வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை | Kalpana Chawla Katturai Tamil

Updated On: October 25, 2025 1:42 PM
Follow Us:
kalpana chawla tamil katturai
---Advertisement---
Advertisement

கல்பனா சாவ்லா கட்டுரை | Kalpana Chawla Tamil Katturai 

பெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப பெண்கள் இப்புவுலகில் உன்னதமான வளர்ச்சியை நிலைநாட்டுகின்றனர். அவர்களுள் கல்பனா சாவ்லா அனைவரின் உள்ளங்களிலும் நீங்காத இடத்தை பெற்றுள்ளார். விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் பல சாதனைகளை அடையலாம் என்பதற்கு பெரிய உதாரணமாக இருந்தவர். இப்படி பல பெருமைகளை பெற்றுள்ள கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை | vinveliyum kalpana chawlavum katturai in tamil :

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
இளமையும், கல்வியும்
சாதனைகள்
விண்வெளிப் பயணம்
முடிவுரை

kalpana chawla katturai tamil

முன்னுரை:

  • விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பெரிய உதாரணமாக உள்ளவர். ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நினைவாக்கி பலருக்கும் எடுத்துகாட்டாக இருந்து வாழ்ந்துக் காட்டியவர்.

இளமையும், கல்வியும்:

  • கல்பனா சாவ்லா 1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் தனது ஆரம்ப கல்வியை அரசுப்பள்ளியில் பயின்றார். தனது கல்லூரி படிப்பை பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான துறையில் இளங்கலை பட்டம் பயின்றார். முதுகலை மற்றும் முனைவர் படிப்பை அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் பயின்றார்.

சாதனைகள்:

  • நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் அவரது சிறப்புமிகு சேவைக்காக நினைவுப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • இந்திய மாணவர்கள் சங்கத்தால் அவரின் பெயரில் “கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்சிப்பும்” வழங்கப்படுகின்றது.
  • அவரின் புகழின் உச்சகட்டமாக 2001-ம் ஆண்டு விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளிப் பயணம்:

  • விமானம் மற்றும் கிளைடர்களை 1988-ல் மற்றவர்களுக்கு பயணிக்க கற்று கொடுப்பதற்கான சான்றிதழ் மற்றும் அவர் பயணிப்பதற்கான உரிமத்தை பெற்றார் விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் 1995-ல் நாசா சென்றார்.
  • கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. பூமியை சுமார் 252 முறை சுற்றி விண்கலத்தில் 10 மில்லியன் தொலைவு பயணம் செய்தார்.
  • இவரின் இரண்டாவது விண்வெளிப் பயணம் 2003-ம் ஆண்டு நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் கல்பனா சாவ்லாவுடன் ஏழு பேர் பயணித்தனர். விண்வெளியில் தனது ஆராய்ச்சிகளை முடிப்பதற்கு பதினாறு நாட்கள் ஆனது.
  • விண்வெளியில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

முடிவுரை:

  • பல சாதனைகளை படைத்த கல்பனா சாவ்லா தனது இறுதி கட்ட விண்வெளிப் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது விண்கலம் வெடித்து சிதறி உயிரிழந்தார். இந்த நிகழ்வில் கல்பனா சாவ்லா மட்டுமல்ல அவருடன் சென்ற ஏழு பெரும் உயிரிழந்தனர்.
  • விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை பல மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
  • முயற்சியும் தைரியமும் இருந்தால் இவ்வுலகை மட்டுமல்ல வானுலகையும் ஆளலாம் என்று உலகிற்கு உணர்த்தி காட்டிய ஒரு சிறந்த பெண்மணி கல்பனா சாவ்லா.
பெண் கல்வி கட்டுரை
சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரை
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now