பெருந்தலைவரின் சாதனைகள் கட்டுரை | Kamarajar Sathanai Tamil | பெருந்தலைவரின் கல்வி சாதனைகள்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் கர்மவீரர் காமராஜர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரையை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இவரை பற்றி ஒரு கட்டுரையில் சொல்ல முடியாது ஏனென்றால் இவர் செய்த சாதனைகளோ பெரிது. இவருக்கென்று நிறைய பெயர்கள் உள்ளது. இவரை அதிகம் காமராஜர் என்று சொல்வதை விட, பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் என்று அன்பாக அழைப்பார்கள். இவர் நம் நாட்டிற்காக செய்த விஷயங்களை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த பதிவில் இவர் செய்த சாதனைகள் பற்றிய கட்டுரையை படித்தறிவோம்.
காமராஜர் பற்றிய பேச்சு போட்டி கட்டுரை |
Kamarajar சாதனைகள்:
முன்னுரை:
கர்மவீரர், படிக்காத மேதை, ஏழை பங்காளர், கல்விக்கண் கொடுத்தவர் என பலராலும் போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர். இவர் விருதுபட்டி என்று அப்போது அழைக்கப்பட்ட விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 15 நாள் குமாரசாமிக்கும், சிவகாமி அம்மையாருக்கும் அரும்தவ புதல்வராய் தோன்றினார். இவர் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் ஏற்றம் பல கண்டவர், காமராஜர் ஆறாம் வகுப்பிலேயே தந்தையை இழந்தார். தந்தையை இழந்த காரணத்தால் வறுமையின் காரணத்தினால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். அதுமட்டுமில்லாமல் கல்வியின் அருமையை அறிந்த காமராஜர் நமக்கு கிடைக்காத கல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று கல்விக்காக அவர் செய்த சாதனைகள் அதிகம் இது போல் அவர் செய்த சாதனைகள் பல உள்ளன அதனை தெரிந்துகொள்வோம் வாங்க.
பெருந்தலைவரின் சாதனைகள்:
ராஜாஜி அறிமுகப்படுத்திய குடும்ப தொழில் அடிப்படியிலான கொள்கைகளை காமராஜர் நிறுத்திவிட்டார். பிறகு மூடி இருந்த 6000 பள்ளிக்கூடங்களை திறந்தார். மேலும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 12,000 பள்ளிகளை திறந்தார். இதனால் கல்வி திறன் மேம்பட்டது.
கிராம புறங்களில் உள்ள குழந்தைகள் அதிக தூரம் நடந்து வந்து கல்வி பயின்றார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு வருவதை நிறுத்திட்டார்கள். அவர்களில் நலனில் அக்கறைகொண்டு அனைவருக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்று கிராமப்புறங்களிலும் பள்ளிக்கூடத்தை திறந்துவைத்தார். இதனால் பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவது தடுக்கப்பட்டது.
காமராஜர், படிக்கும் காலத்தில் ஒருவேளை உணவுக்காக அதிகம் கஷ்ட பட்டார். அதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரு வேலை உணவு மட்டுமாவது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.
இளம் வயதிலே பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சாதிமத வேறுபாட்டை விதைக்க கூடாது என்ற நோக்கத்தில் இலவச பள்ளிசீருடை திட்டத்தை கொண்டுவந்தார்.
வேளாண்மை திட்டம்:
விவசாயத்திற்காக நிறைய திட்டங்களை கொண்டுவந்தார் அதில் மிகவும் முக்கியமாக வகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரம்பிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைகள் கட்டுதல் பணிகள் அசுரவேகத்தில் முடிவுக்கு வந்தது. இது விவசாயத்திற்கு பெரும் நன்மையாக இருந்தது. வேளாண்மையில் மட்டுமா கர்மவீரர் கால் பதித்தார் என்றார் மிகையாகாது அவர் ஈடுபடாமல் இருந்த துறை ஏதும் இல்லை. விவசாயத்திற்கு பிறகு அவர் கால் பதித்தது தொழிற்சாலை. நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் கொண்டுவந்து அதிலும் அவர் முத்திரை பதித்தார்.
காமராஜர் பற்றி கட்டுரை |
காமராஜர் அரசியல் வாழ்வு:
1930 ஆணம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். அதனால் அவர் 2 ஆண்டு சிறை தண்டனையில் இருந்தார். அதுமட்டுமில்லாமல், மேலும் 5 முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மக்களுக்காக 8 வருடம் சிறை தண்டனை அனுபவித்தார்.
1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அவர் 14 வருடம் பதவி வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவிவகித்தார். அவர் படிக்காத மேசையாக இருந்தாலும் அவர் முதலமைச்சராக மிக சிறப்பாக வழி நடத்தினார். அவரின் ஆளுமையினால் மிகசிறந்த மாநிலம் என்ற பெருமை பெற்றது தமிழ்நாடு.
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |