ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil

Jawaharlal Nehru Katturai in Tamil

நேரு மாமா கட்டுரை | Nehru Mama Katturai in Tamil

இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் அரும்பாடு பட்டவர்களுள் ஜவஹர்லால் நேருவும் ஒருவராவார். இந்திய நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமை இவரையே சேரும். குழந்தைகளுக்கு நேரு என்றால் மிகவும் பிடிக்கும். இவருடைய பிறந்தநாளை தான் குழந்தைகள் தின விழாவாக வருடந்தோறும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக கட்டுரை காண்போம்.

பாரதியார் கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
நேருவின் பிறப்பு 
கல்வி மற்றும் திருமண வாழ்க்கை 
நேருவும் குழந்தைகளும் 
நேருவின் படைப்புகள் 
ஆற்றிய பணிகள் 
முடிவுரை 

முன்னுரை:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய பெருமை நேருவையே சேரும். குழந்தைகள் அனைவரும் இவரை செல்லமாக நேரு மாமா என்று அழைப்பார்கள். இந்தியாவை இந்தியர்களால் ஆட்சி செய்ய முடியாது என்ற உலகத்தாரின் வார்த்ததைகளை மாற்றி காட்டியவர் இவர் ஒருவரே.

நேருவின் பிறப்பு:

நேரு நவம்பர் 14-ம் தேதி, 1889 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் பெரிய செல்வந்தரான மோதிலால் நேரு அவர்களுக்கும் ஸ்வரூபராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தவர். நேருவிற்கு விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்று இரண்டு சகோதரிகள் உள்ளார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

கல்வி மற்றும் திருமண வாழ்கை:

இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு  ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.

ஜவஹர்லால் நேரு கமலா கவுல் என்ற பிராமின் இனத்தை சேர்ந்த பெண்ணை 1916-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டிலே அவர்களுக்கு இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் பெரோசு காந்தியை திருமணம் செய்துகொண்ட அவர், ‘இந்திரா காந்தி’ என்றழைக்கபட்டார். இருபது ஆண்டு காலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துவிட்டார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசி வரை தனியாகவே வாழ்ந்தார்.

பெரியார் கட்டுரை

நேருவும் குழந்தைகளும்:

இவர் மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாமல் குழந்தைகள் மீது எப்போதும் அதிக அன்புடன் இருப்பார். குழந்தைகளை அதிகம் நேசிப்பதால் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம், உணவு வழங்கும் திட்டம், கல்வி திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தினார்.

நேருவின் படைப்புகள்:

நேரு தன்னுடைய வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தார். நேரு சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.

  • 1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”
  • 1936 ல் “சுயசரிதை”
  • “இந்தியாவின் கண்டுபிடிப்பு”

இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக மட்டும் பெருமை சேர்க்காமல் அவருக்கு நல்ல பெயரையும் தேடி தந்தது.

ஆற்றிய பணிகள்:

  • நேரு ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் இந்திய நாட்டின் முதல் பிரதமராக பணியாற்றினார்.
  • 1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார்.
  • பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது.
  • தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார்.
  • இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.
  • சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.
  • தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் பொன்மொழிகள்

முடிவுரை:

17 ஆண்டுகள் வரை இந்தியாவை நல்வழியில் வழிநடத்தி சென்றார். இவருடைய திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. சுதந்திர இந்தியாவுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளதும் இளைஞர்களதும் கல்விக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த மிகச்சிறந்த தலைவராக இவர் இந்திய வரலாற்றில் அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil