கேடில் விழுச்செல்வம் கல்வி பற்றிய கட்டுரை

Advertisement

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை 

கல்வி என்பது ஒருவர் பெறும் அறிவு, திறன்கள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பெறுவதற்கான கருவியாகும். ஒரு தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியின் நோக்கம் ஒரு வெற்றிகரமான நிலையான சமுதாயத்தை உருவாக்குவதே. அதனால் இந்த பதிவில் கல்வியை பற்றிய கட்டுரையை பற்றி காண்போம்.

குறிப்பு சட்டகம்: Kedil Viluchelvam Kalvi

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை 

முன்னுரை
கல்வியின் அவசியம் 
கற்றோரின் பெருமை 
கற்றதன் பயன் 
முடியுரை 

முன்னுரை:

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”

என்கிறார் தெய்வப்புலவர், திருவள்ளுவர்.

ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விச் செல்வமே ஆகும். கல்வியை தவிர மற்ற செல்வ பொருட்கள் அனைத்தும் செல்வமே அல்ல என்பதே இக்குறள் கூறும் அர்த்தம்.

கல்வியே தவிர ஏனைய செல்வங்கள் அழியக்கூடியது. அவை நமக்குள் அறியாமையை விதைத்து விடும். ஆனால் கல்வி நமக்கு என்றும் அழிவில்லாத அறிவொளியை உண்டாக்கும்.எனவே நாம் அழிவில்லாத கல்வி செல்வத்தை பெற்றவராக திகழ வேண்டும்.

நான் விரும்பும் தலைவர் காமராசர்

கல்வியின் அவசியம்:

“கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
.”

என்னும் குறளில் பொய்யா மொழி புலவர், கண்ணுடையார் என்பர் கல்வி அறிவை உடையவர் என்றும், கல்வி அறிவு இல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர்கள் என்றும் கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் நல்ல எண்ணங்களும் உயர்வான குணமும் பெற்று வாழ நமக்கு கல்வி அவசியம். கல்வி தான் மற்ற அனைத்து உயிர்களிடம் இருந்தும் நம்மை வேறுபடுத்தி பகுத்தறிவு உடையவராக காட்டுகிறது. இதற்கு உதாரணமாக நாயனார்,

“”விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.”

என்று கல்வி அறிவு இல்லாதவரை விலங்கோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர்.

காமராஜரின் குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை

கற்றோரின் பெருமை:

கல்வி அறிவில் சிறந்தவர் சமூகத்தில் உயர்ந்தவராக மதிக்கப்படுவர். கல்வி அறிவு உள்ளவரிடம் உள்ள பொருட்செல்வங்கள் அழிந்தாலும் அவரால் மீண்டும் இழந்த செல்வத்தை அவரது அறிவை கொண்டு பெற முடியும்.

“மன்னனும் மாசறகற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்கு

தன்தேசம் அல்லாமற் சிறப்பில்லை. கற்றோர்க்குச் 

சென்றவிடமெல்லாம் சிறப்பு”

மன்னனையும் கற்றவனையும் ஒப்பிட்டு பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிறப்புடையவன். ஏனென்றால் மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்கிறார் ஒளவை.

மகளிர் தினம் கட்டுரை 2023 

கற்றதன் பயன்:

நாம் பெற்ற கல்வி நமக்கு மட்டும் பயன்படாமல் நம்மை சுற்றியுள்ள சமூகத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அறியாமையில் இருப்பவருக்கு, நாம் பெற்ற கல்வி ஒரு சிறு உதவியாக இருந்தால் கூட அது பெரிய பயனை தரும்.

“கற்க கசடறக்  கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.”

என்ற குறளின் படி நாம் கற்பதற்கு தகுதியான நூல்களை கற்கவேண்டும். இதன் பின்னர் கற்ற கல்வியின் தகுதிக்கு தக்க படி நடக்க வேண்டும்.

முடிவுரை:

உலகை மாற்றுவதற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி. அதனால்  நாம் அனைவருமே  கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்று மேன்மை அடைந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai

 

Advertisement