Kaalam Pon Pondrathu Katturai in Tamil | காலம் பொன் போன்றது கட்டுரை
வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் “காலம் பொன் போன்றது” கட்டுரை பற்றி பார்க்கலாம். காலத்தின் அருமையை அறிந்து அதற்கேற்ப செயல்படுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பாதையில் செல்வார்கள். ஏனென்றால், நம் கற்கவேண்டிய விஷயங்களையோ அல்லது செய்ய வேண்டிய செயல்களையே தகுந்த காலத்தில் செய்வதால் மட்டுமே அதற்கேற்ற பலன்களை பெற முடியும். எனவே, அந்த வகையில் காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில், “காலம் பொன் போன்றது” கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
எந்தவொரு விஷயத்தையும் நாம் காலம் அறிந்து செய்து வந்தோம் என்றாலே, அது நமக்கு நல்ல பலன்களை மட்டுமே அளிக்கும். திரும்ப பெற முடியாத விஷயம் என்னெவென்றால் அது நாம் கடந்து வந்த காலம் மட்டுமே. எனவே, காலத்தினை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதுபோலத்தான் நம் வாழ்க்கை இருக்கும்.
காலம் பொன் போன்றது கட்டுரை:
குறிப்பு சட்டகம் |
|
முன்னுரிமை:
மனித வாழ்க்கையில் காலம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. காலம் எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்காமல் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். அதன்படி, நாமும் காலத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பயனுள்ள விஷயத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் “காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது” என்கிறார். எனவே, அவரின் கூற்றுப்படி காலத்தின் அருமை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
காலமும் கடமையும்:
காலம் ஒருபோதும், எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதில்லை. எனவே, நம் வயதிற்கேற்றவாறும் காலத்திற்கும் ஏற்றவாறு செய்யவேண்டிய கடமைகளை செய்து முடித்தல் வேண்டும். காலம் தவறி செய்த செயல்கள் யாவும் முழுமையடையாது. இதனை தான் நம் முன்னோர்கள், “இளமையில் கல், பருவத்தே பயிர் செய்” என்று குறிப்பிடுகிறாரக்ள்.
அதாவது இளமையில் கற்காமல் விட்டுவிட்டு அந்த கல்வியை பின்பு கற்றாலும் அதனால் பயனேதும் இல்லை. பருவம் பார்த்தே பயிர் செய்ய வேண்டும். பருவம் தப்பினால் பயிர்கள் செழித்து வளராது.
இளமையில் கல், பருவத்தே பயிர் செய்’ என்கிற பழமொழியை அனைவரும் உணர வேண்டும். அந்தந்தப் பருவத்தில் அந்தந்த செயலை செய்து முடித்திட வேண்டும் என்பதே இதன் பொருள்.
இதனை “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்றும் கூறுவார்கள். காலம் இருக்கும்போதே வாய்ப்புகளை தவறவிடாமல் செய்து முடிக்க வேண்டும். காலம் கடந்து செய்வதன் மூலம் அதனால் எந்த பயனும் இல்லை.
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை
காலத்தின் அருமை:
பசியில் வாடும்போது கிடைக்காதா உணவு இறந்த பின் கிடைத்தால் என்ன பயன் இருக்கிறது. அதுபோலத்தான் காலமும் இளமையில் கிடைக்காத செல்வமும் செழிப்பும் முதுமை காலத்தில் கிடைத்தால் என்ன பலன்.
எனவே, காலத்தின் அருமையை அறிந்து அதற்கேற்ப செய்லபடுவதன் மூலமே அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பலன்களை அனுபவிக்க முடியும்.
உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஒலிம்பிக் விளையாட்டில் ஒன்பது தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். இவர் தங்க பதக்கம் பெற இரண்டு நிமிடங்கள் தான் ஆனது. ஆனால், அவர் வெற்றியாளராக மாற 20 வருடங்களாக காலத்தை சரியான முறையில் பயன்படுத்தியதே காரணம் ஆகும்.
எனவே, நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதற்கு உசைன் போல்ட் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
நேரத்தை பயன்படுத்தும் முறை:
ஒரு நாளில் 24 நாள் மணிநேரம் இருக்கிறது என்றால், அந்த 24 மணிநேரத்தில் நம் வளர்ச்சிக்காகவும், உடல் ஆரோக்யத்திற்காகவும், குடும்ப மகிழ்ச்சிக்காகவும், கடவுள் வழிப்படுவதற்காகவும், அறிவை வளர்த்துக்கொள்வதற்காகவும் என நேரத்தை பிரித்து சரியான முறையில் பயன்படுத்தி வர வேண்டும்.
இவ்வாறு எந்த ஒரு மனிதர் காலத்தின் நேரத்தை சரியான முறையில் பயன்டுத்தி வருகின்றானோ அவனே சரியான பாதையில் பயணிக்கின்றான் என்று அர்த்தம். இவை அனைத்திற்க்கும் மேலாக அவன் காலத்தை சரியான முறையில் பயன்படுத்தியதற்கான பலன்களையும் பெறுவான்.
எனவே, எந்தவொரு விஷயத்தையும் காலத்தின் நேரத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயன்படுத்துதல் வேண்டும்.
தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை
காலம் பொன் போன்றது:
காலத்தை பொன் போன்று மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்தையும் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற பொழுதுபோக்கை தவிர்த்துவிட்டு, எதிர்காலத்தில் நமக்கு எது நன்மை அளிக்குமோ அதனை காலம் தவறாமல் செய்து வர வேண்டும்.
ஒவொவ்ரு விஷயத்தையும் காலம் தவறாமல் திட்டமிட்டு பணியாற்றினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
முடிவுரை:
வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அனைவருமே அவர்களுக்கு அளிக்கப்பட்ட நேரத்தை சரியாக பயன்படுத்தியவர்களே ஆவர். எனவே, காலத்தை கவனமாக கையாள வேண்டும்.
நீங்கள் செய்ய நினைத்த விஷ்யங்களை அன்றே செய்யலாமல் நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் தேவையற்று வீணடித்தத நேரமாகவே கருதப்படும்.
எனவே, காலத்தை உங்கள் வாழ்வில் வெற்றி அடையும் பொன்னான நேரமாக நினைத்து செலவிட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |