மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை – International Women’s Day Speech in Tamil
ஆண்டு தோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகின்ற புதன் கிழமை உலகமெங்கும் மகளிர் தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். இத்தகைய பெண்களை போற்றும் விதத்தில் இந்த பதிவில் மகளிர் தினம் பேச்சி போட்டி கட்டுரையை பதிவு செய்துள்ளோம். பேச்சி போட்டிக்கு தயாராகும் அனைவருக்கு இந்த பதிவு மிகவும் அபயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க சர்வதேச மகளிர் தினம் பேச்சி போட்டி கட்டுரையை இப்பொழுது படிக்கலாம்.
முன்னுரை:
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா! என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கரைந்து பாடியது, பெண்மையின் மேன்மையை உணர்வுபூர்வமாக அறிந்ததால் தான். அணைத்து பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்.
மகளிர் தினத்தின் சிறப்பு:
பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்பணிப்புக்காக அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் ஒரு நாள் இது. பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டிற்குள் அடைந்துகிடந்த பெண் சமுதாயம் தற்பொழுது வானில் பறந்து கொண்டிருக்கின்றன என்றால், அதற்கு விதித்திட, பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே, இந்த மகளிர் தினம் ஆகும்.
மகளிர் தினம் வரலாறு:
இந்த மகளிர் தினத்துக்குப் பின்னால் பெரு போராட்ட வரலாறு உள்ளது. உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமான போராட்டத்திற்க்கான வெற்றிக்கள் எவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.
1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகில் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டன தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனியை சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின், ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ஆம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது.
இதற்கிடையில், 1920-ஆம் ஆண்டு சோவியத் ரஷியாவில், செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில், ரஷியாவை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர் தான் உலக மகளிர் தினத்தை, ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ஆம் ஆண்டு முதல். உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல் இந்திய பெண்மணிகள்:
இந்த அழகிய தருணத்தில், பெண்களின் வாசம் படாத பல துறைகளில், முன்னோடிகளாக இருந்து, பெண்மையின் ஆளுமைத்திறனை, உலகிற்கு பறைசாற்றிய அற்புதப் பெண்களை நினைவு கொள்ளும் வகையில், முதல் இந்திய பெண்மணிகள் சிலரை பற்றி அறியலாம்..
சூழ்நிலையால் நிராகரிக்கப்பட்ட பல மனிதர்களுக்கு, தன அன்பென்னும் கருவறையில் இடம் தந்த, அவர்களின் இதயக் கோயில்களில், என்றும் அன்னையாக உருக்கொண்ட அன்னை தெரசா நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் ஆவார்.
புளோரன்ஸ் நைட்டிங்கேல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்து தாதி. போரில் காயமடைந்த வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார் என்பது பொன் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டது. இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியிலாளரும் ஆவார்.
பெண்களின் ஆளுமைத் திறனுக்கு அத்தாட்சியாய் இருந்தவர், இந்தியாவின் முதல் பெண் பிரதமர், இரும்பு பெண்மணி இந்திரா காந்தி ஆவார். இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த, ஆக்கச் சிறந்த பெண் ஆளுமை இவர்.
மண்ணுலக மட்டுமல்லாமல் விண்ணுலகமும் எங்கள் களம் என இந்தியாவின் முதல் பெண்மணியாய் விண்ணில் கால் பதித்திட்டு, விண்மீன்களின் நாயகியாக வீற்றிருப்பவர் கல்பனா சாவ்லா
மகளிர் தினம் வாழ்த்துக்கள் Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Womens Day Quotes in Tamil 2023
ஔவையாரின் ஆத்திசூடியில் இடம்பெற்ற ஊக்கமது கைவிடேல் என்பதற்கு ஒரு பெரிய சான்று, மேரி கோமின் வாழ்கை. காயங்கள் பல கண்டா காரிகையாக, குத்துச் சண்டையில் முன்னோடியானார் தீர மங்கை மேரிகோம்.
இப்படி தலையில்லாத தடத்தில், முதலில் கால் பதித்தவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகின்றன.
இதே போல் முதல் எழுத்தாளர், முதல் ரயில் ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர், முதல் பெண் வெட்டியான் என ஆள் பயணிக்காத கரடுமுரடான பாதையில் முதல் அடி எடுத்து வைத்தவர்களின் திண்ணிய நெஞ்சம் போற்றுதலுக்குரியது.
சுதந்திர தேசத்தில் பாரதி கண்ட புதுமை பெண்களாய், தமக்குள்ள தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில், மண் முதல் விண் வரை, சமூகத்தின் எத்துறையை எடுத்துக் கொண்டாலும், பெண்கள் இல்லாத துறையை இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதை நாம் இன்று காண முடிகிறது.
சாதனை என்னும் சிகரத்திற்கு ஆண், பெண் பாகுபாடு தெரியாது. தன்னை நோக்கி அயராமல் அடியெடுத்து வைப்பவர்களுக்கு, பரிசை அள்ளிக்கொடுக்க மட்டுமே தெரியும். சவால்கள் நிறைந்த சமூகத்தை எளிதில் எதிர்கொண்டு, சாதனை என்னும் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம் என்கின்றார்கள் பல துறைகளிலும் வென்ற மங்கையர்கள். ஒரு பெண் தன்னை தரம் உயர்த்துவதும், தனது குடும்பத்தையும், சமூகத்தையும் தரம் உயர்த்துவது ஆகும்.
பெண்மை வாழ்கவென்று
கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று
கூத்திடுவோமடா என்னும் பாரதியின் பொன்னான வரிகள் நிச்சயம் உயிர்பெறும்.
இந்த இனிய நாளில், நம் வாழ்விலும், சமூகத்திலும் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்கள் சாதனைகள் பல புரிய ஊக்குவிப்போம். பெண்களின் மகத்துவத்தை, மனதார உணர்துவர்களாக, பெண்ணியம் காக்க நாம் இந்த மகளிர் தின நன்னாளில் உறுதி ஏற்போம்.
சாதனை புரிந்து
சரித்திரம் பல படைப்போம்
வா பெண்ணே!!! வெற்றி நாககே!!!
அனைத்து பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்!!!
நன்றி வணக்கம்!
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |