ஜான்சி ராணி பேச்சுப்போட்டி தமிழ் | Speech About Jhansi Rani in Tamil
நாம் 76-வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் வேளையில் அப்படிப்பட்ட சுதந்திரத்தை நாம் எளிதில் பெறவில்லை. பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வா.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, கொடிக்காத்தக் குமரன், சுப்பிரமணிய பாரதி, ராஜாஜி, காமராஜர், தேசிய அளவில் சர்தார் வல்லபாய் பட்டேல், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நவரோஜி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் தன்னலம் பாராமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக தேசிய அளவில் ஜான்சிராணி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும், தமிழகத்தில் வேலு நாச்சியார் தில்லையாடி வள்ளியம்மை போன்றோரைத் தவிர கடலூரில் அஞ்சலையம்மாள், லட்சுமிகௌல், லீலாவதி அம்மையார் போன்ற பல பெண் போராட்ட வீரர்கள் வெளியில் அறியப்படாமல் உள்ளனர். இவர்களில் ஒருவரான ஜான்சி ராணி லட்சுமிபாய் பற்றிய பேச்சு போட்டிக்கான தகவலை பார்ப்போம் வாருங்கள்.
Jhansi Rani Speech in Tamil:
அனைவருக்கும் வணக்கம்,
மணிகர்னிகாவாகப் பிறந்து ராணி லக்ஷ்மி பாய் எனப் புகழ் பெற்ற இந்தியாவின் விரமங்கையாக பிறந்தவர். அவள் துர்கையை போன்ற தைரியமும், சரஸ்வதி தேவியைப் போல் புத்திசாலிதனமும் கொண்டவள்.
தன் உரிமைகளுக்காகப் போராட துடிக்கும் பல பெண்களுக்கு ராணி லட்சுமி பாய் ஒரு உத்வேகம். ஆங்கிலேயர்களேயே மிரளவைத்தவள். இந்த துணிச்சலான மற்றும் வீரமிக்க ஆளுமையை இன்னும் பல நூறாண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. அவள் மரணத்தை ஏற்றுக்கொண்டாள், ஆனால் அவளுடைய எதிரிகளிடம் அடிபணியவில்லை கடைசிவரை நெருக்குநேராக நின்று போர்புரிந்தவள். அத்தகைய ஜான்சி ராணி இலட்சுமி பாய் பற்றி இன்று உங்கள் முன் பேச வந்துள்ளேன்.
ஜான்சி ராணி வாழ்கை வரலாறு:
ஜான்சி ராணி, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் மராத்திய பிராமண குடும்பத்தில் நவம்பர் 19 1828ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு அவர்களது பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா. தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த அம்மையார், இயற்கையாகவே அவரிடம் போர்க்குணம் நிறைந்து காணப்பட்டதால் சிறுவயதிலே போர்புரியும் ஆசையோடு வாள்வீச்சு மற்றும் குதிரைஏற்றம் போன்ற போர்க்கலைகளை முறைப்படிக் கற்றுக்கொண்டார்.
1842-ல் ஜான்சி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர் ராஜா கங்காதர ராவ் நெவல்கர் என்பவரை மணமுடித்தார். மணிகர்ணிகா என்ற இயற்பெயரை கொண்ட அம்மையார் ஜான்சியை ஆண்ட மன்னனை மணம்முடித்ததும், லட்சுமிபாய் என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டது. அன்றில் இருந்து அவரது இயற்பெயர் மறைந்து ஜான்சி ராணி லட்சுமிபாய் என்றானது.
சுதந்திர தின விழா பற்றிய பேச்சு போட்டி
ஜான்சி ராஜ்யத்தின் மன்னன் இறந்ததும் ஆங்கிலேயர்கள் ஜான்சி ராணியை கோட்டையை விட்டு வெளியேற கட்டளையிட்டார். அதனை மறுத்த அம்மையார் தனது மகனே எந்த ராஜ்யத்தின் அரசன் என்று முறையிட்டார்.
ஜான்சி ராணியின் வளர்ப்புமகனை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுத்த ஆங்கிலேய அரசு ரூபாய் 60000 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கி அவரை வெளியேற்றியது. அம்மையார் கோட்டைவிட்டு வெளியேறி அங்கிருந்த மஹாலில் தங்கினார். அன்று முதலே ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்னும் வேட்கையுடன் இருந்தார்.
அப்போது இந்தியாவில் அதாவது 1857-ல் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தது. அந்த சமயத்தில் இராணி லட்சுமிபாய் பற்றி யாரும் அதிகம் அறிந்திருக்கவில்லை. இந்த கிளர்ச்சியை பயன்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிரான ஆதரவாளர்களை திரட்டினார்.
பிறகு 1858ஆம் ஆண்டு தனது மகன் தாமோதர ராவ் மற்றும் தனது ஆதரவு படைகளுடன் குவாலியருக்கு படையெடுத்த ஜான்சி ராணி குவாலிய மன்னனை வீழ்த்தி குவாலியரை தன் வசப்படுத்தினார். அந்த போரில் ஜான்சி ராணி லட்சுமிபாயின் வாள் வீசும் வேகத்தினை கண்ட படைவீரர்கள் அவரை நெருங்க பயந்தனர். முடிவில் போரில் குவாலிய மன்னனை கொன்று குவாலியரை தன் வசப்படுத்தினார்.
பிறகு ஆங்கிலேய இராணுவம், குவாலியரை ஜான்சி ராணியிடம் இருந்து கைப்பற்ற தங்களது மிகப்பெரிய படையுடன் குவாலியரை நோக்கி படையெடுத்தது. அப்போது அந்த போரில் ஆண் வேடம் புரிந்து தொடர்ந்து சண்டையிட்டு போராடினார். ஆனால் பெரிய ஆயுதப்படையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக இவரால் சண்டைபோட்டு சமாளிக்க முடியாமல் கடைசி நிமிடம் வரை போர்க்களத்தில் எதிரிகளின் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.
ஜான்சி ராணி இலட்சுமி பாய் இறந்து ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் பெண் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். அவரை போன்று அணைத்து பெண்களும் விவேகம், வீரம், தைரியம் இருக்க வேண்டும்.
இத்துடன் எனது உரையை முடித்துக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க →இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளபா
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |
க்க