கால்பந்து விளையாட்டு கட்டுரை

Advertisement

Football Essay in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கால்பந்து விளையாட்டு பற்றிய கட்டுரை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விளையாட்டுகளில் கால்பந்து மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இரண்டு அணிகளாக விளையாடப்படும் இந்த விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் 11 நபர்கள் இருப்பார்கள். ஓர் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் இவ்விளையாட்டில் போட்டியாளர்கள் அதிகமான கோல்களை அடிப்பதன் மூலம் வெற்றி பெற முயல்கிறார்கள். Football விளையாட்டை பற்றி கட்டுரை வடிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கால்பந்து விளையாட்டு கட்டுரை:

கால்பந்து விளையாட்டு கட்டுரை

குறிப்பு சட்டகம்:
  • முன்னுரை
  • விளையாட்டின் விதிகள்
  • அடிப்படி கூறுகள்
  • முடிவுரை

முன்னுரை:

கால்பந்து விளையாட்டு என்பது, உலகில் பலராலும் மிகவும் விரும்பி விளையாடப்படும் விளையாட்டு ஆகும். கால் பந்து ஒரு குழு விளையாட்டு ஆகும். ஒரு பந்தினை இரு அணிகளும் காலால் உதைத்து விளையாடும் விளையாட்டு ஆகும். இது ஒரு வெளிப்புற விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுகள் இரண்டு ஆட்டமாக ஆடப்படும். ஒவ்வொரு ஆட்டத்திற்கு 45 நிமிடங்கள் அளிக்கப்படும். இரண்டு அணிகள் கொண்டு ஆடப்படும் இந்த ஆட்டத்தில், ஒவ்வொரு அணியிலும் 11 பேர் இருப்பார்கள். இந்த விளையாட்டை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கவும் விளையாடவும் செய்வார்கள். கால்பந்து, மிகவும் பரபரப்பாகவும், தீவிரமாகவும் நடைபெறும் விளையாட்டு ஆகும். இது மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

கால்பந்து (Football) விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

விளையாட்டின் விதிகள்:

  • கால் பந்து செவ்வக வடிவ மைதானத்தில் விளையாடப்படும் விளையாட்டு ஆகும்.  கால் பந்தாட்டத்தில் இரண்டு அணிகளிலும் ஒரு கோல்காப்பாளர் உள்பட 11 வீரர்கள் இருக்க வேண்டும்.
  • கால்பந்து விதிகளில் பந்தை கை கொண்டு தாக்குதல் தவிர, உடலின் மற்ற உறுப்புகளைப் பயன்படுத்தி விளையாடலாம்.
  • இது விளையாட்டு வீரர்களின் உடல் திறன், கவனம் மற்றும் வீரத்தினை நிரூபிக்கும் விளையாட்டு ஆகும்.
  • மைதானத்தின் இரு முனைகளிலும் உள்ள கோல்படலங்களை அடைவது முக்கிய இலக்காகும்.
  • இப்போட்டி இரண்டு ஆட்டமாக ஆடப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டமும் 45 நிமிடங்கள் ஆடப்படுகிறது.
  • ஓர் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் இவ்விளையாட்டில் போட்டியாளர்கள் அதிகமான கோல்களை அடிப்பதன் மூலம் வெற்றி பெற முயல்கிறார்கள்.

அடிப்படை கூறுகள்:

  • மைதானம் – கால்பந்து குறிப்பிட்ட அளவுகளுடன் இருக்க வேண்டும். மைதானத்தின் மையம், கோல்படலம், கோல் பகுதிகள் என பல பகுதிகள் விளையாட்டின் போது பயன்படுத்தப்படுகின்றன.
  • கோல்காப்பாளர் – கையில் பந்தைப் பிடித்து தன் கோல்படலத்தைப் பாதுகாக்கும் ஒரே வீரர் கோல்காப்பாளர் ஆவர். மற்ற வீரர்கள் பந்தை கையில் பிடிக்க கூடாது.
  • கால்பந்தாட்டத்தின் முக்கியத் தன்மையாக கருதப்படுவது பந்தை சரியான முறையில் கட்டுப்படுத்துவதே ஆகும்.  இதனால் வீரர்கள் அவர்களின்  ஓட்டம், திசை மாறுதல் மற்றும் பந்தின் துல்லியத்தை அதிகப்படுத்தும் திறன் போன்ற வகையில் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

முடிவுரை:

கால்பந்து விளையாட்டு என்பது வலிமை, உடற்தகுதி மற்றும் புத்திசாலித்தனம் போன்றவை தேவைப்படும் ஒரு விளையாட்டு ஆகும். கால்பந்து என்பது உடல் ரீதியான பயிற்சி மட்டுமின்றி, ஒரு சிறந்த மன பயிற்சி ஆகும். இது மன அழுத்தத்தில் இருந்து விடப்பட உதவுகிறது. முயற்சி, சகிப்பு தன்மை போன்ற பல திறன்களை மேம்படுத்த உதவுகிறது. மனதை புத்துணர்ச்சியூட்டும் விளையாட்டு ஆகும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement