கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை | Kamarajar kalvi valarchi naal
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை (Kamarajar Kalvi Valarchi Naal) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஜூலை 15 கர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினம் ஆகும். இந்த நாளை தான் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டப்படுகிறது. இன்றைய பதிவில் காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை பற்றி பார்க்கலாம் வாங்க.
முன்னுரை:
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர்களுள் ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’ ஆவர். குறிப்பாக தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. சரி இக்கட்டுரையில் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்கள் கல்விப்பணிகளை பற்றி பார்க்கலாம் வாங்க.
காமராஜரின் கல்வி பணிகள் – கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை:
அவருடைய ஆட்சி காலத்தில் கல்விக்கே முதல் இடத்தை வகுத்தவர். குறிப்பாக இவருடைய ஆட்சிக்காலத்தில் 1957-யில் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள் 1962-யில் 29,000 ஆக உயர்ந்தது. உயர்நிலை பள்ளிகள் மூன்று மடங்காயின.
“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற பாரதியின் வரியை உண்மையாக்க இரவும் பகலும் பாடுபட்டார் காமராஜர். தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 16 லட்சத்திலிருந்து 48 லட்சமாக உயர்ந்தது. அதில் 16 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 3 லட்சம் உயர்நிலை பள்ளிகள் 13 லட்சமாக உயர்ந்தது. தொழிற் கல்வி தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடி தொடங்கப்பட்டது காமராஜர் ஆட்சியில் தான்.
காமராஜர் தமிழ்நாடு முதல்வராக இருந்த போது கிராமப்புற சாலை ஒன்றில் காரில் செல்லும்போது. சில சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனை கண்ட காமராஜர் காரை நிறுத்த சிறுவர்கள் அருகில் சென்ற காமராஜர் “நீங்களெல்லாம் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லையா?” என்று கேட்கிறார். “எங்கள் ஊரில் பள்ளிக்கூடமே இல்லையே” என்கிறார்கள் சிறுவர்கள்.
“பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தால் நீங்கள் பள்ளிக்கு சென்று படிப்பீர்களா?” என்று கேட்கிறார் காமராஜர். அதற்கு சிறுவர்கள் “நாங்கள் மாடு மேய்த்தால், எங்களை மாடு மேய்க்க சொன்னவர்கள் மதியம் உணவு கொடுப்பார்கள். நாங்கள் பள்ளிக்கு வந்துவிட்டால் எங்களுக்கு யார் சோறு போடுவார்கள்” என்று அந்த குழந்தைகள் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியவில்லை முதல்வரால். அவர்களது கேள்வி நெஞ்சில் முள்ளாக தைத்தது.
சென்னை சென்றதும் கல்வித்துறை செயலாளர் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலுடன் ஆலோசிக்கிறார். அவரும் உணவு அளிப்பதற்கு ஆதரவாக கருத்து சொல்கிறார்.
“ஏழைப்பிள்ளைகள் பள்ளிக்கூடம் வர, மதிய உணவு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?” என்று நிதித்துறை செயலக அதிகாரிகளை கேட்கிறார். இப்போதைய நிதி நிலையில் இதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
“நிதி இல்லை என்றால் வீதியில் நின்று பிச்சை எடுத்து தருகிறேன். திட்டத்தை தொடங்குங்கள்” என்கிறார். முதல்வரின் உறுதியைக் கண்ட அதிகாரிகள் பதினாறு லட்சம் குழந்தைகள் சாப்பிடும் மதிய உணவு திட்டத்தை, முப்பதாயிரம் பள்ளிகளில் தொடங்குகிறார்கள். இப்படித்தான் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் காமராஜர்.
காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை |
முடிவுரை:
அவர் ஆட்சி செய்த காலம் முழுவது சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்த அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது.
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |