்
- முடிவுரை
முன்னுரை:
அன்றைய கால கட்டத்தில் பம்பரம், பட்டம், கோழி குண்டு, நொங்கு வண்டி, உப்பு மூட்டை, கண்ணாமூச்சி, பச்சை குதிரை, கிச்சு கிச்சு தாம்பாளம், ஆடு புலி ஆட்டம், கோலா கொலையா முந்திரிகா, தாயம், பரமபதம், நொண்டி போன்ற விளையாட்டுகளை குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி வந்தனர். ஆனால் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய கால கட்டத்தில், குழந்தைகள் இணையவழி விளையாட்டுகளில் ஈர்க்கப்பட்டுகிறார்கள். இந்த விளையாட்டுகள் பொழுதுக்காக இருந்தாலும் அவை பல தீமைகளை ஏற்படுத்துகின்றன.
இணையவழி விளையாட்டு:
இணையவழி விளையாட்டு என்பது கணினி, மொபைல் போன் அல்லது கேமிங் கன்சோல் மூலம் இணையம் இணைக்கப்பட்டு விளையாடும் விளையாட்டாகும். குழந்தைகள் அவர் அவர் வீட்டில் இருந்தபடியே தனி நபராகவோ, கூட்டாகவோ விளையாடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் இதில் மிகவும் ஈர்க்கப்பட்டு எப்பொழுதும் மொபைல் போனில் இணையவழி விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார்கள்.
இணையவழி விளையாட்டுகளில் மாணவர்கள் ஈர்க்கப்படும் காரணம்:
மொபைல் போன், கணினி போன்றவற்றின் மூலம் எந்த நேரம், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாடலாம். ஒவ்வொரு நிலையும் ஒரு புதிய சவாலாக இருப்பதால், அதை வெல்லும்போது கிடைக்கும் தற்காலிக மகிழ்ச்சி குழந்தைகளை மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டுகிறது. இளைஞர்களை கவர்ந்து ஈர்க்கும் விதமாகத்தான் விளையாட்டுகளை சுவாரசியமாக வடிவமைக்கிறார்கள். இல்லம் பருவத்தினர் தேடும் புதுமை, சாகசம், திரில் போன்றவை இந்த விளையாட்டுகளில் கிடைப்பதால் இதற்கு அடிமையாகிவின்றனர்.
இணையவழி விளையாட்டுகளின் தீமைகள்:
இணையவழி விளையாட்டுக்களால் உடல், மன ரீதியாக மாணவர்களின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் இணையவழி விளையாட்டுகளின் மீதான மோகம், அடிமைத்தனம் மிக அதிக அளவில் பரவி வருவதாகவும் இது மனநிலை சார்ந்த குறைபாடாகவும் மாறி வருகிறது.
இணையவழி விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
- உடல் நல பாதிப்புகள் – கண் வலி, கண்பார்வை கோளாறு, முதுகு வலி மற்றும் கழுத்து வலி, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.
- மன நல பாதிப்புகள் – மன அழுத்தம், சோர்வு, தனிமை உணர்வு, விளையாட்டு அடிமைத்தனம், கோபம் மற்றும் எரிச்சல் ஆகிய பிரசனைகள் ஏற்படும்.
- சமூக வாழ்க்கை பாதிப்புகள் – நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைவு, சமூகத் தொடர்பு குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- கல்வி பாதிப்புகள் – படிப்பு மீதான கவனம் குறையும், மதிப்பெண்கள் குறையும், கல்வி சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பு குறையும்.
மேலும் விளையாட்டுக்கு பணம் செலவழித்தல், பண இழப்பு, ஆன்லைன் சூதாட்டம், சைபர் குற்றங்கள் போன்ற தீமைகளும் ஏற்படும்.
இணையவழி விளையாட்டை தவிர்ப்பதற்கான வழிகள்:
இணையவழி விளையாட்டுகளில் மூழ்கிவிடுவது பலருக்கு ஒரு பொதுவான பிரச்சனை. இதை தவிர்க்க பல வழிகள் உள்ளன.
பிற செயல்களில் ஈடுபடுதல்:
இணையவழி விளையாட்டை தவிர மைதான விளையாட்டு, வேறு பொழுதுபோக்குகள், உடல்பயிற்சி, புத்தகம் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
சமூக தொடர்புகளை அதிகரித்தல்:
நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிசிடலாம்.
இலக்குகளை நிர்ணயித்தல்:
வாழ்க்கையில் வேறு நல்ல இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைய முயற்சி செய்யலாம்.
மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை அவ்வப்போது வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று, உலகளாவிய அறிவை வளர்த்து விட வேண்டும். மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுகிறீர்களா என்று கண்காணிக்க வேண்டும். இணையவழி விளையாட்டில் நேரம் செலவிட்டால் குழந்தைகளை கண்டித்து மொபைல் போன் அவர்களிடம் கொடுக்காமல் வேறு வகையில் அவர்களை மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டும். இணையவழி விளையாட்டின் தீமைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை:
இணையவழி விளையாட்டை பொழுது போக்கிற்காக விளையாண்டாலும், அதிகப்படியான பயன்பாடு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் விளையாட வேண்டியது கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இணையவழி விளையாட்டு விபரீதமானது. அது குழந்தைகளின் நிகழ்காலத்தை கொல்லும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். எனவே குழந்தைகள் இணையவழி விளையாட்டை தவிர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |