கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை | Karthigai Deepam Katturai in Tamil

கார்த்திகை தீபம் பற்றி கட்டுரை | Karthigai Deepam Essay in Tamil

கார்த்திகை தீபம்: நம் முன்னோர்களின் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் தமிழ் மக்களின் மங்கள பொருளாக கருதப்படுவது தீபம். தமிழர்கள் கொண்டாடப்படுகிற பல நல்ல விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. இந்த கார்த்திகை மாதம் அழிக்கும்  கடவுளான சிவனுக்கும், தமிழ் கடவுளான முருகனுக்கும், காக்கும் கடவுளான பெருமாள் கடவுளுக்கு உகந்த மாதமாக பக்த கோடிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த பதிவில் கார்த்திகை தீபம் பற்றிய சில குறிப்புகளை கட்டுரை வடிவில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபத் திருவிழா 2021 – Karthigai Festival Katturai in Tamil

karthigai deepam katturai in tamil

 • கார்த்திகை என்பது பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் தமிழர்கள் வீட்டிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் நாளாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கார்த்திகை 19.11.2021 அன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாட பட உள்ளது. இந்த திருநாளன்று அனைவருக்கும் பிடித்த அவல், பொறி செய்து கடவுளுக்கு படைப்பார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

karthigai deepam katturai in tamil

 • Karthigai Deepam: நெருப்புக்குரிய புனித ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன் மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரையில் இந்த தீபம் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபம் சிறப்பு – கார்த்திகை தீபம் பற்றி கட்டுரை:

Karthigai Deepam Essay in Tamil

 • இந்நன்னாளில் அனைவரின் வீடுகளிலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி பஞ்சாலோ அல்லது  திரியாலோ ஆன திரியை போட்டு விளக்கேற்றி பூஜை செய்து விட்டு அந்த விளக்குகளை வீட்டின் வாசல், நிலைப்பகுதி, ஜன்னல் ஆகிய பகுதிகளில் ஏற்றி வைப்பார்கள். இரவே பகலாக தெரியும் அளவிற்கு தெருக்கள் தோறும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்த தீப திருநாள் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது.

விழாவின் நோக்கம் – Karthigai Festival Katturai in Tamil:

கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை

 • Karthigai Deepam: எப்படி மெழுகுவர்த்தி தன்னை எரித்து கொண்டு ஒளியை தருவது போல மனிதர்களும் மற்றவர்களின் நலனுக்காக உயிரை தியாகம் செய்ய வேண்டும் என்பது இந்த கார்த்திகை விழாவின் நோக்கமாகும்.

கார்த்திகை நட்சத்திரம் – Karthigai Deepam Essay in Tamil:

கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை

 

 • கிழக்கு நோக்கி வீட்டு வாசலில் வாழைக்குருத்தை நட்டு வைத்து அதன் மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்கு உள்ளேயும், வெளியிலும் சிறிய அகல் விளக்குகளை ஏற்றி இல்லத்தை அலங்கரிப்பார்கள்.
 • கார்த்திகை அன்று வானில் ஏராளமான நட்சத்திரங்கள் தோன்றினாலும் அவற்றில் ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமாக இருக்கும். அதில் பிராகசமாக காணப்படும் ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திர கூட்டம் என்று அழைக்கப்படுகிறது.

நல்லது நடப்பதற்கு விளக்கை எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்? – Karthigai Deepam Essay in Tamil:

karthigai deepam essay in tamil

 • வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலகுவதற்கு தீபத்தை கிழக்கு நோக்கி ஏற்ற வேண்டும்.
 • கடன் தொல்லை நீங்குவதற்கு விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும்.
 • நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் விளக்கை வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது.
 • கார்த்திகை திருநாளன்று இல்லங்களில் 27 தீபங்கள் ஏற்றுவது நல்லது. அதுவும் வீடுகளில் குத்து விளக்குகளில் தீபம் ஏற்றினால் அதிக நல்லது நடக்கும். சிவனின் அருள் கிடைப்பதற்கு நெல் பொறியை வைத்து பூஜை செய்யலாம்.
 • நினைத்த செயல்கள் நடைபெறுவதற்கு விளக்கை ஒரு முகம் ஏற்றுவது நல்லது.
 • குடும்பம் சிறப்பாக இருப்பதற்கு விளக்கை இரு முகம் பார்த்து ஏற்ற வேண்டும்.
 • குழந்தை தோஷம் நீங்குவதற்கு மூன்று முகம் (திரி) பார்த்து ஏற்ற வேண்டும்.
 • செல்வம் பெருகுவதற்கு நான்கு முகம் (திரி) பார்த்து ஏற்ற வேண்டும்.
 • சகல நன்மைகளும் கிடைப்பதற்கு ஐந்து முகம் (திரி) பார்த்து ஏற்ற வேண்டும்.
 • அனைத்து சிறப்புகளும் உங்கள் இல்லங்களில் வளம் பெற கார்த்திகை திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.
கார்த்திகை தீபம் வரலாறு
கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information in tamil