நான் விரும்பும் தலைவர் காமராசர் | Kamarajar Speech in Tamil
நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்கள் ஏராளமானோர் உள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராஜர். நாம் இந்த தொகுப்பில் பாரதத்தின் விடுதலைக்காக உதவிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி கூற இந்த ஒரு பதிவு போதாது. அதனால் இந்த பதிவில் அவர்களின் சிறப்புகளை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு சட்டகம் – காமராஜர் கட்டுரை:
முன்னுரை |
பிறப்பு |
அரசியல் பற்று |
நாட்டுப்பணி |
கல்விப் பணிகள் |
முடிவுரை |
முன்னுரை – Kamarajar Speech in Tamil
Kamarajar Katturai in Tamil: நம் மனதில் இன்றும் நிலைத்து கொண்டிருக்கும் தலைவர்களுள் ஒருவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தைக் தலைநிமிர செய்வதற்காக அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த மாமனிதன் பெருந்தலைவர் காமராஜர் ஆவார்.
பிறப்பு – Kamarajar Katturai in Tamil
Kamarajar Tamil Katturai: காமராசர் விருதுநகரில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இளம் வயதிலேயே காமராஜர் அவர்கள் தந்தையை இழந்து விட்டார். காமராஜர் தந்தையை இழந்த பின்பு பொருளை ஈட்டுவதற்காக மாமாவின் கடையில் வேலை செய்தார்.
அரசியல் பற்று – Kamarajar Katturai in Tamil Language – காமராஜர் கட்டுரை:
- வேலை செய்து கொண்டிருக்கும் போதே செய்தித்தாள்களை படிப்பது, தலைவர்களின் சொற்பொழிவை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார். பின் நாட்டின் மீது இருந்த பற்றால் காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார்.
- அரசியல் மீது இருந்த ஆர்வமும், நாட்டுப்பற்றும் இவரை 1940-ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் தலைவராக பொறுப்பேற்க வைத்தது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் மற்றும் 1942-ல் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சி போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → காமராஜரை பற்றி 10 கட்டுரை வரிகள்
நாட்டுப்பணி – Kamarajar History in Tamil Katturai- காமராஜர் கட்டுரை:
- அரசியலில் ஒரு தொண்டராக இருந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் 1954-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவர்.
- முதலமைச்சராக இருந்த போது மக்களுக்கு இவர் செய்த சேவைகள் அளவுக்கறியது. நாட்டில் விவசாயத்தை பெருக்குவதற்காக பல நீர்த்தேக்க திட்டங்களை அமைத்து நீர்வளத்தையும், நில வளத்தையும் பெருக்கினார். நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்.
கல்விப் பணிகள் – Kamarajar Speech in Tamil
படிக்காத மேதை என்ற புகழுக்கு சொந்தக்காரராக இருக்கும் காமராஜர் அவர்கள் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழை மாணவர்களும் படிக்க வேண்டும் என இலவச கல்வி மற்றும் பள்ளிக்கூடங்களை நிறுவினார்.
பெருந்தலைவர் காமராஜர் ஆரம்பித்து வாய்த்த சத்துணவு திட்டம் இன்றும் அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. அவர் கல்வி கற்க வில்லை என்றாலும் வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்தியவர் காமராஜர். இவரால் தான் இன்று அனைவரும் கல்வி கற்று வாழ்வில் சாதனை படைத்தது வருகிறார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் கட்டுரை
முடிவுரை – காமராஜர் கட்டுரை:
Kamarajar Patri Katturai in Tamil: குடும்ப வாழ்க்கை, ஆட்சி முறை என அனைத்திலும் சிறந்து விளங்கியவர். அரசியல் மூலம் மிக உயர்ந்த இடத்திற்கு போனாலும் தனது வாழ்நாள் முழுவதும் எளிமையாக வாழ்ந்தவர். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி வாழ்ந்த தியாக செம்மல் பெருந்தலைவர் காமராஜர் ஆவார். புகழின் உச்சத்தை அடைந்த காமராஜர் அவர்கள் 1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
காமராஜர் பொன்மொழிகள் |
பாரதியார் கட்டுரை |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |