Kanini Katturai in Tamil | கணினி தமிழ் கட்டுரை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் எங்கும் கணினி எதிலும் கணினி என்ற கட்டுரையை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அறிவியலின் அற்புத படைப்பு என்று சொன்னால் அது கணினி தான். கணினியின் திறன் மனித மூளையையே விஞ்சிவிட்டது என்று சொல்லாம். இன்றைய நிலையில் கணினி இல்லாத இடங்களே கிடையாது. பள்ளியில் தொடங்கி அனைத்து அலுவலகங்களிலும் கணினி செயல்பட்டு வருகிறது. ஆகையால் கணினி பற்றிய கட்டுரையை பார்க்கலாம் வாங்க..!
கணினி இல்லெயென்றால், இவ்வுலகில் எந்த வேலையும் நிறைவு பெறாது. எல்லா இடங்களிலும் கணினி இருந்தால் வேலை நடக்கும். அந்த அளவிற்கு கணினி முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக கணினியின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துகொள்ளலாம்.
கணினியை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..? |
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
கணினியின் வரலாறு |
கணினியின் தோற்றம் |
கணினியின் வகைகள் |
கணினியின் பயன்கள் |
முடிவுரை |
முன்னுரை:
அறிவியல் வளர்ச்சியால் உலகம் செயல்பட முக்கிய காரணம் கணினி தான். தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் தான் மனித குலத்தை ஒரு புதிய உலகிற்கு கொண்டு சென்றுள்ளது.
ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் வேறு இடத்தில் இருந்து அறிந்து கொள்வதற்கு தகவல் தொடர்பு சாதனங்கள் மிக முக்கியமானவை. அவற்றில் கணினி முதலிடத்தை பிடித்துள்ளது.
நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் கண் இன்றியமையாத உறுப்பு என்று சொல்லலாம். ஆனால் கணினி கண்ணிலும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
கணினியின் வரலாறு:
ENIAC [Electronic Numerical Integrator and Computer] என்ற கணினி தான் உலகின் முதல் கணினி என்று 1946 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முதல் கணினியானது இப்போது நாம் பயன்படுத்தும் கணினியை விட மிகவும் பிரமாண்டமானதாக இருந்தது.
அமெரிக்க ராணுவ பீரங்கி குண்டுகள் செல்லும் பாதையைக் கணிப்பதற்காக இந்த கணினி உருவாக்கப்பட்டது. இது 27,000 கிலோ கிராமுக்கு மேல் எடை கொண்டதாக இருந்தது.
பெண் கல்வி கட்டுரை |
கணினியின் தோற்றம்:
அபேக்ஸ் எனப்படும் சீனர்களின் அறிவியல் சாதனம் தான் கணினியின் முன்னோடி என்று சொல்லப்படுகிறது. 1883 ஆம் ஆண்டு சார்லஸ் பாப்பேஜ் என்ற இங்கிலாந்து அறிஞர் தான் கணினியை வடிவமைத்தார். இவர் தான் கணினியின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
அதுபோல 1824 ஆம் ஆண்டு டாக்டர் ஆலன் எம் டூரிங் என்பவர் மின்னனுக் கணினியை கண்டுபிடித்தார். மேலும் நாம் தற்போது பயன்படுத்தி வரும் கணினியை ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவன்ட் என்பவர் தான் கண்டுபிடித்தார்.
கணினியின் வகைகள்:
ஆரம்ப காலத்தில் இருந்தே கணினியானது காலத்திற்கேற்ப பல வடிவங்களை பெற்றுக் கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் கணினிகள் பல அளவுகளிலும் பல திறன்களிலும் தயாரிக்கப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் பல புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று கணினிகள் பல வகைகளில் உருவாக்கப்படுகின்றன. மேசைக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி, பணி நிலையக் கணினி என்று பல வகைகள் உள்ளன.
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை |
கணினியின் பயன்கள்:
நம் அன்றாட வாழ்வில் கணினி இன்றியமையாத சாதனமாக செயல்பட்டு வருகிறது. வணிகம், அறிவியல், கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு மற்றும் விண்வெளி போன்ற பல துறைகளிலும் கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த கணினி பயன்பட்டு வருகிறது.
அலுவலகங்களில் தேவையான முக்கிய விபரங்களைச் சேர்த்து வைக்கவும் பாதுகாக்கவும் கணினி பயன்படுகின்றது. இணையதளம் மூலம் நாம் அனைத்துத் துறை சார்ந்த செய்திகளை பெறுவதற்கும், அந்த செய்திகளை அழியாமல் சேமித்து வைப்பதற்கும் கணினி பயன்படுகிறது.
முடிவுரை:
கணினி மனித வாழ்க்கையின் உயிர் நாடியாக மாறிவிட்டது. மனித வாழ்க்கையிலும் அன்றாடத் தேவைகளிலும் மிக அவசியமான ஒன்றாக கணினி மாறியுள்ளது.
கணினி பற்றியும் அதன் இயக்கத்தை பற்றியும் அறிந்து அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி வரவேண்டும். அனைவரும் கணினியை பற்றி தெரிந்து கொண்டு வாழ்க்கையை வளமுடையதாக மாற்றுவோம்.
ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை |
கல்வியின் சிறப்பு கட்டுரை | Kalviyin Sirappu Katturai |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |